நான் உயிரோடு இருப்பதை பார்க்க வர்றாங்க !

0
லியோனி என்றால் ஜாலி. அவர் அடித்த ஜோக்குகள் வாட்ஸ் அப்பில் கொட்டிக் கொண்டே இருக்கும். கூடவே, ‘லியோனி விபத்தில் சிக்கினார்’ என்ற வதந்தியும்.
நான் உயிரோடு இருப்பதை பார்க்க வர்றாங்க !
அதைப் பற்றி யெல்லாம் கவலையே படாமல் பட்டி மன்றம், தி.மு.க மேடைகள் எனக் கலக்கி வருகிறார், லியோனி. அவரிடம் பேசினோம்.

சமீபத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்தீர்களே?

நான் எப்பவும் மாசம் ஒரு முறை கோபாலபுரம் வீட்டு க்குப் போய் தலைவரைப் பார்த்துட்டு வருவேன். கடைசியா போன போது, பேரன் அருள் நிதியின் மகனைப் பார்த்து தலைவர் சிரிச்சிக் கிட்டு இருந்தார். 

அதை, என் மனைவி செல்போனில் படம் எடுத்தார். தலைவர் பக்கத்துல உட்கார்ந்து பேசிட்டே இருந்தேன். கொஞ்ச நேரம் கழிச்சு, ‘கிளம்பு றேன்யா’னு சொன்னேன். 

அவர் கண்ணுல தண்ணி தேங்கி நின்னுச்சு. அவர், என் மேல எவ்ளோ பாசம் வெச்சிருக்கார்னு உணர முடிஞ்சது.
கருணாநிதி, முரசொலி அலுவல கத்துக்கு வந்து பார்வை யிட்டுப் போயிருக் கிறாரே?

அந்தச் செய்தியைக் கேட்ட வுடனே ரொம்ப சந்தோஷமா இருந்திச்சு. இப்படி அவர் நிச்சயம் மீண்டு எழுந்து வருவார்னு எதிர் பார்த்தேன். இப்போ தலைவர், பேக் டு ஃபார்ம். 

நான் அவரைப் பார்க்கும் போது அவர் கண்ணில் ஒரு ஏக்கம் இருந்திச்சு. மீண்டும் மேடை ஏறுவார். ‘என் உயிரினும் மேலான உடன் பிறப்புகளே...’னு அவருடைய குரலை மக்கள் சீக்கிரம் கேட்பாங்க .

தற்போதைய அரசியல் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?
எப்படி இருந்த தமிழ்நாடு இப்படி ஆயிடுச் சேன்னு தலையில அடிச்சுக்க வேண்டியதா இருக்கு. முதல்ல இந்த அரசு எப்படி உருவாச் சுங்கறதே பெரிய புதிர். 

ஜெயலலிதா இறந்த பிறகு, சசிகலாவை முதல் வராக்க உருவாக்கப் பட்டது தான் இந்த அமைச் சரவை. நல்லவர் மாதிரி சசிகலா குடும்ப த்திடம் நடிச்சு முதலமைச்சர் ஆயிட்டார் எடப்பாடி. 

இதை யெல்லாம், கனவுல கூட அவர் நினைச்சுப் பார்த் திருக்க மாட்டார். அதுக்குப் பிறகு என்னெல்லாம் நடந்தன என்பது எல்லா ருக்கும் தெரியும். தெரியாத ஒன்றைச் சொல்றேன்... 

பன்னீர் செல்வத்தை முதல் வராகும் வேலைகள் நடந்திட் டிருக்கு. ஓ.பி.எஸ் துணை முதல்வரா இருந்து ஒவ்வொரு எம்.எல்.ஏ.வா இழுத் திட்டிருக்கார். 

அதைத் தான் பி.ஜே.பி- யும் விரும்புது. அதுக்காகத் தான், அடிக்கடி தனியா டெல்லிக்குப் போய் மோடியை ஓ.பி.எஸ் பார்த்துட்டு வர்றார்.

ஜெ. இறப்புக்கு முன்; இறப்புக்குப் பின் அ.தி.மு.க?
தி.மு.க-வை எதிர்க்கக் கூடிய ஆற்றல் மிக்க வலுவான கட்சியா அப்போது அ.தி.மு.க  இருந்துச்சு. இப்போ, மெலிஞ்சு நோஞ்சானா போயிடுச்சு!

ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார்’ எனச் சொன்ன அமைச்சர் சீனிவாசன் உங்கள் ஊர்க்காரர். ‘அப்ப நான் பொய் சொன்னேன்’ என இப்போது சொல்கிறாரே?

அவர் ஆரம்ப காலத்து லேயே அப்படித் தாங்க. ஒரு கட்சி கூட்டணில இருந்தா ஆஹா ஓஹோனு பேசுவார். இல்லைனா, எவ்வளவு இழிவு படுத்திப் பேசணுமோ பேசுவார். 

ஒரு முறை ஜெயலலிதா மேடையை விட்டு கிளம்பிய பிறகும் கீழே விழுந்து கிடந்தார். ஏன்னு கேட்டா, ‘ஒரு நாள் அவங்க காலில் விழுந்தா, நாளைக்கு ஆயிரம் பேர் நம்ம காலில் விழு வாய்ங்க மாப்ள. 

நடிக்க கத்துக் கோங்கடா’னு சொன்னார். இது மாதிரி ஆரம்பத் திலிருந்து பார்க்குற துனால எனக்கு இது புதுசாத் தெரியலை. அதுவும் அந்தக் கட்சியில ஒவ்வொருத்தரும் ஒவ்வொண்ணு சொல்றாங்க. 

ஆனா, எடப்பாடி ஏதாவது கருத்து சொல்றாரா இல்லை. எல்லாமே பிளான் தான்.

இந்த ஆட்சி கலைக் கப்பட வேண்டியது’ என்று ஸ்டாலின் கூறியிரு க்கிறார். ஆனால், நம்பிக்கை வாக் கெடுப்புக்கு முழுமை யாக மீண்டும் களத்தில் இறங்க ஸ்டாலின் தயங்கு கிறாரா?
ஆளாளுக்கு ‘எங்களுக்கு ஸ்லீப்பர் செல் இருக் காங்க’னு சொல்லி, ஒரு புது வார்த்தையை அரசிய லுக்குக் கொண்டு வந்தது இந்த க்ரூப் தான். 

அதனால, எடப்பாடி அணியி லிருந்து டி.டி.வி பக்கம் எம்.எல்.ஏ போகவும் வாய்ப் பிருக்கு. டி.டி.வி பக்கமிருந்து எடப்பாடி அணிக்குப் போகவும் வாய்ப் பிருக்கு.

போன முறை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு மாதிரி நடந்து எடப்பாடி ஜெயிச் சிட்டார்னா அடுத்து நம்பிக்கை வாக்கெடுப்புக் கேட்கும் தார்மீக உரிமையை தி.மு.க இழந்திடும். 

எடப்பாடி ஆட்சியை டி.டி.வி அணியே கலைச்சி டுவாங்க. நாம ஏன் பண்ணணும்னு பொறுமையா என்ன நடக்குதுனு கூர்ந்து கவனிச்சிட்டு இருக்கார் ஸ்டாலின்.

அண்ணா கொள்கை, திராவிடம், சுய மரியாதை போன்ற கொள்கை களுடன் அ.தி.மு.க செயல் படுகிறதா?

எம்.ஜி.ஆர் காலத்தி லிருந்தே அது கொஞ்சம் கொஞ்சமா குறைஞ் சுட்டே வந்திடுச்சு. ஜெயலலிதா இருந்த போது பாபர் மசூதி விவகாரத்தில், அவரோட நடவடி க்கைகள்ல திராவிட சிந்தனை போயிடுச்சு. 

காரணம், ஒரு மதத்தைச் சார்ந்து திராவிட இயக்கங்கள் செயல்படாது. இப்போ, கொள்கைக ளெல்லாம் பூஜ்யம் ஆகி விட்டது. 
பன்னீரும் எடப்பாடியும் சேர்ந்த போது, ஜூனியர் விகடன்ல வெட்கக் கேடுனு விமர்சிச்சு எழுதியி ருந்தாங்க. அப்பவே தெரி யலையா? அ.தி.மு.க-வுல சுய மரியாதை செத்து பல வருஷமாச்சுனு. 

ஒரு கதை சொல்லட்டா. ஒரு தெரு. அந்த தெருவில ஒரு நாய் இருந்திச்சாம். பக்கத்து தெருவி லிருந்து இன்னொரு நாய் உள்ளே வந்துச்சாம். 

இந்தத் தெரு நாய் தன்னைவிட பலமானவனா, வலிமையில்லாத வனானு செக் பண்ண குரைச்சுப் பார்த்து தாம். பதிலுக்கு நான் ஒண்ணும் சளைச்சவன் இல்லைனு அதுவும் அது பங்குக்குக் குரைக்க ஆரம்பிச்ச தாம். 

இப்படி ரெண்டும் குரைச் சிட்டி ருக்கும் போது, பக்கத்துல சேட்டு வீட்டு கல்யா ணத்துல சாப்பிட்ட இலையை வந்து கொட்டு னாங்க. ஆக்ரோஷமா குரைச் சுட்டிருந்த நாய்கள் ரெண்டும், அமைதியா அந்த இலையைச் சாப்பிட ஆரம்பிச் சிடுச்சாம். 

இது தான் இன்றைய அரசியல் சூழல், உங்களுக்குக் கதை புரிஞ்சி ருக்கும்னு நினைக் கிறேன். இப்படி இருக்கவங் ககிட்ட சுய மரியாதையை எப்படி இருக்கும்?
அரசியலுக்கு ரஜினியின் வரவை ஏற்றுக்கொள்ளும் பி.ஜே.பி., கமலை எதிர்ப்பது ஏன்?

கமல் திராவிடம் பேசுற துனால பி.ஜே.பி-க்குப் பிடிக்கலை. அதனால, எதிர்க்கி றாங்க. ரஜினி ஆன்மீக வாதி என்பதால் பி.ஜே.பி-க்கு ஆதரவு தருவார், அப்போ நம்ம கொஞ்சம் தமிழ் நாட்டுல பலமா கிடலாம்னு நினைக் கிறாங்க. 

ஆனா, ரஜினி பி.ஜே.பி-க்கோ, அவங்க திட்டத் துக்கோ ஆதரவாக எந்தக் கருத்தும் சொல் லலையே. ஒரு வேளை அவர் அரசியலுக்கு வந்தாலும் பி.ஜே.பி-க்கு ஆதரவு தரமாட்டார் என நினைக் கிறேன்.

மெர்சல் பட வசனத்தை நீக்கச் சொல்லி பி.ஜே.பி- யினர் கடுமை யாக விமர்சனம் செய்கி றார்களே...?

விஜய், ‘கத்தி’ படத்துல கூட, காத்துல ஊழல் பண் றாங்கனு 2ஜி பத்திப் பேசினார். விவசாயிகள் சம்பந்த மான படத்துல இது ஏன்னு கேள்வி கேட்கலாம். 

ஆனா, படத்துல வர்றதைப் பொதுவா பேசுறாங் கன்னு தான் எடுத்துக் கணும். உண்மை யில், ‘கத்தி’ படம் வெளி வருவதில் பிரச்னை யான போது, 

சில விஷயங்களை சேர்த்தா தான் படம் வெளியாகும்’னு ஜெயலலிதா சொன்னதால் தான் இந்த வசனம் சேர்க்கப் பட்டுச்சு. தூய்மை இந்தியா திட்டத் துல கோயிலுக்குப் பதிலா கழிவறை கட்டணும்னு மோடியே சொன்னது தப்பில்லை. 

ஆனா, ‘மெர்சல்’ படத்துல கோயிலுக்குப் பதிலா ஆஸ்பத்திரி கட்டணும்னு சொன்னா தப்பா? நடிகர்க ளுக்கு இயக்குநர் களுக்கும் உரிமை இருக்கு. 
‘கபாலி’, ‘ஜோக்கர்’ படங் களில் மிகப்பெரிய அரசியல் பேசப் பட்டிருக்கு. அப்போ தெல்லாம் எதுவும் சொல்லாமல், இப்போ எதிர்க் கிறாங்க. 

இந்தப் படத்துல காட்சிகள் நீக்கப் பட்டால் இனி முற்போக்கு கருத்து க்களை சினிமாவில் சொல்லக் கூடாது என்கிற சூழல் ஏற்பட்டிடும். 

விஜய் ‘கத்தி’ படத்துல பேசுன வசனங்களுக்குப் பதிலா, அவர் ரசிகர்கள் கிட்ட விவசாயக் குடும்பங் களுக்கு உதவ சொல்லி ருக்கலாம். 

நீட் தேர்வுக்கு எதிரா ரசிகர் களைக் குரல் கொடுக்கச் சொல்லி போராட்டம் பண்ணி யிருந்தால் அவர்மேல இன்னும் மரியாதை அதிகமாகும். 

வசனத்தைக் கொஞ்சம் நடை முறைப் படுத்தினால் நல்லா இருக்குங்கிறது என் கருத்து. கருணாநிதி உடல் நிலை சரியாக இருந்திருந்தால் ஆட்சியை இந்நேரம் பிடித்திருப்பார் என்ற பேச்சு உள்ளதே இது உண்மையா இருக்கும்னு எனக்கு தோணலை.

இந்த அசாதாரண சூழல், ஏற்கெனவே இருந்தி ருக்கு. அப்போ, அடுத்த தேர்தலில் எப்படி ஜெயிக்க லாம்னு தான் யோசிச் சாங்க. ஸ்டாலினும் அப்படித் தான். 

இன்னைக்கு ஸ்டாலின் என்ன சொல்றாரோ அதைத் தான் கலைஞரும் சொல்லி யிருப்பார். ஆனா, அவருக் காக ஒரு சில கட்சிகள் ஆதரவு கொடுத்தி ருப்பாங்க அவ்வளவு தான்.
நீங்க இறந்து விட்டதாக அடிக்கடி செய்தி பரவு கிறதே...

முதல்முறை அதிர்ச்சியா இருந்திச்சு. அப்புறம் அதுவே பழகிடுச்சு. அப்படி செய்தி பரவுறதுக்குக் காரணம் என் மேடை பேச்சு தான். ஒரு முறை கலைஞர் பற்றிய வதந்தி பரவிச்சு. 

இப்படி வதந்தி வரவரத் தான் இன்னும் பல காலம் அவர் நல்லா இருப்பார்’னு பேசிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கினால், ‘நான் இறந்துட்டேன்’ னு எனக்கே செய்தி வருது.

ஒரு சிலர் வீட்டுக்கே வந்து ட்டாங்க. வெளியூ ருக்கோ, வெளி நாட்டுக்கோ போனா, நான் உயிரோட இருக் கேனானு பார்க்க நிறைய மக்கள் வர்றாங்க.

ஏன் ஒரு படத்து க்குப் பிறகு உங்களைப் பார்க்க முடிய வில்லை?

‘கங்கா கெளரி’ படத்து க்குப் பிறகு பல வாய்ப்புகள் வந்துச்சு. ‘சிவாஜி’ படத்துல ஸ்ரேயா வுக்கு அப்பா ரோல்ல நடிக்க ஷங்கர் சார் என்னை போன்ல கூப்பிட்டுப் பேசினார். அட்வான்ஸ் கூட வந்திடுச்சு. 
ஆனா, நான் தான் ‘நடிக்கல’னு சொல் லிட்டேன். ஒரு சீனுக்கு அன்னைக்கு முழுக்க அந்த காஸ்ட் யூமோட உட்கார்ந் திருக்கணும். ஒவ்வொரு ஷாட்டும் ஓகே ஆவதற்குள் போதும் போதும்னு ஆகிடும்.

நான், இன்ஸ்டன்ட் ரிப்ளை வரணும்னு எதிர் பார்ப்பேன். ஆனா, அது சினிமாவுல லேட் ஆகும். 

இப்போ வடிவேலு போன் பண்ணி ‘ஒரு படம் பண்ணலாம் ’னு சொல்லி யிருக்காரு. அவருக்கு அப்பாவா நடிக்க ணும்னு சொன்னார். அவருக்காக நடிக்க ஒத்துக் கிட்டேன்.”
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)