பிச்சை எடுத்தவரை வழக்கறிஞர் ஆக்கிய ஜெயலலிதா !





பிச்சை எடுத்தவரை வழக்கறிஞர் ஆக்கிய ஜெயலலிதா !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
ஜெயலலிதா கொண்டு வந்த நலத்திட்டங்கள் பற்றி பலரும் அறிவர். ஆனால், தனிப்பட்ட முறையில் அவர் பிரியம் காட்டிய எளிய மனிதர்கள் பற்றி பரவலாக அறியப்பட வில்லை. 
பிச்சை எடுத்தவரை வழக்கறிஞர் ஆக்கிய ஜெயலலிதா
அப்படி ஒருவர் தான், நாகரத்னா!கர்நாடகா மாநிலம் மைசூரைச் சேர்ந்த சிறுமி நாகரத்னா, நகர வீதிகளில் பிச்சை எடுத்து பெற்றோ ருடன் வாழ்ந்து வந்தார். 

ஆனால், அவருக்கு படிக்க ஆசை. பிச்சை எடுத்துக் கொண்டே படித்தார். 

இருக்க வீடு கூட இல்லாத நிலையிலும், தெரு விளக்கு வெளிச்சத்தில் படித்து, 2001-ம் ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார் நாகரத்னா. 

அதற்கு மேல் படிக்க இயலாத அவரின் நிலைமை, தினமணி நாளிதழில் செய்தியாக வெளியானது.

இந்தச் செய்தியை அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா படித்து அறிந்ததும், மனம் நெகிழ்ந்து, 

உடனடியாக கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தியை அழைத்து, அது பற்றி விசாரித்தார். 

மைசூருக்கு விரைந்த புகழேந்தி, அங்கு நாகரத்தினாவைத் தேடிக் கண்டு பிடித்தார். 

புகழேந்தி என்னைச் சந்தித்து, 'உனக்கு ஜெயலலிதாவைத் தெரியுமா?' என்று கேட்டார். 'ம்... தெரியுமே. 
தமிழகத்தின் முதல்வர்' என்று சொன்னேன். அதற்கு அவர், 'ஜெயலலிதா அம்மா உன்னைப் பார்க்க விரும்புகிறார். உடனே புறப்படு' என்றார். எனக்கு ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது. 

மறுநாள் நாங்கள் முதல்வரைச் சந்தித்தோம் என்று சொல்லும் போது நாகரத்னாவுக்கு, முதல்வர் ஜெயலலிதா வைச் சந்திக்க வாய்ப்பு அமைந்த போது, அவரிடம் தன் கஷ்டங்களை எல்லாம் தெரிவித்தார். 

அவரிடம் ஒரு லட்சத்துக்கான காசோலை யைக் கொடுத்த ஜெயலலிதா, அவரைப் படிப்பைத் தொடரச் சொல்லி வாழ்த்தினார். 

மைசூரில் உள்ள மஹாஜனாஸ் சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி. படிப்பை முடித்து, தற்போது பெங்களூருவில் உள்ள சிவில் கோர்ட்டில் வழக்குரைஞராகப் பணியாற்றுகிறார் நாகரத்னா.

கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி:
நாகரத்னாவுக்கு அம்மா உதவி செய்தது உண்மை தான். 2001-ம் ஆண்டு அம்மா தமிழக முதல்வராக பதவி ஏற்றிருந்த தருணம் அது. 

அன்று அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்தது. உடனே போயஸ் கார்டனுக்குச் சென்றேன். 'தினமணி படித்தீர்களா?' என்று கேட்டார். 

இல்லை, நீங்கள் கூப்பிட்டதும் உடனே புறப்பட்டு வந்து விட்டேன்' என்றேன். சரி, மைசூரில் இருக்கும் ஒரு பெண் பிச்சை எடுத்துக் கொண்டே 10-ம் வகுப்புத் தேர்வில் டிஸ்டிங்ஷனில் தேர்வாகி யுள்ளார். 

அதை உறுதிப்படுத்தி, அவளை உடனே இங்கே அழைத்து வாருங்கள்' என்றார். மைசூர் சென்று நாகரத்னாவைப் பற்றி விசாரித்தேன். 

நாகரத்னாவைப் பற்றிய செய்தியைப் பார்த்து, அங்குள்ள ஒரு கிருத்துவ தொண்டு நிறுவனம் அவரை அழைத்துச் சென்றி ருப்பதை தெரிந்து கொண்டு அங்கு சென்றேன்.

நாகரத்னாவைப் பார்த்து விபரத்தைச் சொல்லி, அம்மாவிடம் அழைத்து வந்தேன். நாகரத்னாவைப் பாராட்டிய அம்மா, நீ மேற்கொண்டு என்ன படிக்கப் போகிறாய்? என்று கேட்டார். 

நான் போலீஸ் ஆஃபீஸர் ஆக விரும்புகிறேன்' என்றார். 'ஏன்?' என அம்மா கேட்க, 'நான் தெரு விளக்கில் தான் படித்தேன். 

அப்படிப் படித்துக் கொண்டிருந்த போது, ஒருநாள் போலீஸ் என்னை அடித்து விட்டது' என்று சொல்லி தன் கால் தழும்புகளை அம்மாவிடம் காட்டினார். 
'சரி, என்ன உதவி வேண்டும் என்றாலும் கேள்' என்று சொல்லி, ஒரு லட்சத்துக்கான காசோலையை நாகரத்னா விடம் தந்தார் அம்மா. 

அப்போது ஒரு லட்சம் என்பது பெரிய தொகை. நான் நாகரத்னாவின் பெயரில் அதை வங்கியில் டெபாசிட் செய்து ரசீதை அம்மாவிடம் கொடுத்து விட்டேன்.
Tags: