அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் அருண்விஜய் வில்லனாக நடித்த பின்னரே அவர் பிரபல நடிகராக மாறிவிட்டார் என்பதை பார்த்தோம். இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தில் ஒரு பிரபலமான நடிகரே
வில்லனாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கோலிவுட் திரையுலகின் மிகவும் பிசியான நடிகர்களில் ஒருவரான விஜய்சேதுபதிதான் அஜித்தின் 57வது படத்தின் வில்லன் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தின் வில்லன் கேரக்டர் அஜித் கேரக்டருக்கு சமமாக இருப்பதாலும், அஜித்துடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் நிறைவேறுவதாலும் இந்த படத்தில் நடிக்க விஜய்சேதுபதி ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்த முறையான அறிவிப்பு தேர்தல் முடிந்தவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது., இந்த தகவல் உண்மையானால் இந்த படம் வேற லெவலுக்கு இருக்கும் என்று கோலிவுட்டில் கூறப்படுகிறது.