உடல் எடையை குறைக்கும் 9 வைட்டமின்கள் ! - EThanthi

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

உடல் எடையை குறைக்கும் 9 வைட்டமின்கள் !

உடல் எடையை குறைக்க, கடுமையான உடல் எடை குறையும் முறையை கையாள வேண்டும் (To lose weight, you need to deal with severe weight loss.).  அதற்காக தீவிரமான உடற் பயிற்சியையும், ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் உண்ண வேண்டும்.
உடல் எடையை குறைக்கும் வைட்டமின்கள்
இவைகள் மட்டும் போதுமா? (Are these alone enough?) வேறு வழிகள் ஒன்றும் இல்லையா என்று கேட்கலாம். இருக்கிறது! 

உடல் எடையை குறைத்து, ஆற்றல் திறனை அதிகரித்து, மன அழுத்தத்தை குறைத்து, கொழுப்பை எரித்து, செரிமானத்தை சீராக்க என பல உதவிகளைப் புரிகிறது வைட்டமின்கள். 

ஆனால் அதற்காக உடற் பயிற்சியையும், ஊட்டச் சத்துள்ள உணவுகளையும் விட்டு விட வேண்டும் என்றில்லை.
கால்சியம் குறைபாடு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள?
அதனுடன் சேர்த்து முக்கிய வைட்டமின்களையும் சேர்த்துக் கொண்டால், எடையை குறைக்க முயலும் போது சுலபமாக இருக்கும். 

இதோ உடல் எடையை குறைக்க உதவும் 9 வைட்டமின்கள் பற்றிய ஒரு பார்வை. இதில் ஒரு சில கனிமங்களும் அடங்கும் (It also contains a few minerals.).

வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்
வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்
வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் என்பது 8 வகை வைட்டமின் பி-க்களை கொண்டுள்ளதாகும். இது நம் உடலில் பல வகைகளில் வேலை செய்கிறது. உடல் எடையை குறைக்க, அவை தீவிரமாக உதவி புரிகிறது (They are actively helping.).

அதற்கு காரணம் உடல் கார்போ ஹைட்ரேட்டை ஆற்றல் திறனாக மாற்ற இது உதவி புரிகிறது. மேலும் ஈரலில் உள்ள நச்சுக்களை நீக்கி, செரிமானத்திற்கு துணை புரிந்து கொழுப்பை குறைக்கவும் இது உதவும். 

அதிகமாக உண்ணுவதால் ஏற்படும் மன அழுத்தத்தை நீக்கவும் இது துணை நிற்கும். ஆகவே கீரைகளை அதிகம் உட்கொண்டால், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் குறைபாட்டில் இருந்து விடுபடலாம்.

வைட்டமின் டி
வைட்டமின் டி
உடல் எடை குறைப்பு ஆய்வுகளில் பங்கேற்றவர்களில் ஆறுதல் மருந்து எடுத்துக் கொண்டவர் களை விட, வைட்டமின் டி கொண்ட உணவுகளை எடுத்து கொண்டவர்கள் தான் அதிக எடையை இழந்தனர். 

அதே போல் வைட்டமின் டி-யை குறைவாக எடுத்தவர்களை விட அதிகமாக எடுத்தவர்கள் தான் அதிக அளவில் எடை குறைந்துள்ளனர்.
வைட்டமின் டி கால்சிய ஈர்ப்பை அதிகரிப்பதால், அது உடல் எடை குறைப்புக்கு பெரிதும் உதவுகிறது. வைட்டமின் டி சத்தானது மீன், காளான் போன்றவற்றில் அதிகம் நிறைந்துள்ளது.

வைட்டமின் சி
வைட்டமின் சி
உடற்பயிற்சி செய்வதால் உடல் எடை குறையும். அதனுடன் சேர்ந்து வைட்டமின் சி-யும் அதற்கு துணை புரியும். அதனால் ஆற்றல் திறன் அதிகரித்து, கலோரிகள் எரிக்க உதவும் (So increasing energy efficiency and helping to burn calories). 

அதே சமயம் வைட்டமின் சி-யை அதிகமாக எடுத்துக் கொண்டால், அது உடல் எடை குறைய உதவி புரியாது என்று விஞ்ஞான பூர்வமான ஆதாரங்கள் கூறுகிறது.
இருப்பினும் வைட்டமின் சி குறைபாடு இருந்தால், அது மெட்டபாலிச செயல்பாட்டை குறைத்து, உடல் எடையை அதிகரித்து விடும். சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளன.

கால்சியம்
கால்சியம்
கால்சியத்திற்கும் உடல் எடை குறைவுக்கும் சம்பந்தம் உள்ளது என்று ஆய்வுகள் உறுதிபடுத்தி யுள்ளது.

இதில் சில முரண்பாடுகள் இருந்த போதிலும், கால்சியம் மற்றும் கால்சியம் அடங்கிய பொருட்கள் உடல் எடை குறைப்புக்கு பெரிதும் உதவுகிறது என்று பல ஆய்வுகள் கூறுகிறது.

மேலும் கொழுப்புகளை உடைத்து அதை சேமித்து வைப்பதில் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர். 

கால்சியம் சத்தைப் பெற பால் பொருட்களை அதிகம் உட்கொண்டால், கால்சியம் குறைபாடு நீங்கி விடும் (Calcium deficiency will go away.). 

குரோமியம்
குரோமியம்
உடலில் உள்ள கொழுப்புகள் மற்றும் கார்போ ஹைட்ரேட்டுக்களை செயல் நிறுத்த உதவி புரிவதால், உடல் எடை குறைப்புக்கு குரோமியம் கண்டிப்பாக தேவைப் படுகிறது. 
மேலும் அது இன்சுலினுடன் சேர்ந்து குளுக்கோஸ் மற்றும் ஆற்றல் திறன் உற்பத்திக்கு உதவி புரிகிறது. இத்தகைய குரோமியம் சோளத்தில் அதிகம் நிறைந்துள்ளது.

கோலின்
கோலின்
கோலின் என்பது ஒரு வைட்டமின் கிடையாது. ஆனால் இந்த அதிமுக்கிய ஊட்டச்சத்து வைட்டமின் பி-யுடன் சேர்க்க ப்பட்டிருக்கும்.

கொழுப்புகளை செயலற்றதாக மாற்ற இது உதவுவதால் உடல் எடை குறைவதற்கும் இது உதவும்.  இது இல்லை யென்றால், கல்லீரலில் கொழுப்புகள் தேங்கி, மெட்டபாலிச செயல்பாடு தடைபட்டு போகும்.

சோயாவில் கோலின் என்னும் சத்தானது அதிகம் நிறைந்துள்ளதால், அதனை உட்கொள்வது நல்லது.

ஜிங்க்
ஜிங்க்
தைராய்டு மற்றும் இன்சுலின் சீரமைப்பு திறம்பட செயல்படுவதற்கு ஜிங்க் அவசியமான ஒன்றாக விளங்குகிறது. 
இவை இரண்டில் ஏதாவது ஒன்று சரிவர செயல்படவில்லை என்றால் கூட போதும், மெட்டபாலிச செயல்பாடு வெகுவாக தடைபட்டு விடும். அதனால் ஜிங்க் குறைபாட்டை தவிர்த்தால், தேவையற்ற உடல் எடையை குறைக்கலாம் (Can reduce unwanted body weight.).