அதிக ஆபத்தை ஏற்படுத்தும் தலைவலியும் அதன் வகைகளும் தெரியுமா? - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016அதிக ஆபத்தை ஏற்படுத்தும் தலைவலியும் அதன் வகைகளும் தெரியுமா?

Subscribe Via Email

லைக் பண்ணுங்க... "
தலைவலி என்பது அனைவருக்குமே ஒரு பொதுவான பிரச்சினை ஆகும். இது ஒரு ரசிக்கக் கூடிய ஒரு பிரச்சனை அல்ல.  
அதிக ஆபத்தை ஏற்படுத்தும் தலைவலி தெரியுமா?
இந்த தலைவலியானது ஏற்பட்டவுடன் நம்மையே நாம் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியாத உணர்வுகளை ஏற்படுத்தும்.  மேலும் இந்த தலைவலியானது ஒவ்வொருவருக்கும் அடிக்கடி ஏற்படும் ஒரு தலைவலியாக உள்ளது. 

தூக்கமின்மை, உணவு உண்ணாமை, மன அழுத்தம் போன்ற பல விஷயங்கள் இந்த தலைவலி தோன்றுவதற்கு காரணமாக உள்ளது.  பலருக்கு தொடர்ச்சியான தலைவலி இருப்பது சில ஆரோக்கிய குறைபாடு காரணமாக இருக்கலாம்.  

இதனை ஆரம்ப நிலையிலேயே கவனித்து மருத்துவரை அணுகி சரி செய்வது பல பிரச்சினைகளில் இருந்து உங்களை பாதுகாக்கும்.  இந்த தலைவலியில் பல வகைகள் உள்ளது. 

அது ஒவ்வொன்றும் உங்களுக்கு ஒவ்வொரு விதமான பாதிப்பினை ஏற்படுத்தும். 

டென்ஷனான தலைவலி. 
டென்ஷனான தலைவலி.
உங்கள் நெற்றியில் உள்ள தசைகளின் சுருக்கம் காரணமாக அனுபவிக்கும் தலைவலி இது.  இந்த தலைவலியானது மிகவும் பொதுவான வகையாகும். 

இதனால் உங்களுடைய நெற்றி, உச்சந்தலை மற்றும் கழுத்து, தோள்பட்டை தசைகள் முழுவதும் மந்தமான வலியை நீங்கள் உணரலாம்.  
இந்த தலைவலியானது மன அழுத்தம்,  சத்தம் மற்றும் பிரகாசமான நீல திரையை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டே இருப்பதால் இந்த தலைவலி தூண்டப்படுகிறது. சில நேரங்களில் அதிக நீர் இழப்பானது இதனை தூண்டுகிறது. 

கொத்து தலைவலி. 
கொத்து தலைவலி.
இந்த தலைவலியானது கண்களுக்குப் பின்னால் மட்டுமே உணரக்கூடிய ஒரு கடுமையான மற்றும் தொடர்ச்சியான தலைவலி.  

இதனால் நோயாளிகள் தீவிரமான எரிச்சல், துளையிடும் வலி, கண்களில் நீர் மற்றும் ஒளியின் தீவிர உணர் திறன் ஆகியவற்றை அனுபவிக்கின்றனர். இந்த தலைவலியானது திடீரென தோன்றுகிறது. 

மேலும் இது 15 நிமிடங்கள் முதல் 3 மணி நேரம் வரை நீடிக்கும்.  மேலும் இந்த தலைவலி குறிப்பாக தினமும் ஒரே நேரத்தில் நடைபெறுகின்றது.  இந்த தலைவலியின் மூலம் சுமார் எட்டு முறை ஒரு நாளில் ஒரு நபர் பாதிக்கப்படுகிறார்.  
இது அதிகப்படியான புகைப்பிடித்தல் ஆல்கஹால் உட்கொள்ளுதல் போன்ற காரணங்களினால் இது தூண்டப்படுகிறது. 

ஒற்றை தலைவலி.. 
ஒற்றை தலைவலி..
இந்த தலைவலி ஒரு பக்கத்தில் மட்டுமே உணரப்பட்டு பல நாட்கள் நீடிக்கும். இந்த தலைவலியால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் ஒலி மற்றும் ஒளி வாசனை, அதிக உணர்திறன் போன்ற பிரச்சினைகளை அனுபவிக்கிறார். 

சில சந்தர்ப்பங்களில் இது குமட்டல் மற்றும் வாந்தியுடன் கூட ஏற்படுகிறது. இது பரம்பரை நோய் என்றும் கூறலாம் அல்லது சில நரம்பு நிலைகளுடன் இணைக்கப்படலாம். 

சைனஸ் தலைவலி. 
சைனஸ் தலைவலி.
நோய் தொற்று அல்லது ஒவ்வாமை போன்ற பிரச்சினைகளால் இது சைனஸ் வீக்கத்திற்கு வழிவகுக்கிறது. இது பெரும்பாலும் சைனசைட்டிஸ் தலைவலிக்கு வழிவகுக்கிறது.  

இது ஒட்டு மொத்த இயக்கத்தையும் பாதிக்கிறது.  இந்த தலைவலி இருக்கும் போது பச்சை அல்லது மஞ்சள் நாசி வெளியேற்றம் ஏற்படுகிறது. 
இதற்கு பொதுவான அறிகுறிகள் கண்கள் கன்னங்கள் மற்றும் நெற்றியை சுற்றி தொடர்ச்சியான வலி ஆகியவை இந்த சைனஸ் தலைவலிக்கான அறிகுறிகளாகும். 

ஹார்மோன் தலைவலி. 
ஹார்மோன் தலைவலி.
மாதவிடாய் மற்றும் அண்டவிடுப்பின் முன் அல்லது சரியான நேரத்தில் இந்த வகையான தலைவலியை பெண்கள் அதிக அளவில் அனுபவிக்கின்றனர்.

இதற்கு காரணம் மாதவிடாய் பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் மற்றும் கர்ப்பம் காரணமாக ஏற்படுகிறது.  ஹார்மோனின் ஏற்ற இறக்கங்கள் ஹார்மோன் தலைவலிக்கு மிக முக்கிய காரணமாகும். 

காஃபின் தலைவலி. 
காஃபின் தலைவலி.
பெயரில் உள்ளது போலவே இந்த வகையான தலைவலி அதிகப்படியாக காபி உட்கொள்வதால் தூண்டப்படுகிறது.  அதாவது காபியில் உள்ள காபின் என்ற ஒரு பொருள் இதை தூண்டுகிறது.  
இது நம்முடைய மூளையில் ரத்த ஓட்டத்தையும் பாதித்து தலைவலியை ஏற்படுத்துகிறது.  காஃபின் அளவை மிதமாக உட்கொள்வது அனைவருக்கும் நல்லது.  250 மில்லி காபியே ஒவ்வொருவருக்கும் போதுமானதாக இருக்கும். 

உயர் ரத்த அழுத்த தலைவலி. 
உயர் ரத்த அழுத்த தலைவலி.
அதிக இரத்த அழுத்தமானது அனைவருக்கும் அதிக அளவு தலைவலியைத் தரும்.  ரத்த அழுத்தமானது குறிப்பிட்ட அளவை விட அதிகமாக இருக்கும் பொழுது இந்த தலைவலி தூண்டப்படுகிறது.  

இது உண்மையிலேயே மிகவும் ஒரு ஆபத்தான அறிகுறி ஆகும்.  ரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் தலையின் இருபுறமும் துடிக்கும் வலியை உணர முடியும்.  

இது பார்வை, உணர்வின்மை, மூச்சுத்திணறல், மார்பு வலி போன்ற மாற்றங்களை உண்டாக்கும்.
அதிக ஆபத்தை ஏற்படுத்தும் தலைவலியும் அதன் வகைகளும் தெரியுமா? அதிக ஆபத்தை ஏற்படுத்தும் தலைவலியும் அதன் வகைகளும் தெரியுமா? Reviewed by Fakrudeen Ali Ahamed on 9/22/2020 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚