உணவுக்குழாய் புற்றுநோய்க்கான சிகிச்சைகள் என்னென்ன?





உணவுக்குழாய் புற்றுநோய்க்கான சிகிச்சைகள் என்னென்ன?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
பேரியம் மாவைக் குடிக்கச் செய்து எக்ஸ்-ரே எடுப்பது பழைய முறை. இப்போது ‘ஈஸோபேஜியல் கேஸ்ட்ரோ டியோடினோஸ்கோப்பி’ (oesophago-gastro - duodenoscopy) மூலம் உணவுக் குழாயில் உள்ள புற்றுநோயை மருத்துவரே நேரடியாகப் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும்.
உணவுக்குழாய் புற்றுநோய்க்கான சிகிச்சை

மேலும், இந்தப் பரிசோதனை செய்யப்படும் போதே புற்றுள்ள பகுதியி லிருந்து சிறு பகுதியை வெட்டி எடுத்துத் ‘திசு ஆய்வு’ (Biopsy) செய்து, நோயை உறுதி செய்வது இந்த நோய்க்கணிப்பில் உள்ள நடைமுறை.
என்னென்ன சிகிச்சைகள்?

உணவுக் குழாய்  புற்றுநோய்க்கு அதன் தன்மை, வகை, பரவியுள்ள நிலைமை ஆகியவற்றைப் பொறுத்து அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, மருத்துவ சிகிச்சை என மூன்று வழிகளில் சிகிச்சை அளிக்கப் படுகிறது. 

ஆரம்ப நிலையில் உள்ள உணவுக் குழாய் புற்றுநோயை குணப்படுத்துவது எளிது.

1. அறுவை சிகிச்சை:

உணவுக் குழாயில் புற்று பாதித்துள்ள பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விட்டு, பெருங்குடல் பகுதியி லிருந்து 

சிறு பகுதியை எடுத்து உணவுக் குழலுக்கு மாற்றாகப் பொருத்தி விடுவது ஒரு வழி. இந்த சிகிச்சையை நோயின் ஆரம்ப நிலையில் மட்டுமே செய்ய இயலும். 

புற்று முற்றிய நிலையில் இதை மேற்கொள்ள இயலாது. அப்போது ஒரு மாற்று வழி செய்யப்படும். 
அதாவது, நோயாளி உணவு உட்கொள்ள மட்டும் வழி செய்வதற்காக, வாய் வழியாக ஒரு செயற்கைக் குழாயை உணவுக் குழலுக்குள் செலுத்தி, அதைப் புற்று உள்ள பகுதியைக் கடக்கச் செய்து, இரைப்பைக்குள் பொருத்தி விடுவார்கள். 

இதன் மூலம் நோயாளி உணவைச் செலுத்திக் கொள்ளலாம். இது ஒரு தற்காலிக ஏற்பாடுதானே தவிர நிரந்தரத் தீர்வல்ல.

2.கதிர்வீச்சு சிகிச்சை (Radiotherapy):
புற்றுநோய்க்கான சிகிச்சை

இந்த நோய் வந்துள்ள பெரும்பாலான நோயாளிகளுக்கு கதிர்வீச்சு சிகிச்சை தான் தரப்படுகிறது. 

‘லீனியர் ஆக்ஸிலேட்டர்’ அல்லது கோபால்ட் கருவிகள் மூலம் எக்ஸ் கதிர்களை உணவுக் குழலுக்குச் செலுத்தும் போது புற்றுநோய்த் திசுக்கள் சுருங்கி நோய் குணமாகிறது.
3. மருத்துவ சிகிச்சை :

ரத்தம் மூலமும் நிணநீர் மூலமும் உடலில் மற்ற இடங்களில் பரவியுள்ள புற்று நோய்க்கு மருத்துவ சிகிச்சை தரப்படும்.
Tags: