உலகமே திரும்பி பார்த்த இடி அமீன் என்ற சர்வாதிகாரி !





உலகமே திரும்பி பார்த்த இடி அமீன் என்ற சர்வாதிகாரி !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
பல சைக்கோ கொலைகளை வரலாற்றில் இந்த உலகம் கண்டிருக்கிறது. அது தனிப்பட்ட மனிதனாக இருக்கும் போது, குறிப்பிட்ட அளவு மனிதர்கள் மட்டுமே பாதிக்கப் பட்டிருக்கலாம். 
உலகமே திரும்பி பார்த்த இடிஆமீன்
ஆனால் அதுவே ஆட்சியாளராக இருந்து விட்டால் அந்த நாடும். நாட்டு மக்களும் படும் இன்னல்கள் அவருக்கு பிறகும் தொடர்கதையாவது தவிர்க்க முடியாது. 

அப்படிப்பட்ட ஒரு உலகமகா சர்வாதிகாரியை பற்றியே இந்த செய்தியில் காணபோகிறோம் . 

இடிஆமீன் இந்த பெயரை கேள்விப்படாதோர் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன். ஹிட்லர் மற்றும் ஸ்டாலின் போன்ற கொடூரமான சைக்கோ கொலைகாரர்கள் வரிசையில் இவர் ஒரு வித்தியாசமான சைக்கோ. 
ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்த ஒரு வளம் நிறைந்த நாடு உகண்டா. ஆப்பிரிக்காவின் நல்முத்து என்று அழைக்கப்படும் நாடானா உகாண்டாவை உலகளவில் கொண்டு சென்றது இந்தியர்கள் தான்.. 

இந்தியர்கள் இல்லை என்றால் இன்றைய உகாண்டாவே இல்லை என்றே சொல்லலாம். அந்தளவிற்கு இந்தியர்களோடு நீண்ட உறவினைக் கொண்டுள்ளது உகாண்டா. 

1946 ல் தனுடைய 21 வது வயதில் சாதாரன சமையல்காரராக ரானுவத்தில் சேர்ந்த இடி அமீன் பின்னர் படிப்படியாக பதவி உயர்வு பெற்று ராணுவ தளபதியாகும் அளவிற்கு முக்கிய காரணம் அவருடைய 6 அடி 4 அங்குலம் உயரத்தையே கூறலாம். 
உலகமே திரும்பி பார்த்த சர்வாதிகாரி !
இந்த உயரத்தாலே குத்து சண்டை வீரராகி அதை வைத்தே ராணுவத்தில் உயர்ந்தவர் இடி அமீன்.  1971 ல் அதிபர் மில்டன் ஒபேடாவை சூழ்ச்சியால் அகற்றி அதிபரானா். 

ஆட்சியைக் கைப்பற்றியதும் பழைய அதிபரின் ராணுவ தலைவர்களால் தனக்கு தீங்கு வரலாம் என்று நினைத்தார். ராணுவ தலைவர்களுக்கும் மற்றும் முக்கிய அமைச்சர்களுக்கும் விருந்து ஏற்பாடு செய்து அதில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தர விட்டார். 

இதில் கிட்டத்தட்ட 36 பேர் கலந்து கொண்டனர். விருந்து நடந்து கொண்டிருந்த போது அந்த அறையின் கதவுகள் அடைக்கப்பட்டன. 

அவனால் ஏற்பாடு செய்யப்பட்ட குண்டர்கள் திடீரென உள்ளே நுழைந்து அத்தனை பேரையும் குத்தி கொலை செய்தனர். இதனை கண்டித்து அறிக்கை விட்ட ராணுவ தளபதி ஜெனரல் சுலைமான் ஹூசைன் திரும்பி வரவேயில்லை. 
அவரை சாக்குப்பையில் அடைத்து அவனது அடியாட்கள் தடியால் அடித்தே கொன்றனர். பின் சுலைமானின் தலையை வெட்டி எடுத்து தனது அறையில் உள்ள குளிர்சாதன பெட்டியில் வைத்து விட்டார். 

ஒருமுறை உகண்டா நாட்டு முக்கிய பிரமுகர்கள், கலைஞர்கள், அயல்நாட்டு தூதுவர்களை அழைத்து விருந்து வைத்த இடி அமீன், நீங்கள் எது கேட்டாலும் கிடைக்கும். 

மனித இறைச்சி வேண்டும் என்றாலும்… கேளுங்கள். என்று கூறி விட்டு உள்ளே சென்று சுலைமானின் தலையை எடுத்துக் காட்ட அனைவரும் மிரண்டு போனார்கள். 

அதோடு விடாமல் அந்த தலையில் சில துண்டுகளை வெட்டி ஊறுகாய் தொட்டு சாப்பிட்டதைப் பார்த்ததும் இவரூக்கு கிறுக்கு பிடித்து விட்டது என்றே நினைத்தனர். 
தளபதி ஜெனரல் சுலைமான் ஹூசைன்
இடி அமீன் ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த 'ஹென்றி கெயெம்பா' எழுதிய A State of blood. The inside the story of Idi Amin. என்ற புத்தகத்தில் இவ்வாறு கூறுகிறார். 

இடி அமீன் சடலங்களுடன் தனியாக இருக்க விரும்புவதாக பலமுறை உத்திர விட்டதாகக் கூறுகிறார். 1974 ல் கொல்லப்பட்ட காபந்து ராணுவ தளபதி பிரிகேடியர் 'சார்லஸ் அர்பே' யின் உடலுடன் தனியாக இருந்திருக்கிறார். 

எதிரிகளின் ரத்தத்தை குடிக்கும் 'காக்வா' இனத்தைச் சேர்ந்தவராதலால் அமீன் அதைச் செய்திருக்கலாம் என்கிறார். மேலும் 1975 ல் சுற்றுலா சென்ற தன் அனுபவங்களைத் குறிப்பிடும் போது, குரங்கு மாமிசம் நன்றாக இருந்தது.
மனித மாமிசம் நன்றாக இல்லை என்றும் .மேலும் ஒரு முறை சிறுத்தையின் இறைச்சியை விட மனித இறைச்சியில் உப்பு அதிகம் என்றும் கூறியிருக்கிறார். 

உச்சகட்டமாக தனது வீரர்களிடம், போரின் போது காயம்பட்ட சக வீரர்களை உண்டு பசியாறலாம் என்றும் கூறியிருக்கிறார். 

உகண்டா மருத்துவ மனைகளில் பிணவறையிலிருந்த உடல்களிலிருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், மூக்கு , உதடுகள் மற்றும் அந்தரங்க உறுப்புகள் காணாமல் போவது அங்கு பணிபுரிந்த அனைவருக்கும் தெரிந்திருக்கிறது என்கிறார். 

ஒரு முறை ஒரு ஊரின் விழாவில் கலந்து கொண்டார். அந்த ஊரில் நான்ஸிரி என்ற குத்துச்சண்டை வீராங்கனை இருப்பதைக் கேள்விப்பட்டு தன்னுடன் போட்டியிட கட்டளை பிறப்பித்தார்.. 
பெண்ணின் பிறப்புறுப்பைச் சிதைத்துக் கொன்ற இடிஆமீன்
அவருடைய அடியாட்கள் முதலிலேயே அப்பெண்ணிடம் சென்று போட்டியில் தோற்று விடும்படி மிரட்டினர். 

அப்பெண்ணும் போட்டியின் போது தோற்று விடுவது போல் நடித்தாலும், சண்டையின் போது அவள் அடித்த அடியில் வலி தாங்காமல் அப்பெண்ணை கடத்திச் சென்று கொடூரமாக அடித்து, அப்பெண்ணின் பிறப்புறுப்பைச் சிதைத்துக் கொன்றார். 

மேலும் பெண்கள் விசயத்தில் அவர் ஒரு பைத்தியம் போலவே நடந்து கொண்டார். பல இளம் பெண்களை கற்பழித்த வழக்குகளுக்கு அவர் மீதான ஆதாரம் இன்றும் உகாண்டாவில் முன் வைக்கப்படுகிறது. 
அவர் விரும்பும் பெண் யாராக இருந்தாலும், யாருடைய மனைவியாக இருந்தாலும் சரி.. அவர்களை தொட வேண்டும் என்ற வெறி. அவரிடம் உண்டு. முரண்டு பிடித்த பெண்களை பலவந்தமாக பலாத்காரம் செய்து கொன்று விடுவார். 

அவரை பாலியல் நோய் தாக்கியும் அவர் ஆட்டத்தை விடவில்லை. அவர் ராணுவத்தில் பணியாற்றிய போது நடு ரோட்டில் நிர்வாணமாக ஓடிய சம்பவங்களும் உண்டு. 

சக ராணுவ வீரரின் மனைவியுடன் உல்லாசமாக இருந்ததால் கையும் களவுமாக மாட்டிக்கொண்டார். மேலும் தனக்கு பிடித்த பெண்ணுடம் இருப்பதற்காகவே அவர்களின் கணவர்களை திட்டமிட்டு கொன்றார்.
இடிஆமீனின் 30 அந்தபுரங்கள்
அவருக்கு நாடு முழுவதும் சுமார் 30 அந்தபுரங்கள் இருந்தன. அந்தப்புரத்தில் இருக்கும் பெண்கள் அங்கேயே இருப்பதை அமீன் அனுமதிப்பதில்லை. 

மாறாக அந்தப்புர நேரத்தை தவிர மற்ற நேரங்களில் அவர்கள் எல்லோரும் ஹோட்டல் மருத்துவமனை மற்றும் அலுவலகங்களில் பணிபுரிய வேண்டும். 

இப்படித்தான் ஒரு முறை காக்வா இனத்தின் மிகப்பெரிய தொழில் அதிபரின் மனைவி மீது ஆசைப்பட்ட அவர் அதிபரை காருடன் எரித்து விட்டு, அவளைக்கடத்திச் சென்று பலாத்காரம் செய்த பின் தன்னுடைய மனைவியாக கட்டாயத் திருமணம் செய்து கொண்டார். 
அவரது மற்றொரு மனைவி கே.அமீன் கர்ப்பம் தரித்தார். மன அழுத்தம் காரணமாக கர்ப்பத்தை கலைக்க முயன்று இறந்து போனார். 

அவள் தன்னை ஏமாற்றி விட்டதாக கருதிய அமீன்.. அவளது உடம்பில் இருந்த கால்களை எடுத்து கைகள் இருக்கும் இடத்திலும். கைகளை வெட்டி கால்கள் இருக்கும் இடத்திலும் வைத்து தைக்கச்செய்து மற்ற மனைவிகளிடம் காட்டி..

பார்த்தீர்களா! என்னிடம் வம்பு செய்தால் உங்களுக்கும் இது தான் கதி" என்று வெறிபிடித்து கத்தினார். 

குஜராத்தை சேர்ந்த பன்டாலி ஜாபர் என்பவர் உகாண்டாவில் ஹோட்டல் ஆரம்பித்து அப்படியே தென் ஆப்பிரிக் கா இங்கிலாந்து கனடா என்று பல நாடுகளில் ஸ்டார் ஹோட்டல்களை ஆரம்பித்து வெற்றிக்கொடி நாட்டி யவர், 

இவருடைய பையன் செராலி பன்டாலி ஜாபர் அவருடைய மகள் மொபினா ஜாபர் என்று இரண்டு இந்திய தலைமுறைகளை உருவாக்கி இருக்கிறது உகாண்டா. 
செராலி பன்டாலி ஜாபர்
அதிலும் இந்த மொபினா ஜாபர் கனடாவில் செனட்டராக இருந்தவர்.. மொபினா ஜாபர் கழுத்தில் இடி அமீன் முடிச்சு போட நினைத்து அது முடியாது போனதால் உண்டான. 

ஆத்திரத்தின் விளைவு தான் 1972 ல் உகாண்டாவில் இருந்து ஆசியர்கள் அனைவரையும் வெளி ஏற்றுங்கள் என்கிற இடி அமீனின் உத்தரவு. 

இதில் இந்தியர்களையும் பாகிஸ்தானியர்களையும் சேர்த்து ஒட்டு மொத்தமாக சுமார் 80 ஆயிரம் ஆசியர்களை நாட்டை விட்டே சொத்து பத்துக்களை அப்படியே விட்டு விட்டு ஓடி விடுங்கள் என்று விரட்டினார். 
அதே மாதிரி 1972 ல் உகாண்டாவில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த இடி அமீன் முன் செராலி பன்டாலி ஜாபர் தன்னோட மகள் மொபினா ஜாபரை அறிமுகப்படுத்தி வைக்க அவரை பார்த்த உடனே இடியமீனுக்கு காதல் வந்திடுச்சு.. 

கூடவே ஒட்டு மொத்த உகாண்டா வாழ் இந்தியர்களுக்கு சனியும் பிடித்துக் கொண்டது.. சும்மாவா என்ன? உடனே அவரிடம் தனது திருமண ஆசையைத் தெரிவித்தார் இடி அமீன். 

அவ்வளவு தான் மகனிடம் கேட்டு விட்டு சொல்வதாக ஏமாற்றி விட்டு , உடனே லண்டனில் இருக்கும் தனது மகனிடம் அவளை அனுப்பி வைத்து விட்டு மறுநாள் குடும்பத்துடன் வெளியேறி விட்டார் பன்டாலி ஜாபர். 
வெறிபிடித்த குரங்கு
யாராவது கிளியை வளர்த்து பூனையல்ல.. வெறிபிடித்த குரங்கு கையில் கொடுப்பார்களா?. அவ்வளவு தான் விஷயத்தைக் கேள்விப்பட்ட இடி அமீன் அவருடைய சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செயதார். 

ஆசிய நாட்டவர்கள் மீதே வெறுப்பு வந்தது. ஆசிய நாட்டவர்கள் அனைவரும் நம் நாட்டில் பொருளாதார வளங்களை சுரண்டுபவர்கள். எனவே அவர்கள் அனைவருமே 90 நாட்களுக்குள் வெளியேற வேண்டும். 

தங்களது சொத்துக்கள் அனைத்தையும் விட்டு விட்டு 250 கிலோ பொருட்கள் 55 பவுண்ட் பணம் மட்டும் எடுத்துச் செல்லலாம் என்று உடனடியாக ஒரு உத்தரவு போட்டார். 
இதனால் 50 ஆயிரம் ஆசியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டு அவர்களது சொத்துக்கள் அனைத்தும் கொள்ளையிடப்பட்டன. 

இந்தியர்கள் அனைவரும் இங்கி லாந்து அரசிடம் அபயம் கேட்டு விண்ணப்பிக்க உகா ண்டா வாழ் இந்தியர்கள் அனைவரையும் இங்கிலா ந்து அரவணைத்துக் கொண்டது. 

இந்தியர்கள் நாட்டை விட்டு போக எந்த வேலையும் தெரியாத உகாண்டா பழங்குடி மக்கள் வானத்தை பார்த்துக் கொண்டு வேடிக்கை பார்க்க ஒட்டு மொத்த உகாண்டாவும் ஸ்தம்பித்தது. 
2003 ஜுலை 18 ல் மரணமடைந்த இடிஆமீன்
அப்பொழுது தான் இந்த உலகம் யாரடா இந்த இடி அமீன் என்று உகாண்டா பக்கம் பார்வையை திருப்பியது. இவரது எட்டு வருட ஆட்சியில் கிட்டத்தட்ட 5 லட்சம் மக்கள் கொல்லப்பட்டதாக கருதப்படுகிறது. 

8 ஆண்டுகள் கொடுங்கோலாட்சி புரிந்த இடி அமீனுக்கு 1979 -ல் தான்சானியாவுடன் நடந்த போர் முடிவு கட்டியது. 
அதன் பின்னர் அங்கிருந்து தனது மனைவி மக்களுடன் தப்பிச்சென்ற அமீனுக்கு செளதி அரேபியா அடைக்கலம் கொடுத்து காத்தது. இவ்வளவு நடந்தும் தண்டிக்கப்படாமல் 2003 ஜுலை 18 ல் மரணமடைந்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)