பங்களாவில் இருந்து அரைகுறை ஆடையுடன் ஓடி வந்த பெண்.. என்ன நடந்தது !

ஒரு சொகுசு பங்களாவில் இருந்து, அரைகுறை ஆடையுடன், "காப்பாத்துங்க" என்று இளம் பெண் ஒருவர் பதறி அடித்து கொண்டே ஓடி வருவதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியாகி நின்றனர்!
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்

மாமல்லபுரத்தில் நிறைய சொகுசு பங்களாக்கள், ஆடம்பரமான காட்டேஜ்கள் உண்டு. பெரும்பாலான விஐபிக்கள் ரெஸ்ட் எடுக்க இங்கு தான் வருவார்கள்.. 

குறிப்பாக வார இறுதி நாட்களில் பார்ட்டயே நடத்தி அமர்க்களப் படுத்துவார்கள். மற்ற நாட்களில் அவை பூட்டி வைத்திருப்பார்கள்.. 
அதே போல, இந்த பங்களா, காட்டேஜ்களை பார்த்து கொள்ள செக்யூரிட்டிகளும் வேலைக்கு இருப்பார்கள்.. இப்போது லாக்டவுன் என்பதால், இன்னும் நிசப்தம் நிலவி கொண்டிருக்கிறது.

இந்த இடத்தில் விளம்பரம் பட புரொடியூசர் ஒருவருக்கு சொந்மான பங்களா ஒன்று உள்ளது.. இவர் கோபாலபுரத்தை சேர்ந்தவராம்.. இந்த பங்களாவின் வாட்ச்மேன் ராஜேந்திரன்.. 

அங்கேயே ஒரு சின்ன வீட்டில் குடும்பத்துடன் தங்கி வருகிறார். சம்பவத்தன்று அந்த பங்களாவின் பின்பக்கம் உள்ள மரத்தில் ஏறி மர்ம கும்பல் ஒன்று உள்ளே புகுந்துள்ளது. இதை ராஜேந்திரன் பார்த்து விட்டார்.

அவர்களை தடுக்க முயன்ற போது, அந்த கும்பல் ராஜேந்திரனை கத்தியால் தாக்கினர்.. அவரது மாமனார், குழந்தைகளை வாயை கட்டி விட்டு, ஒரு ரூமுக்குள் போட்டு அடைத்தனர்.. 

பிறகு ராஜேந்திரன் மனைவியை மட்டும் இழுத்து சென்று, பங்களாவை திறக்க சொன்னார்கள்.. ஒவ்வொரு ரூமையும் அவர் திறந்து காட்டி உள்ளார்.. ஆனால், நகை, பணம் எதுவுமே அந்த பங்களாவில் இல்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள், அங்கிருந்த டிவியை அடித்து நொறுக்கினர்.. பணம், நகை எதுவுமே கிடைக்காத ஆத்திரத்தில், ராஜேந்திரன் மனைவியின் துணியை முழுதுமாக கிழித்து அசிங்கப் படுத்தினர்.. 
அவர் காதில் இருந்த கம்மலை பிடுங்கி கொண்டனர்.. ராஜேந்திரன் குழந்தையின் காலில் இருந்த கொலுசை கூட கழட்டி எடுத்து கொண்டு மாடி வழியாக தப்பி ஓட முயன்றனர்.

ராஜேந்திரன் மனைவியின் துணியை கிழித்து விட்டதால், அலங்கோலமான நிலையில் வெளியே வரமாட்டார் என கொள்ளையர் நினைத்தனர்.. 
அரைகுறை ஆடையுடன் ஓடி வந்த பெண்

ஆனாலும் "காப்பாத்துங்க" என்று பங்களாவில் இருந்து வெளியே ஓடிவந்தார் அவர்.. இதை பார்த்து அந்த வழியாக சென்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.. 

பொதுமக்கள் உதவியுடன் கொள்ளையர்களை விரட்டி பிடித்தும் முடியவில்லை.. அவர்கள் தப்பி விட்டனர்.
படுகாயங்களுடன் இருந்த ராஜேந்திரன், அவரது குடும்பத்தினரை மீட்டு ஆஸ்பத்திரியில் பொதுமக்கள் அனுமதித்தனர். இதற்கு பிறகுதான் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அவர்கள் விசாரணையை ஆரம்பித்தனர்.. அப்போது தான், அந்த பகுதியில் இருந்த எல்லா சிசிடிவி கேமராக்களையும் நொறுக்கி விட்டு, அதனுள் இருந்த ஹார்ட் டிஸ்க்கையும் இவர்கள் எடுத்து சென்றுள்ளது தெரிய வந்தது. 

இப்போது 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.. அவர்கள் யார் என்று தேடி வருகிறார்கள்.
Tags: