சீனாவுக்கு ஷாக் தந்த ரஷ்யா.. கலக்கத்தில் ஜின்பிங்.. !

சீனாவிற்கு எஸ்-400 வகை ஏவுகணைகளை அனுப்ப மாட்டோம் என்று ரஷ்யா உறுதியாக கூறியுள்ளது. சீனாவிற்கு நண்பனாக இருந்த ரஷ்யா தற்போது சீனாவிற்கு மிக முக்கியமான ராணுவ உதவி ஒன்றை மறுத்துள்ளது.
சீனாவுக்கு ஷாக் தந்த ரஷ்யா.. கலக்கத்தில் ஜின்பிங்.. !

உலகம் முழுக்க எந்த இரண்டு நாட்டுக்கு இடையிலும் போர் வந்தாலும் அல்லது போர் மூளும் அபாயம் ஏற்பட்டாலும் அதில் மூன்றாவதாக ஒரு நாடு கண்டிப்பாக பலன் அடையும். 
எப்படி பலன் அடையும் என்றால், சண்டை போட்டுக் கொள்ளும் இரண்டு நாடுகளுக்கும் ஆயுதங்களை அனுப்பி, இந்த மூன்றாவது நாடு நன்றாக கல்லா கட்டும்.

அப்படி இந்தியா, சீனா என்ற இரண்டு நாடுகளுக்கு இடையிலான மோதலில் கல்லா கட்டும் மூன்றாவது நாடு தான் ரஷ்யா. 

இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் ஆயுதங்களை அனுப்பி, ரஷ்யா அதன் மூலம் கோடி கணக்கில் லாபம் ஈட்டி வருகிறது.

இந்தியாவிற்கு அனுப்புகிறது

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா நவீன ஆயுதங்களை வாங்குகிறது. சீனா இந்தியா இடையே கடுமையான மோதல் இருக்கும் நிலையில், ரஷ்யாவிடம் இருந்து பாதுகாப்பு உபகரணங்கள், போர் கருவிகளை இந்தியா வாங்கி வருகிறது. 

ரஷ்யாவிடம் இந்தியா 33 போர் விமானங்களை ஆர்டர் செய்துள்ளது. இந்தியா மொத்தம் 21 மிக் -29 விமானங்களை வாங்குகிறது. அதே போல் 12 சுகோய் -30 விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

உடனே வாங்குகிறது

அதேபோல் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் ஆயுதங்களை வாங்க இருக்கிறது. அதிலும் இந்தியா அவசரமாக இந்த ஆயுதங்களை கேட்டு உள்ளது.
எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அளிக்கும் S-400 Triumph missile system எனப்படும் ஏவுகணை சிஸ்டம்களை இந்தியா ரஷ்யாவிடம் ஆர்டர் செய்து உள்ளது.

சீனாவும் ஆர்டர் செய்தது
சீனாவுக்கு ஷாக் தந்த ரஷ்யா.. கலக்கத்தில் ஜின்பிங்.. !

அதேபோல் சீனாவும் ரஷ்யாவிடம் இதே போல் ஏவுகணைகள், போர் விமானங்களை ஆர்டர் செய்தது. ரஷ்யாவிடம் இருந்து எஸ்- 400 ஏவுகணைகளை சீனா ஆர்டர் செய்தது. 

இருந்து வானத்தை நோக்கி தாக்கும் வகையான ஏவுகணை ஆகும் இது. போர் விமானங்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளில் இது தான் உலகிலேயே வேகமானது, அதிக சக்தி வாய்ந்தது. 

இதனால் ரஷ்யாவிடம் சீனா இந்த எஸ் 400 ஏவுகணைகளை ஆர்டர் செய்தது.

முதலில் வாங்கியது

இதை அடுத்த கடந்த 2018ம் வருடம் ரஷ்யாவிடம் இருந்து சீனா இந்த ஏவுகணைகள் முதல் செட்களை வாங்கியது. 
இதை அடுத்து இரண்டாம் கட்ட டெலிவரி எப்போது வேண்டுமானாலும் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் என்று சீனாவிற்கு இந்த ஏவுகணைகளை விற்க போவதில்லை. 

இனி இதை சீனாவிற்கு விற்க போவதில்லை, அதற்கான திட்டம் எதுவும் இல்லை என்று ரஷ்யா அறிவித்துள்ளது.

காரணம் என்ன

ரஷ்யாவின் இந்த திடீர் முடிவிற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் ரஷ்யாவின் இந்த முடிவு சீனாவிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. ரஷ்யா இந்த முடிவை சுயமாக எடுக்கவில்லை. 
சீனாவுக்கு ஷாக் தந்த ரஷ்யா.. கலக்கத்தில் ஜின்பிங்.. !

ரஷ்யாவிற்கு யாரோ அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. சிலர் கொடுத்த அழுத்தம் காரணமாக ரஷ்யா இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து இருக்கிறது. இதை ஏற்க முடியாது என்று சீனா கூறியுள்ளது.

ஒரே நண்பன்

சீனாவிற்கு எப்போதும் உற்ற நண்பனாக இருந்த ஒரே நாடு ரஷ்யாதான். அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி சீனாவிற்கு ரஷ்யா எப்போதும் ஆதரவு அளித்து வந்தது. 
ஆனால் அதே ரஷ்யா தற்போது அமெரிக்காவுடன் நெருக்கம் காட்ட தொடங்கி உள்ளது. அதே போல் இந்தியாவுடனும் ரஷ்யா நெருக்கம் காட்ட தொடங்கி உள்ளது. 

இந்தியா, அமெரிக்காவின் அழுத்தம் தான் ரஷ்யாவின் இந்த முடிவிற்கு காரணம் என்கிறார்கள்.
Tags: