கையில் காசில்லாமல் கொள்ளையடிக்கத் திட்டமிட்டோம் - சிக்கிய 5 பேர் !

ஊரடங்கு நேரத்தில் கையில் பணம் இல்லாததால் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டியவர்களை, பெரம்பலூர் போலீஸார் மடக்கிப் பிடித்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊரடங்கு நேரத்தில் கையில் பணம் இல்லாததால்

பெரம்பலூர் மாவட்டத்தில், கடந்த ஒரு வாரத்தில் மூன்று கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால், மக்கள் அச்சத்தின் பிடியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

சமீப காலமாகவே இம்மாவட்டத்தில் ரவுடிக் கும்பலின் அட்டகாசமும் அதிகரித்து வருகிறது. 

மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்த நிலையில், கொள்ளை யடிக்கத் திட்டம் தீட்டியவர்களை காவல்துறை மடக்கிப் பிடித்துள்ளது.
எஸ்ஐ செந்தமிழ்ச்செல்வி தலைமை யிலான போலீஸாரின் ரோந்து வாகனம் எளம்பலூர் சாலையில் சென்ற போது, அப்பகுதி ஓடைப் பகுதியில், ஐந்து பேர் கொண்ட கும்பல் கூட்டமாக அமர்ந்து கொண்டு ஏதோ பேசிக்கொண்டி ருந்தார்கள். 

போலீஸாரின் வாகனத்தைக் கண்டதும் பதறியடித்து ஓடத் தொடங்கினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார், அவர்களை சுற்றி வளைத்துப் பிடித்து விசாரணை நடத்தினர்.
போலீஸாரின் ரோந்து வாகனம்

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள இந்தக் காலகட்டத்தில் தங்களுக்கு வேலை சரியாக இல்லாத காரணத்தால், ஏதோ வீடு அல்லது கடைகளில் கொள்ளை யடிக்கத் திட்டம் தீட்டியதாகத் தெரிகிறது. 

மேலும், அவர்களிட மிருந்து மிளகாய்ப்பொடி, இரண்டு அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
இது சம்பந்தமாக பெரம்பலூரில் எஸ்ஐ செந்தமிழ்ச் செல்வி அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் ஆய்வாளர் சுகந்தி வழக்குப்பதிவு செய்து, 

பெரம்பூர் சங்குப்பேட்டை செல்வகுமார், மணிகண்டன், பாரதிதாசன், உமாமகேஸ்வரன் ஆகிய 5 பேரைக் கைது செய்தனர். 

பிறகு, பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை விசாரித்து வந்த காவல்துறையினரிடம் பேசினோம். 

”கொரானோ விவகாரத்தால் மக்கள் யாரும் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருப்பதால் பணம் கையில் இல்லாமல் திண்டாடுகிறார்கள். 

இந்நிலையில், இளைஞர்கள் குடிக்க கையில் காசு இல்லாததால் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். 
வேறு யாருக்காவது தொடர்பு

அந்த வகையில் நாங்கள் வழக்கம் போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, ஐந்து பேர் கொண்ட கும்பல் தண்ணி அடித்துக் கொண்டு சத்தமாக பேசிக்கொண்டி ருந்தார்கள்.

எங்களைப் பார்த்ததும் ஓடத் தொடங்கினார்கள். நாங்கள் அவர்களை விரட்டிப் பிடித்து விசாரித்த போது, கையில் பணம் இல்லாமல் கொள்ளையடிக்கத் திட்டத் தீட்டியதாக ஒத்துக் கொண்டார்கள். 
இரவு நேரத்தில் மூன்று இடங்களைத் தேர்வு செய்திருக்கிறார்கள். அதுவும் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளைத் தேர்வுசெய்திருக்கி றார்கள். 

முதல் கட்டமாக விசாரணை செய்திருக்கிறோம். இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்றும் விசாரித்து வருகிறோம்" என்றனர்.
Tags: