பீலா ராஜேஷ் மாற்றப்பட காரணம் என்ன? கையை மீறிபோன கொரோனா !

ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தன பீலா ராஜேஷ் மீது. காரணம் அவர் ஆரம்பத்தில் கொடுக்க ஆரம்பித்த பிரஸ் மீட்கள்.. ஆனால் காலப் போக்கில் அந்த பிரஸ் மீட்களே அவருக்கு எதிராக மாறி விட்டன என்பது தான் சோகம்.
பீலா ராஜேஷ்

சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கருக்கே போட்டியாக வருவாரோ என்ற பிம்பத்தைக் கொண்டு பார்க்கப்பட்டவர் பீலா ராஜேஷ். 

முதலில், கொரோனா குறித்த அப்டேட்டுக்களை அமைச்சர் விஜயபாஸ்கர் தான் கொடுத்து வந்தார். ஆனால் அது பின்னர் பீலா ராஜேஷிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது ஒருபக்கம் சர்ச்சையைக் கிளப்பியது. ஆனால் பீலா ராஜேஷ் அளித்து வந்த பிரஸ்மீட்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகின. ரொம்ப அருமையாக இந்த பிரச்சினையை அவர் கையாளுவதாக பேச்சுக்கள் எழுந்தன. 

ஏன், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமே பீலா ராஜேஷைப் பாராட்டி டிவீட் போட்டார்.

பிரஸ்மீட்

அடுத்தடுத்து பாராட்டப்பட்ட பீலா ராஜேஷின் பிரஸ்மீட்கள் பின்னர் சர்ச்சையாக ஆரம்பித்தன. அவர் ஆரம்பத்தில் கூறி வந்த டெல்லி சோர்ஸ் முதல் சர்ச்சையாக வெடித்தது. 

பின்னர் அதை "சிங்கிள் சோர்ஸ்" என்று சொல்ல ஆரம்பித்தார். அதன் பின்னர் பாதிப்புகள் குறித்த எண்ணிக்கை சர்ச்சையானது. அதன் பிறகு ஒரு நாள் பீலா ராஜேஷின் பிரஸ்மீட்கள் நிறுத்தப்பட்டன.

விஜயபாஸ்கர்

அதன் பின்னர் இடையில் மீண்டும் வந்தார். தலைமைச் செயலாளர் பிரஸ்மீட் செய்தார். அதன் பிறகு மறுபடியும் விஜயபாஸ்கரே கொடுக்க ஆரம்பித்தார். 
பீலா ராஜேஷ் மீது எந்த பெரிய புகாரும் இல்லை என்றாலும் கூட அவர் மீதான அதிருப்திகள் அதிகரித்து வந்ததும் கூட அவரது இடமாற்றத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

முணுமுணுப்புகள்

போதிய முன் அனுபவம் இல்லாததால் இவரால் கொரோனாவை சிறப்பாக கையாள முடியவில்லை என்றும் கூறப்பட்டது.. 

அது மட்டுமில்லை, அதிகாரிகளுக்கு போதிய ஒத்துழைப்பையும் இவர் தருவதில்லை எனற்றும் முணுமுணுப்புக்கள் எழுந்தன... 

கோயம்பேடு விவகாரம் பூதாகரமாக கிளம்பிய சமயத்திலேயே பீலா மாற்றப்பட்டு விடுவார் என்ற செய்திகளும் பரபரபத்தன.

பிம்பங்கள்
பீலா ராஜேஷ் மாற்றப்பட காரணம்

அது மட்டுமல்லாமல், தமிழகத்தில் தொற்று அதிகரித்த நேரத்தில், சுகாதார துறை செயலாளர் பதவியை எதற்காக பீலாவிடம் தர வேண்டும்? இது கொள்ளை நோய் சமயம் அல்லவா? 

திறமை வாய்ந்த ஒருவரால் தானே இதனை அணுக முடியும்? என்று பல விவாதங்களும் கட்சிக்குள்ளேயே நடந்தும் வந்ததாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் தான் தற்போது அறிவிப்பு வந்துள்ளது. 
அதே சமயம், ராதாகிருஷ்ணன் குறித்த வேறு சில பிம்பங்கள் தான் அவரை மீண்டும் சுகாதாரத் துறைக்குக் கொண்டு வர முக்கியக் காரணம் என்று ஒரு தரப்பு சொல்கிறது.

ராதாகிருஷ்ணன்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமானவர், நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் ஜே. ராதாகிருஷ்ணன். துரிதமாக செயல்படக் கூடியவர். 

துல்லியமாக முடிவெடுக்கக் கூடியவர். போட்டுக் குழப்பிக் கொண்டிருக்க மாட்டார். இழுத்துப் போட்டு வேலையை செய்வார். அதை விட ஒருங்கிணைப்பதில் கெட்டிக்காரர். 

இதனால் தான் நாகை சுனாமியில் சிக்கி சிதைந்த போது பக்கத்து மாவட்டமான தஞ்சாவூரிலிருந்து நாகைக்கு இவரை மாற்றினார் ஜெயலலிதா.

சிக்கல்கள்

நாகையில் சுனாமி பாதித்த பகுதிகளில் இவர் சுழன்று சுழன்று பணியாற்றியதை நாகை மக்கள் இன்னும் மறக்கவில்லை. 

அதே போல முக்கியமான சிக்கல்களின் போதெல்லாம் இவரது உதவியை ஜெயலலிதா பயன்படுத்தி கொள்ளத் தவறியதில்லை. 
சென்னை வெள்ளம் பிரச்சினையின்போதும் ராதாகிருஷ்ணன் முக்கியப் பங்காற்றினார். சிறுவன் சுஜித் மீட்புப் பணியிலும் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

ரீ - என்ட்ரி

இப்போது கொரோனா கட்டுப்பாட்டை இழந்து தறி கெட்டு ஓடத் தொடங்கி யுள்ளது. சென்னையில் நிலைமை எல்லை மீறி விட்டது.. 

சென்னை மட்டுமல்லாமல் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி யுள்ளன. இதிலிருந்து மீட்க அனுபவமும், துரித செயல்பாடுகளும் மிக மிக அவசியம். 
அந்த அடிப்படையில் தான் ராதாகிருஷ்ணன் சுகாதாரத் துறை செயலாளராக்கப் பட்டுள்ளார் என்று சொல்கிறார்கள். 

மே-ம் தேதியே கொரோனா ஒழிப்பு பணியில் என்ட்ரி தந்தார் ராதாகிருஷ்ணன்.. அதற்கு பிறகுதான் மெல்ல மெல்ல அதிரடிகளை கையில் எடுத்தார்.

புள்ளி விவர சர்ச்சை
புள்ளி விவர சர்ச்சை

பொன். ராதா கிருஷ்ணனுக்கு தூரத்து உறவினர் என்பதாலும் பாஜக தரப்பில் இருந்த பாசிட்டிவ் பார்வைகளாலும் பீலா ராஜேஷ் முக்கிய இடத்தைப் பிடிக்க முடிந்தது. 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், ஜெயலலிதா ஸ்டைலில் இவருக்கு முன்னுரிமையும் கொடுத்தார். ஊக்கம் தந்தார். 

இருப்பினும் தவறான புள்ளிவிவரத் தகவல்கள் உள்ளிட்டவை பீலா ராஜேஷின் செயல்பாடுகளை சர்ச்சையாக்கி விட்டன. 
இருப்பினும் இந்த மாற்றத்தை பீலாவுக்கு எதிரானதாகவோ அல்லது ராதாகிருஷ்ணன் கை ஓங்கி யிருப்பதாகவோ எடுத்துக் கொள்ள முடியாது. இருவருமே அருமையான அதிகாரிகள்.. 

அந்த வகையில் இந்த மாற்றம் சென்னைக்கு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த தமிழகத்துக்கும் நலன் கொடுத்தால் அதுவே போதும்.
Tags: