இணையத்தில் பரவும் கொரோனா காதல் - உண்மை என்ன?

எகிப்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த பெண் மருத்துவர் மீது காதல் வயப்பட்ட நோயாளி ஒருவர் மருத்துவ மனையிலேயே தன்னுடைய காதலை தெரிவித்தார் என்ற செய்தி ட்ரெண்ட் ஆகி வருகிறது. 
கொரோனா காதல்

அது தொடர்பான புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் அந்த செய்தியின் உண்மைத் தன்மை குறித்து இந்தியா டுடே Fact Check மூலம் தெரிவித்துள்ளது.
அதில், முஹமது பஹ்மி, அய மொஸ்பா ஆகிய இருவருக்கும் 2018-ம் ஆண்டே நிச்சயதார்த்தம் ஆகிவிட்ட தாகவும், தற்போது நடத்திய திருமண போட்டோ ஷூட் தான் இது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

இந்த புகைப்படங்களை எடுத்த புகைப்படக்கலைஞர் முகமது சலீம் இந்த புகைப்படங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இணையத்தில் பரவும் கொரோனா காதல்

அதில், இது ஒரு திருமண போட்டோ ஷூட், அவர்கள் இருவருமே நலமாக இருக்கிறார்கள். யாருக்கும் கொரோனா இல்லை. 

கொரொனா போன்ற கடினமான சூழலில் மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைப்பதற்காக இந்த வித்தியாசமான போட்டோ ஷூட்டை நடத்தினோம் என தெரிவித்துள்ளார்.
எனவே, திருமண போட்டோ ஷூட்டை கொரோனா காதல் என இணைய வாசிகள் தவறாக நினைத்து பதிவிட்டு வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags: