கோபத்தில் கண்கள் சிவக்கக் காரணம் என்ன?

“இது, ஹார்மோன் செய்யும் வேலை. நாம் கோபப்படும் போதோ, அழும் போதோ உடலில் சில உணர்ச்சி ஹார்மோன்கள் தூண்டப் படுகின்றன.
 


அதனால், ரத்தத்தின் ஓட்டத்திலும் மாற்றம் உண்டாகிறது. ரத்தம், சராசரியை விட அதிக வேகத்தில் உடல் முழுவதும் திடீர் பாய்ச்சல் நிகழ்த்து கின்றன.

கண் பகுதி மிகவும் மென்மை யானது என்பதால், ரத்த ஓட்டம் திடீரென அதிகரிப்பது பளிச் எனத் தெரிந்து விடுகிறது.

அழும் போது கண்களைக் கசக்கு வதாலும் சிவந்து விடும். இப்படி, அடிக்கடி ரத்தம் திடீர்ப் பாய்ச்சல் செய்வது நல்லது அல்ல. அதனால் தான், கோபம் கூடாது என்கிறார்கள்.”
Tags: