கொரோனா பற்றிய சந்தேகங்களை இந்த வாட்ஸ்அப் நம்பரில் கேளுங்க.. அரசு !

மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அவர்கள் சந்தேகங்களை களைவதற்கும் மத்திய அரசு ஒரு வாட்ஸ்அப் ஹெல்ப் டெஸ்க் ஆரம்பித்துள்ளது.
கொரோனா சந்தேகங்களை இந்த வாட்ஸ்அப் நம்பரில் கேளுங்க


கொரோனா வைரஸ் தொடர்பாக பல்வேறு நபர்களுக்கும், பலவகையான சந்தேகங்கள் இருக்கின்றன. 

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான சந்தேகங்கள் இருப்பதால், அனைவருக்கும் தனித்தனியாக விளக்கம் அளிக்கும் வகையில் இந்த வாட்ஸப் டெஸ்க் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. 

இந்த நம்பரை உங்களது தொலைபேசி எண்ணில் சேமித்துக் கொண்டு, அதற்குபிறகு வாட்ஸ்அப் மூலமாக உங்களது சந்தேகங்களை அரசிடம் கேளுங்கள்.
இது தவிர அரசு இரண்டு ஹெல்ப்லைன் நம்பர்களை ஏற்படுத்தி உள்ளது. இவை இலவச தொலைபேசி எண்கள் ஆகும். 

இது தவிர இந்த இமெயில் முகவரிக்கும், உங்களது சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்று கொள்ளலாம்.


வாட்ஸ்அப் டெஸ்க் நம்பர்: 9013151515

ஹெல்ப்லைன் நம்பர்: +91-11-23978046 மற்றும் 1075 (toll-free)

இ-மெயில் முகவரி: ncov2019@gov.in

பலருக்கும் முழுமையான விழிப்புணர்வு இல்லை. எனவே, நம்பகமான தகவல்களை மக்கள் எளிதாக தெரிந்துகொள்ள மத்திய சுகாதாரத்துறை சார்பில் +91 9013151515 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: Corona Helpdesk என இந்த எண்ணை பொதுமக்கள் தங்கள் செல்போனில் பதிவு செய்து கொள்ளலாம். 

பின்னர், அந்த எண்ணுக்கு Hi என டைப் செய்து மெசேஜ் அனுப்பினால், கரோனா குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள உதவும். 

மத்திய அரசின் இலவசஎண், உதவி மைய எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்கள் வரும். அதோடு, நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் குறித்த கேள்விகளும் ஏ,பி,சி,டி,இ,எஃப் என வரிசையாக இருக்கும். 


அதில், நமக்கு என்ன தகவல் வேண்டுமோ அந்த கேள்விக்குரிய Alphabet-ஐ பதிவிட்டால் உடனடியாக பதில் வரும். 

உதாரணமாக, ‘ஏ’என பதிவிட்டால் கரோனா வைரஸூக்கானஅறிகுறிகள், எப்போது பரிசோதனை அவசியம் என்ற தகவல்கள் வரும். 

‘பி’என பதிவிட்டால் கரோனா வைரஸ் எப்படி யெல்லாம் பரவுகிறது என்ற தகவல் வரும். மருத்துவ உதவி தேவைப்படுவோர் ‘எஃப்’ என பதிவிட்டால் 24 மணி நேரமும் செயல்படும் மத்திய கட்டுப்பாட்டு அறையின் இலவச எண்ணும், 

அந்தந்த மாநில உதவிமைய எண்ணும் கிடைக்கும் இவ்வாறு அவர்கள் கூறினர்
Tags: