கொரோனா நிவாரண நிதி ரூ.1000 .. வீடு தேடி வரும் டோக்கன் !





கொரோனா நிவாரண நிதி ரூ.1000 .. வீடு தேடி வரும் டோக்கன் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
கொரோனா நிவாரண நிதி 1000 ரூபாய்க்கான டோக்கன் வந்துவிட்டது.. இந்த டோக்கன் உங்கள் வீட்டுக்கே தேடி வருகிறது. கூட்டத்தை தவிர்க்க டோக்களில் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது/
கொரோனா நிவாரண நிதி ரூ.1000


தமிழக அரசு கொரோனா நிவாரண நிதியாக தலா ரூ.1000 அனைத்து ரேஷன் கார்டுதார் களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. 

நாளை முதல் அனைத்து ரேஷன் கடைகளில் பணம் மற்றும் இலவசம்க 15 கிலோ அரிசி, பருப்பு உள்ளிட்டவை விநியோகிக்கப்பட உள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மார்ச் 24ம் தேதி சட்டசபை கூட்டத்தில் இது பற்றி பேசுகையில், தமிழகத்தில் குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூபாய் 1000 வழங்கப்படும். 
அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவை இலவசமாக வழங்கப்படும்.

மார்ச் மாத ரேஷன் பொருட்களைப் பெற தவறியவர்கள் அவற்றை ஏப்ரல் மாத பொருட்களுடன் சேர்த்த பெறலாம். ஆதரவற்றோருக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று உணவு வழங்கப்படும். 

ரேஷன் கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க டோக்கன் முறையில் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.


இதன்படி டோக்கன் தயாரிப்பு பணி, மற்றும் பொருட்கள் மற்றும் பணத்தை அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடந்து முடிந்தது. 

இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வீட்டிற்கும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. 
அந்த டோக்கனில் பணம், பொருட்கள் விநியோகிக்கப்படும் நேரம் மற்றும் நாள் குறிப்பிடப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் வழங்கப்பபட்ட டோக்கன் ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Tags: