தற்கொலை எண்ணம் வருது அமித்ஷாவுக்கு ட்வீட் செய்த கோத்தகிரி இளைஞர் !





தற்கொலை எண்ணம் வருது அமித்ஷாவுக்கு ட்வீட் செய்த கோத்தகிரி இளைஞர் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
என்னை குடும்பத்துடன் சேர்த்து வைங்க சார்.. தற்கொலை எண்ணம் வருது.." என்று அமித்ஷாவிடம் கோவை இளைஞர் உதவி கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எண்ணம்


இந்தியாவில் பரவ தொடங்கி உள்ளது கொரோனா வைரஸ்.. இது ஒரு தொற்று நோய் என்பதால் அதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை களில் அரசு இறங்கி உள்ளது.

அதனால் கொரோனா அறிகுறி சிறிதளவு தென்பட்டாலும் கூட, உடனே மக்கள் தங்களை மற்றவர்களிடம் இருந்து விலக்கி தனிமைப்படுத்தி கொள்ளுமாறும் சுகாதாரத் துறை அறிவுறுத்தி வருகிறது..

அப்படி அறிகுறி இருப்பவர்களையும் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறது.. ஆனால் ஒரு சிலரால் முகாமிற்குள் நாட்கணக்கில் தங்கியிருக்க முடிவதில்லை.. 

அதே போல, தனிமைப் படுத்துதலில் இருப்பவர்களும் ஒருவித மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள். 

அந்த வகையில் இளைஞர் ஒருவர் தேனியில் ஒரு பாட்டியின் கழுத்தை கடித்து கொன்றுவிட்ட சம்பவமும் அரங்கேறி வருகிறது.

இது போலவே நீலகிரி இளைஞர் ஒருவராலும் தனிமைப் படுத்துதலை எதிர் கொள்ள முடியவில்லை.. அதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.. 
கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த இந்த இளைஞர் பெயர் ராம்.. கோவையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார்.. கோவை கவுண்டர் மில் பகுதியில் ஒரு ரூம் எடுத்து தங்கி வந்துள்ளார். 

அப்போது தான் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.. உடனடியாக இவர் சொந்த ஊருக்கு செல்ல முயன்றும் பஸ் கிடைக்க வில்லை.. கோத்தகிரிக்கு எல்லா போக்குவரத்தும் முழுமையாக நிறுத்தப்பட்டது.. 

அதனால் ராம், தொடர்ந்து கோவையில் உள்ள தன்னுடைய ரூமிலேயே தனியாக அடைந்து கிடந்துள்ளார். ஒருகட்டத்துக்கு மேல் தனிமை அவருக்கு கொடுமையாக இருந்துள்ளதை உணர்ந்தார்... 

அதனால் "தனியாக இருப்பது மன உளைச்சலை ஏற்படுத்துவ தாகவும், தற்கொலை செய்து கொள்ள தூண்டுவ தாகவும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டேக் செய்து ட்விட்டரில் உதவி கேட்டார் ராம். 
அமித்ஷாவுக்கு ட்வீட் செய்த கோத்தகிரி இளைஞர்


இந்த டிவிட்டை பார்த்த கோவை மாநகர கமிஷனர் சுமித் சரண் உத்தரவின் பேரில் கோவை மாவட்ட எஸ்பி சுஜித் குமார் உள்ளிட்ட போலீசார் சம்பந்தப்பட்ட ராமின் ரூமுக்கு சென்று அவரை மீட்டனர்.

அவருக்கு ஒரு மாறுதலை ஏற்படுத்த போலீசார் நினைத்தனர்.. அதற்காக, தடையை மீறி பைக்கை ஓட்டி வருபவர்களை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு அறிவுரை சொல்லுமாறு ராமுவை பணியில் ஈடுபடுத்த முயன்றனர். 
ஆனாலும் மனஉளைச்சல் அதிகமாக இருப்பதால் கோத்தகரிக்கு போயே ஆக வேண்டும் என்று ராம் பிடிவாதமாக இருந்தார்.

இதையடுத்து, ஒரு பைக்கை ஏற்பாடு செய்து அதிலேயே அவர் கோத்தகிரி செல்ல கோவை போலீசார் ஏற்பாடு செய்து கொடுத்தனர். அந்த பைக்கில்தான் ராம் கோத்தகிரிக்கு சென்றடைந்தார். 

ராம் மட்டுமில்லை.. மேலும் பலரும் தனிமைப் படுத்துதலை மன அழுத்தம் அளவுக்கு கொண்டு போய் விடுகிறார்கள்.. 

தனிமைப் படுத்தலுக்கான புரிதல் இருந்தால் மட்டுமே எந்த வைரஸையும் நாம் எதிர்கொள்ள முடியும் என்ற கவுன்சிலிங்கும் இதுபோன்றவர்களுக்கு தேவைப்படுகிறது.
Tags: