வெள்ளைக்காரர்களை வெளுத்த அபுல் கலாம் ஆசாத் !

பிரிட்டிஷ் ஆட்சி இந்து-முஸ்லீம் இடையே பிளவை உண்டாக்கி குளிர் காய்வதின் அடி வேரைக்கண்டு வெட்ட ஆரம்பித்தவர். அதற்காகவே அவர் ஹல் ஹிலால் என ஒரு உருது வார இதழை தொடங்கி வெள்ளைக் காரர்களை வெளுத்தவர்.
வெள்ளைக்காரர்களை வெளுத்த அபுல் கலாம்


இரண்டே ஆண்டில் பத்திரிக்கைகு தடை.. இருந்தாலும் விடவில்லை. மறுபடியும் ஹல் பலாஹி என வேறு பெயரில் பத்திரிகையை கொண்டு வந்தார். 

அதே ஆவேசமான எழுத்துகள்.. அதையும் இரண்டே ஆண்டுகளில் முடக்கியது பிரிட்டிஷ் ஆட்சி.. இப்படி தான் உருவெடுத்து சுதந்திர போராட்ட வரலாற்றில் முக்கியமான ஆளுமையாக திகழ்ந்தவர். 

மிகவும் இளம் (35) வயதில் காங்கிரஸ் கட்சிக்கு தலைவ ரானவர், இவருக்கு அடுத்து தான் மகாத்மா காந்தியே 1924-ல் அப்பதவிக்கு வந்தார்.
ஒரு புறம், ஜின்னா போன்றவர் களால் வலுப்பெற்று வந்த நாட்டின் பிரிவினை வாதம்... இன்னொரு புறம் ஆங்கிலேயர் களை எதிர்த்து பல போராட்டங்களுடன் சுதந்திரத்தை நோக்கி நாடு முன்னேறிவந்த தருணம்..

தேசம் பல பிரச்சினைகளை உக்கிரமாக சந்தித்து கொண்டிருந்த கால கட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக 1940 முதல் ஆறு ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றிய திறமைசாலி்.

பாகிஸ்தான் பிரிவினை தீர்மானத்தை ஆதரித்து வாக்க ளிக்காததால் ( நடுநிலை) ‘’காங்கிரசின் கைப்புள்ளை’’ என முகமது அலி ஜின்னாவால், கேலி பேசப்பட்டவர்.


இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர்..ஐஐடி போன்ற பல கல்வி நிறுவனங்கள் தோன்ற வகை செய்து இன்றைய உயர் கல்வி வளர்ச்சிக்கு அன்றே வித்திட்ட ஒரு சிற்பி..

காந்தி, படேல் நேரு. நேதாஜி வரிசையில் இருந்தவர்..
இஸ்லாமியர் ஒவ்வொருவ்ரும் உச்சபட்ச கனவு, மெக்கா..ஆனால் இவரோ மெக்காவிலேயே பிறந்த பாக்கியத்தை பெற்றவர்

பாரத் ரத்னா அபுல் கலாம் ஆசாத்தின் 62 வது நினைவு தினம் இன்று 23 February
Tags: