கொரோனா பீதியால் பைக்கில் போய் உயிரை விட்ட 3 பேர் !

சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ் கிடைக்க வில்லை... அதனால் பைக்கிலேயே ஊர் போய் சேர்ந்து விடலாம் என்று சென்ற 3 பேருமே சாலை விபத்தில் படுகோரமாக உயிரிழந்துள்ளனர்.. 
கொரோனா பீதியால் உயிரை விட்ட 3 பேர்


உளுந்தூர் பேட்டை மற்றும் கரூர் அருகே இந்த கோர விபத்துகள் நடந்துள்ளன. நேற்று திடுதிப்பென்று 144 தடை உத்தரவு தமிழகத்தில் பிறப்பிக்கப் பட்டது.. இன்று மாலை முதல் தடை உத்தரவு அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப் பட்டது.

இதனால் வெளியூர்களில் தங்கி உள்ளவர்கள் சொந்த ஊர் செல்ல பஸ் ஸ்டேண்டுகளில் குவிந்து விட்டனர்.. ஒருத்தருக் கொருத்தர் முண்டியடித்து கொண்டு பஸ்களில் ஏற முயன்றனர்.. 

வாய் தகராறு - தள்ளுமுள்ளு - கைகலப்பு என சகலமும் கூட்டத்தோடு கூட்டமாக பஸ் ஸ்டாண்ட்களில் நடந்ததை காண முடிந்தது.

அந்த வகையில் மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் வினோத்காம்ளி என்பவர்.. 26 வயதாகிறது.. இவர் சென்னையில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்தார்...
சென்னையில் இவர் தங்கி உள்ளதால் பஸ்ஸில் செல்ல முயன்றும், அது முடியாமல் போனதால் பைக்கிலேயே மதுரைக்கு சென்றுவிடலாம் என முடிவு செய்தார்.. 

அதன்படியே இவர் கிளம்பி வந்து கொண்டிருந்தார்.. உளுந்தூர் பேட்டை அருகே சாலையோரம் வைக்கப் பட்டிருந்த தடுப்பில் எதிர்பாராத விதமாக மோதினார்.. 

பலமாக மோதி கீழே விழுந்ததில், வினோத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே போல, கரூர் அருகே பைக்கில் சென்ற 2 பேரும், எதிரே வந்த லாரி மோதியதில் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். 


ஓசூரை சேர்ந்தவர்கள் சரவணன், நாகராஜன்.. இவர்கள் பைக்கில் ஒட்டன் சத்திரத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.. கரூர் அருகே எதிரே வந்த லாரி வேகமாக இந்த பைக்கில் மோதியதில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.. 

இது எல்லா வற்றிகும் காரணம் கொரோனா பீதி காரணமாக இவர்களுக்கு பஸ் கிடைக்காமல் போயுள்ளது தான்.. அதனால்தான் பைக்கிலேயே சென்று விடலாம் என முடிவு செய்துள்ளனர்!

144 தடை உத்தரவு பிறப்பித்தது தவறில்லை.. அந்த உத்தரவு இது போன்ற அவசர அவசிய நேரத்தில் முக்கியமானதும் கூட.. 
ஆனால் அதே சமயம் 144 பிறப்பிப்பது என்று தெரிந்து விட்டால், அதற்கேற்றபடி பொது மக்களுக்கு போதுமான பஸ் வசதிகளை அரசு இயக்கி யிருக்க வேண்டும்.. 

கூடுதலாக பஸ்களை இயக்காமல், 144 தடை என்று சொல்லி விடவும் மக்கள் என்னதான் செய்வார்கள்? 

முண்டியடித்து கொண்டு ஊர் போய் சேர்ந்து விடலாம் என்று நினைப்பார்களே தவிர சமூக விலகல் என்ற விஷயத்தை பற்றி சிந்திக்கவும் தோன்றாது.. 

கடைசியில் இது போன்ற பரிதாப மரணங்கள் தான் ஏற்படுகின்றன!
Tags: