விடிகாலையில் கிணற்றில் எட்டி பார்த்த மைதிலிக்கு நேர்ந்த அதிர்ச்சி !

விடிகாலை நேரத்தில், குழந்தையை தூக்கி கொண்டு கிணற்றடிக்கு ஓடினார் மைதிலி.. உள்ளே டார்ச் லைட் அடித்து எட்டி பார்த்த போது தான் பொது மக்கள் அதிர்ந்தனர்!
கிணற்றில் எட்டி பார்த்த மைதிலிக்கு நேர்ந்த அதிர்ச்சி


திருச்சி சுப்ரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார்.. மனைவி பெயர் மைதிலி.. 30 வயதாகிறது.. 9 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

சந்தோஷ் குமார் ஒரு தனியார் நிறுவனத்தில் வெளியூரில் தங்கி வேலை பார்க்கிறார்.. வாரம் ஒருமுறை தான் வீட்டுக்கு வருவார்... 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சந்தோஷ் குமார் மைதிலிக்கு போன் செய்து பேசி யுள்ளார்... போனிலேயே இருவருக்கும் சண்டை வந்துள்ளது... சந்தோஷ் குமாரை திட்டி விட்டு போனை கட் பண்ணி விட்டார் மைதிலி!
ஆனால் இரவெல்லாம் அழுது கொண்டே இருந்தார்.. ஒருகட்டத்தில் விடிகாலை குழந்தையை தூக்கி கொண்டு வீட்டு பின்பக்கம் உள்ள கிணற்றடிக்கு ஓடினார்.. 

அப்படியே குழந்தையுடன் உள்ளே குதித்து விட்டார். கிணற்றுக்குள் இருந்து மைதிலியும், குழந்தையும் அலறினர்.. விடிகாலை நேரம் என்பதால், அந்த சத்தம் தெளிவாக கேட்டது.. 

அதனால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கிணற்றில் டார்ச் அடித்து பார்த்தனர்... அப்போது தான் தாயும் - சேயும் தண்ணீரில் தத்ளித்து கொண்டிருப்பது தெரிந்தது.. 

உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட, 9 வீரர்கள் விரைந்து வந்து விட்டனர்.

இவர்களுக்கு இஆர்டி எனப்படும் ஸ்பெஷல் டீம் என்று பெயராம்.. ஒரு வீரர் இடுப்பில் கயிற்றை கட்டிக் கொண்டு, கடகடவென கிணற்றுக்குள் இறங்கி விட்டார்..


அந்த கிணறு 35 அடி ஆழம் உடையது.. ஆனால் மைதிலியும் குழந்தையும் 5 அடி ஆழ நீரில் இருந்தனர்..

அதனால் அப்படியே கயிறு கட்டி மேலே கொண்டு வந்து விட்டார்.
வீரர்கள் வரும்போதே தயாராக 108 ஆம்புலன்ஸையும் அழைத்து வந்திருந்ததால், அதிலேயே இருவருக்கும் தீவிர சிகிச்சை தரப்பட்டது..

இப்போது தாயும், சேயும் சவுக்கியம்.. எந்த நேரமாக இருந்தாலும், விழிப்புடனேயே இருந்து, கண்ணிமை க்கும் நேரத்தில் கயிறு கட்டி இரு உயிர்களை காப்பாற்றி வீரர்களை மக்கள் பாராட்டி தள்ளினர்.. 

ஆனால் குழந்தையுடன் கிணற்றில் குதித்த மைதிலியிடம் விசாரணை நடக்கிறது.
Tags: