காட்டு பகுதியில் மாணவிகள் கையில் பீர் பாட்டில் - ஷாக் காட்சி !





காட்டு பகுதியில் மாணவிகள் கையில் பீர் பாட்டில் - ஷாக் காட்சி !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
காட்டுப் பகுதியில் 3 மாணவிகள்.. அதுவும் ஸ்கூல் யூனிபார்மில்... அவர்கள் கையில் பீர்பாட்டில்.. பக்கத்தில் ஸ்நாக்ஸ்... சியர்ஸ் சொல்லி எல்லோருமே தண்ணி அடிக்கிறார்கள்.. 
மாணவிகள் கையில் பீர் பாட்டில்


இப்படி ஒரு வீடியோ வைரலாகி கடுமையான அதிர்ச்சி கலந்த வேதனையை ஏற்படுத்தி வருகிறது.

ஒரு வீடியோ வெளியாகி உள்ளது... அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியை சேர்ந்த மாணவிகள் இவர்கள்.. மொத்தம் 4 பேர்.. நால்வருமே மாணவிகள்.

ஸ்கூல் யூனிபார்மில் உள்ளனர்.. ஒரு மாணவி வீடியோ எடுக்க.. மற்ற 3 பெண்களும் தண்ணி அடிக்கிறார்கள். 
அது ஒரு காட்டுப்பகுதி போல உள்ளது.. பீர் பாட்டிலுடன் ஸ்நாக்ஸ், டம்ளர் உள்ளிட்டவைகளும் தயாராக கொண்டு வந்துள்ளனர்... பாட்டிலை திறந்து 3 பேருமே டம்பளரில் ஊற்றி குடிக்கிறார்கள்.

வேற லெவலு

"பயமா இருக்குடி.. யாராவது வந்துட போறாங்க..".. என்னடி இப்படி குடிக்கிறீங்க?", பாட்டிலை தூக்கி போடுங்கடி... எங்க புள்ளைங்க எல்லாம் வேற லெவலு" இப்படி அந்த வீடியோவில் பேச்சுக்கள் பதிந்துள்ளன.. 

எந்த குற்ற உணர்வும் இந்த பெண்களிடம் தெரியவில்லை.. யார் வீட்டு பிள்ளைகளோ, என்ன பாடுபட்டு இவர்களை வீட்டில் படிக்க வைக்கிறார்களோ.. அதுவும் தெரியவில்லை. 

இந்த வீடியோவை பார்த்தால் அவர்கள் வயிறு எப்படி துடிக்கும் என்றும் நம்மால் யோசிக்க முடியவில்லை.

கள்ள சாராயம்

முன்பெல்லாம் மூலைக்கு மூலை தனியார் மதுபான கடைகள் இயங்கி வந்தன... அதனால் ஏதாவது ஒரு சில கிராமப்புறத்தில் அதுவும் காட்டுப் பகுதியில் மட்டும் தான் கள்ளச் சாராயம் விற்பார்கள்.. 
இது ஓரளவு குடிமகன்களின் எண்ணிக்கையை குறைத்தது.. சாராயக் கடையில் மதுவை வாங்கி கொண்டு, அதை யாருக்கும் தெரியாமல் குடித்து முடிப்பதற்கே அன்று ஆண்கள் நடுங்கி போய் விடுவார்கள்.

அம்பலம்

ஆனால் இன்று நிலைமை அப்படியே தலைகீழ்! மதுக்கடைகள் அரசு ஏற்று நடத்துகிறது... மறைவாக நடத்தப் பட்டவை அம்பலமாக நடக்கிறது.. பகிரங்கமாக குடிக்கிறார்கள்... 
பூரண மதுவிலக்கு


இதில் சில இளம் பெண்கள் சிக்கி கொண்டுள்ளது வேதனையை தருகிறது. தமிழகத்தில் எத்தனையோ குடும்பங்கள் மதுவால் சின்னா பின்னமாகி விட்டன. பல உயிர்கள் பறிபோனாலும் மதுக்கடை களை மூட முடியவில்லை. 

மதுவினால் பல குற்றங்கள் அதிகரித்தாலும், பூரண மதுவிலக்கு என்பது சாத்திய மில்லாத ஒன்றாக உள்ளது.

வேதனை வீடியோ

இதற்காக போராட்டங்களின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும்தான் அதிகமாகி வருகிறது.இந்நிலையில், சில பெண்களும் குடிக்க தொடங்கி உள்ளது, பெருத்த வேதனையாக உள்ளது. 
பெற்றோர்களின் சரியான கவனிப்பு இல்லை என்று சொல்வதா? அறியாமை என்று சொல்வதா? இவர்களிடம் கண்டிப்பு காட்டாமல், தொடர் கண்காணிப்பும், அரவணைப்பும் இருந்தாலே போதும் என்று தான் தோன்றுகிறது... 

ஆனால், மதுவின் பிடியில் வயசு பெண்கள் சிக்கி கொண்டால், யாராலுமே அவர்களை காப்பாற்ற முடியாத அபாயத்துக்கு போவார்கள் என்பது நிச்சயம்!
Tags: