தலைவர்களின் புகைப்படத்தை ஏன் காப்பாற்றவில்லை... பெண்ணுக்கு சிறை !

0
வட கொரியாவில் தீப்பிடித்து எரிந்த வீட்டிலிருந்து, அந்நாட்டின் முன்னாள் தலைவர்களின் புகைப்படத்தைக் காப்பதற்கு பதிலாக குழந்தைகளைக் காப்பாற்றிய தாய்க்கு சிறை தண்டனை அளிக்கப் பட்டுள்ளது.
தலைவர்களின் புகைப்படத்தை ஏன் காப்பாற்றவில்லை... பெண்ணுக்கு சிறை !
வடகொரிய நாட்டின் ஒரே அதிபராக கிம் ஜான் உன் உள்ளார். அந்நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமக்கள் வீட்டிலும் 

அந்நாட்டின் மறைந்த முன்னாள் தலைவர்க ளான கிம் இல் சங் மற்றும் கிம் ஜாங் இல் ஆகியோரின் புகைப்படங்கள் மாட்டப் பட்டிருக்க வேண்டும். 

மேலும், ஒவ்வொரு வீட்டிலும் மறைந்த தலைவர்களின் புகைப்படங்கள் மாட்டப் பட்டுள்ளதா என்பதை அவ்வப்போது காவல் துறை அதிகாரிகள் வந்து சோதனை செய்வார்கள்.

அதே போல, புகைப்படத்துக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அந்த வீட்டின் உரிமை யாளருக்கு கடுமையான சிறை தண்டனை விதிக்கப்படும். 
இந்த நிலையில், வடகொரியா வின் வடக்கு ஹாம்யாங் மாகணத்தில் ஒரே வீட்டில் இரண்டு குடும்த்தினர் வசித்து வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் அவர்களது வீட்டில் தீ பிடித்துள்ளது. 
அந்த நேரத்தில் இரு வீட்டைச் சேர்ந்த பெற்றோர்களும் வீட்டில் இல்லை.

வீடு தீப்பற்றி எரிவதைக் கண்டவர்கள் வேகமாக விரைந்து வந்து வீட்டிலிருந்த குழந்தை களைக் காப்பாற்றினர்.

அப்போது வீட்டிலிருந்து தலைவர்களின் புகைப்படங்கள் தீயில் எரிந்தன. 

இந்த விவகாரம் காவல் துறைக்கு தெரிய வந்த நிலையில், புகைப் படத்தை எரியவிட்ட குற்றத்துக்கு குழந்தைகளின் தாய் கைது செய்யப்பட்டு சிறை யிலடைக்கப் பட்டுள்ளார். 
மேலும், புகைப் படத்தைக் காப்பாற்றாமல் குழந்தை களைக் காப்பாற்றினார் என்பது நிரூபிக்கப் பட்டால்,

அந்தப் பெண்ணுக்கு பிணையில் வர முடியாத கடுமையான பணிகளுடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)