ஈரான் அமெரிக்கா இடையே என்ன பிரச்சனை? போர் வருகிறதா?





ஈரான் அமெரிக்கா இடையே என்ன பிரச்சனை? போர் வருகிறதா?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
ஈரானுக்கும் அமெரிக்கா விற்கும் இடையில் தற்போது நடக்கும் பிரச்சனைக்கு பின் நிறைய வரலாறும், நிறைய வெளியேற தெரியும் காரணங்களும், வெளியே தெரியாத காரணங்களும் இருக்கிறது
ஈரான் அமெரிக்கா இடையே என்ன பிரச்சனை?
ஈரானில் தொடர்ந்து அமெரிக்கா டிரோன் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் விரைவில் ஈரான் அமெரிக்கா இடையே போர் வர வாய்ப்புள்ளது என்கிறார்கள். 

இதற்கு முன் இரண்டு நாடுகளின் உறவுகளை தெரிந்து கொள்ள வேண்டும். 1950களில் ஈரானை அமெரிக்கா கட்டுப் படுத்தி வந்தது.

அமெரிக்கவிற்கு ஆதரவான முகமது ரெசா ஷாதான் அங்கு ஆட்சி அமைத்து நடத்தி வந்தார். 

இவர் சிஐஏ வளர்த்த பூனை குட்டி என்று அப்போது ஆங்கில நாளிதழ்கள் எழுதியது. அந்த அளவிற்கு இவர் அமெரிக்காவிற்கு ஆதரவாக செயல் பட்டார்.

ஆனால் என்ன

ஆனால் 1979ல் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சிக்கு பின் அவரின் அரசு தூக்கி எறியப் பட்டது. அதன்பின் வந்த ஈரான் அதிபர்கள் யாரும் அமெரிக்கா வுடன் சரியாக தொடர்பில் இல்லை. 
ஒபாமா எப்படி
வரிசையாக வந்த ஈரான் அதிபர்கள் எல்லோரும் அமெரிக்கா வுடன் சண்டை போடும் மனநிலையில் தான் இருந்தனர்.

ஒபாமா எப்படி

இதனால் ஈரான் மீது அமெரிக்கா நிறைய பொருளாதார தடைகளை விதித்தது. ஆனால் அதன்பின் ஒபாமா அதிபராக இருந்த காலத்தில் அமெரிக்கா - ஈரான் இடையே உறவு நன்றாக சென்றது. 

இரண்டு நாடுகளும் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கம் காட்ட தொடங்கியது. 2015ல் அணு ஆயுத ஒப்பந்தமும் கையெழுத்திடப் பட்டது.
என்ன ஒப்பந்தம்

அதன்படி ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்க கூடாது, அதை பயன்படுத்த கூடாது. அப்படி செய்தால் அனைத்து விதமான பொருளாதர தடைகளும் நீக்கப்படும் என்று ஒப்பந்தம் போடப் பட்டது. 

ஆனால் அப்போதே பிசினஸ் மேனாக இருந்த டிரம்ப் உட்பட பலர் இதை எதிர்த்தனர். ஈரானை நம்ப கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர்.

என்ன எச்சரிக்கை
என்ன எச்சரிக்கை
ஈரான் எப்போது மனசு மாறும் என்று தெரியாது. ஈரான் திடீர் திடீர் என்று முடிவை மாற்றும். ஒபாமா குழந்தை போல ஈரானிடம் சென்று ஒப்பந்தம் போடுகிறார். 

இது முட்டாள் தனமான விஷயம் என்று பலர் எச்சரிக்கை விடுத்தனர். அப்போதே இதை கடுமையாக எதிர்த்த டிரம்ப், அதிபர் ஆன பின் அந்த ஒப்பந்தத்தை நீக்கும் முடிவிற்கு வந்தார்.

மொத்தமாக நீக்கினார்

அந்த வகையில் ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தை மதிக்க வில்லை என்று கூறி அந்த ஒப்பந்தத்தை டிரம்ப் மொத்தமாக நீக்கினார். அதோடு ஈரான் மீது 3 பொருளாதார தடைகளை விதித்தார். 

ஒபாமா கொஞ்சம் கொஞ்சமாக எழுப்பிய சுவரை ''சுவர் எழுப்பும் நாயகன்'' டிரம்ப் இடித்து தள்ளினார். ஈரான் - அமெரிக்க உறவு மொத்தமாக உடைந்தது.

என்ன சுருக்கம்

அதேபோல் ஈரான் அருகே கடல் பகுதியில் இருக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியும் இந்த சண்டைக்கு முக்கிய காரணம் ஆகும். 
சுவர் எழுப்பும் நாயகன்
ஹோர்முஸ் ஜலசந்தி என்பது ஈரான், ஈராக், ஓமன், சிரியா ஆகிய நாடுகள் எண்ணெய் ஏற்றுமதி செய்ய பயன்படுத்தும் ஒரே வழியாகும். 

இந்த ஒரே வழி மூலம் தான் உலக அளவில் கடல் வழியாக செய்யப்படும் பெட்ரோல் / டீசல் ஏற்றுமதியில் 40 சதவிகித ஏற்றுமதி நடக்கிறது.

என்ன மோசம்

ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான்- ஓமன் நாடுகள் பிரித்து கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஆனாலும் இதில் எப்போதும் ஈரானின் கையே ஓங்கி இருக்கும். 

ஹோர்முஸ் ஜலசந்தியை மொத்தமாக கைப்பற்ற ஈரான் முயல்வதும் இந்த பிரச்சனைக்கு காரணம் ஆகும். இதை அனுமதிக்காத அமெரிக்கா ஈரான் உடன் சண்டை போட்டு வருகிறது.

என்ன சுருக்கம்

ஈரான் அமெரிக்காவிற்கு இடையில் நிகழும் பிரச்சனையை பின்வருமாறு சுருக்கமாக குறிப்பிடலாம்.

ஈரான் உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை அமெரிக்கா ரத்து செய்தது. அதன் பின் சென்ற 2018 வருடம் ஈரான் மீது அமெரிக்கா 2 பொருளாதார தடைகளை விதித்தது.
ஈரான் அமெரிக்கா இடையே என்ன பிரச்சனை? போர் வருகிறதா?
கடந்த ஏப்ரலில் ஈரான் மீது அமெரிக்கா 3 வது பொருளாதார தடையை விதித்தது. ஈரானிடம் இருந்து உலக நாடுகள் எண்ணெய் வாங்குவ அமெரிக்கா தடை செய்தது.

கோபப்பட்ட ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியை மூட போவதாக அறிவித்தது. ஹோர்முஸ் ஜலசந்தி வழியே தான் மத்திய கிழக்கு நாடுகள் எண்ணெய் வர்த்தகம் செய்கிறது.
அதன்பின் சவுதி, அமீரகம் ஆகிய நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் மர்மமான முறையில் ஹோர்முஸ் ஜலசந்தியில் தாக்குதலுக்கு உள்ளது. இதற்கு ஈரான் தான் காரணம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

அதன்பின் ஈரான் அமெரிக்கா இடையிலான சண்டை அதிகம் ஆனது.

படைகள் குவிப்பு

இதை யடுத்து அமெரிக்கா ஈரானை தாக்கும் பொருட்டு ஏற்கனவே இரண்டு படை பிரிவுகளை அனுப்பி உள்ளது. இன்னும் 1,20,000 படைகளை அமெரிக்கா வரும் நாட்களில் அனுப்ப உள்ளது. 

6 மாதத்திற்குள் அனைத்து படைகளும் ஈரானுக்கு அனுப்பப்படும் என்றது. அதே போல் தற்போது அங்கு சண்டை உச்சம் அடைந்துள்ளது.

இப்போது என்ன காரணம்
இப்போது என்ன காரணம்
இப்போது ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த காரணம் இருக்கிறது. ஈரான் தலைவர்களை அமெரிக்கா குறி வைத்து, டிரோன் தாக்குதல் நடத்துவதாக புகார் எழுந்தது. 

இதனால் ஈரான் ஆதரவு அமைப்புகள் ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே போராட்டம் செய்தனர். அந்த தூதரக த்தை அவர்கள் மொத்தமாக சிறை பிடித்தனர்.

அமெரிக்கா கோபம்

இது அமெரிக்காவை கோபம் அடைய செய்தது. இதை அமெரிக்கா தீவிரமாக கண்காணித்து. அப்போது தான் ஈராக்கை நோக்கி ஈரானின் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி சென்றார். 

இவர் அங்கு பெரிய பிரச்னையை செய்ய போகிறார் என்பதை அறிந்து கொண்ட அமெரிக்கா அவரை கொலை செய்துள்ளது.

என்ன தாக்குதல்

இதுதான் அமெரிக்கா - ஈரான் பிரச்சனைக்கு காரணம். ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி அமெரிக்கர் களை கொலை செய்வதற்காக சென்று கொண்டு இருந்தார், 
என்ன தாக்குதல்
அப்போது தான் அவர் மீது டிரோன் தாக்குதல் நடத்தினோம் என்று அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.

வேறு காரணம்

இன்னொரு பக்கம் அமெரிக்காவும் ஈரானும் எமன் போரில் ஒன்றுக்கு ஒன்று எதிராக சண்டை போட்டு வருகிறது. அமெரிக்கா சவுதியின் ஆதரவுடன் அங்கு சண்டை போடுகிறது. 

ஈரானோ ஹவுதி போராளி குழுவிற்கு ஆதரவு தருகிறது. சிரியாவிலும் அமெரிக்கா போராளி குழுவிற்கு ஆதரவு தருகிறது, 

ஈரான் சிரியாவின் அதிபர் பஷார் அல் அசாத்திற்கு ஆதரவு தருகிறது. இதுவும் சண்டைக்கு காரணாம் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)