சவுதி அரேபியாவில் பனிப் பொழிவு - வைரலாகும் வீடியோ !





சவுதி அரேபியாவில் பனிப் பொழிவு - வைரலாகும் வீடியோ !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
பாலைவன நாடான சவுதி அரேபியா வில் கடும் பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக பனிமழை பொழிந்து வருகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
சவுதி அரேபியாவில் பனிப் பொழிவு


ஒட்டகங்கள், பாலைவனம், கடல் என சவுதி அரேபியா பார்க்கவே நம்மூர் வித்தியாசமாக இருக்கும்.

அங்கு கடுமையான வெயில் வெயில் காலத்தில் இருக்கும். 

அதே போல் குளிர் காலத்திலும் கடுமையாக இருக்கும். ஆனால் பனிபொழிவு எப்படி என்பது பலருக்கும் ஆச்சர்யமாக இருக்கும்.

ஆனால் சவுதி அரேபியா மக்கள் மிகசாதாரணம் என்கிறார்கள். நாம் நினைப்பது போல் சவுதி அரேபியா முழுவதும் பனிபொழிவு ஏற்படவில்லை. 

ஜோர்டானின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள டபூக் பிராந்தின் ஜபல்-அல்-லாஸ், அல்-தாஹீர், ஜபல் அல்குவான் உள்ளிட்ட மலைகளில் ஆண்டின் முதல் மூன்று வாரங்களில் பனிப்பொழிவு ஏற்படுவது இயல்பு என்கிறார்கள்.

அதன்படி ஜபல்-அல்-லாஸ், அல்-தாஹீர், ஜபல் அல்குவான் உள்ளிட்ட மலைகள் முற்றிலும் பனி படர்ந்து ரம்மியாக காட்சி அளிக்கிறது. 


சவுதி அரேபியாவில் வெப்பநிலை என்பது பல இடங்களில் இரவில் பூஜியத்திற்கு கீழ் செல்கிறது.

18 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் என உறைபனியாக சவுதி அரேபியா காணப்படு கிறது.

பனிபொழிவு தொடர்பான வீடியோ ஒன்றில் சவுதி அரேபியாவில் பனி மூடிய சாலைகளில் கார்கள் மெதுவான வேகத்தில் நகர்கின்றன.

எங்கும் பனியால் அல்-தாஹீர் மலை மூடப்பட்டு காணப்படு கிறது. 

வெப்பநிலை உறை பனிக்குக் கீழே செல்வதால், சவூதி வானிலை அமைப்பு குடியிருப் பாளர்களை சூடாக வைத்திருக் கவும் தனிமைப் படுத்தப்பட்ட இடங்களைத் தவிர்க்கவும் கேட்டுக் கொண்டுள்ளது.

ஜோர்டானின் எல்லைப் பகுதியிலேயே இவ்வளவு பனி என்றால் ஜோர்டனானில் அதை விட மோசமாக இருக்கிறது.

ஜோர்டான் ஈரான் உள்ளிட்ட நாடுகளில் பனிபொழிவு கடுமையாக இருக்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)