சைகை மொழியில் வீடியோ கால் பேசிய மாற்றுத்திறனாளி !

0
மாற்றுத் திறனாளி ஒருவர் சைகை மொழியில் செல்போனில் வீடியோ கால் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
சைகை மொழியில் வீடியோ கால்

உலகின் எந்தப் பகுதியில் இருப்பவரை யும் தொடர்பு கொண்டு பேச தொலைபேசிகள் மற்றும் செல்போன்கள் உதவுகின்றன. 

ஆனால் பேசவோ, கேட்கவோ முடியாத மாற்றுத் திறனாளிகள்

அதனை பயன்படுத்த முடியாத சூழலே நிலவி வந்தது. நவீன வகை செல்போன்கள் இந்த குறையை தீர்த்து வைத்துள்ளன. 

இந்நிலையில், பேசவோ, கேட்கவோ முடியாத மாற்றுத் திறனாளி ஒருவர், வீடியோ கால் மூலம் வேறொருவ ருடன் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி யுள்ளது. 

அதில் தனக்கு நெருக்கமான ஒருவருடன் மாற்றுத் திறனாளி ஒருவர் சைகை மொழியில் பேசும் காட்சி, அனைவரையும் நெகிழ்ச்சி யடைய வைத்துள்ளது.

தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டு நெகிழ்ச்சி யடைந்துள்ளார்.


Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)