மாணவனை மலம் அள்ள வைத்த ஆசிரியைக்கு 5 வருட சிறை !

2-ம் கிளாஸ் படித்து வந்த பட்டியலின மாணவனை மலம் அள்ள வைத்த வழக்கில் ஆசிரியை விஜய லட்சுமிக்கு 5 வருட சிறைத் தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட் உத்தர விட்டுள்ளது.
பட்டியலின மாணவன்


நாமக்கல் மாவட்டம், எஸ். வாழவந்தியைச் சேர்ந்த தம்பதி ரகுநாதன் - விஜயலட்சுமி..

இதில் விஜயலட்சுமி ராமாபுரம் புதுார் அரசு நடுநிலைப் பள்ளியில் டீச்சராக உள்ளார்.. 

தொடக்கப் பள்ளி மாணவர்களு க்குப் பாடம் நடத்தி வந்தார். இவருக்கு 35 வயதாகிறது.

கடந்த 2015-ம் ஆண்டு, நவம்பர் 13ம் தேதி 3-ம் வகுப்பு மாணவர் களுக்கும், 2-ம் வகுப்பு மாணவர்களு க்கும் சேர்த்து ஒரே வகுப்பறையில் விஜயலட்சுமி பாடம் எடுத்து கொண்டிருந்தார். 

அப்போது 3ஆம் வகுப்பு மாணவன், தன்னை அறியாமலேயே வகுப்பறை யிலேயே மலம் கழித்துள்ளான்.

தொட மாட்டோம்

இதை பார்த்த விஜயலட்சுமி, 2-ம் வகுப்பு பட்டியலின மாணவனை கூப்பிட்டு, அந்த மலத்தை அள்ளி வெளியே போட சொல்லி யுள்ளார்... 

7 வயதான குழந்தையும், ஒரு பேப்பரில் கழிவை எடுத்து வெளியே போட்டான்.. இதை சக மாணவர்கள் கிண்டல் செய்து, "உன்னை தொட மாட்டோம்" என்று கேலி செய்துள்ளனர்.

சஸ்பெண்ட்

இந்த சம்பவத்தை வீட்டில் அழுது கொண்டே சிறுவன் பெற்றோரிடம் சொல்லவும், அவர்கள் பள்ளியை முற்றுகை யிட்டு ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். 

இதை யடுத்து, அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்த கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியை விஜய லட்சுமியை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்தனர்.

ஜாமீன்
மாணவனை மலம் அள்ள வைத்த ஆசிரியை


தொடர்ந்து பெற்றோர், நாமக்கல் போலீசில் புகார் தரவும், அதன்படி விசாரணை மேற்கொள்ளப் பட்டு, விஜயலட்சுமி மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். 

இது சம்பந்தமான வழக்கு மாவட்ட, எஸ்சி, எஸ்டி பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.

விஜயலட்சுமி, ஜாமீனில் வெளிவந்த நிலையில், இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை நேற்று நடந்தது.

ஜெயில் தண்டனை

அதில், விஜயலட்சுமிக்கு, 7 வருட ஆண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி தனசேகரன் தீர்ப்பு வழங்கினார். இதில், அபராத தொகை செலுத்தப் பட்டது. 

ஆசிரியை விஜயலட்சுமி பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப் பட்டார். 

விஜய லட்சுமிக்கு ஜெயில் தண்டனை என்பதால், ஆசிரியர் பணியி லிருந்து, அவர் நிரந்தரமாக நீக்கப் படலாம் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags: