காட்டுத் தீ மீட்பு பணிக்கு நிர்வாண படம் மூலம் ரூ.5 கோடி... மாடல் அழகி !

கைலன் வார்ட் (20) என்ற அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டா மாடல் பெண்ணுக்கு இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் அதிகம். இவர் கடந்த 4-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டார். 
காட்டுத் தீ மீட்பு பணிக்கு நிர்வாண படம் மூலம் ரூ.5 கோடி... மாடல் அழகி !
அதில், என்னுடைய நிர்வாண புகைப் படங்களை தனிப்பட்ட நபர்களுக்கு அனுப்புகிறேன். அதற்காக அவர்கள் 10 டாலர் அனுப்ப வேண்டும். 

இந்த தொகை ஆஸ்திரேலியா காட்டுத்தீ மீட்புப் பணிக்காக பயன் படுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.

அவருக்கு இரண்டே நாட்களில் 7 லட்சம் டாலர் வசூல் ஆகியுள்ளது. இந்திய மதிப்பில் இது. ரூ.5 கோடி ஆகும்.

இது குறித்து மீண்டும் பதிவிட்ட அவர், இது உண்மை தானா? என் ட்வீட்டின் எதிரொலி யாக ஆஸ்திரேலியா காட்டுத் தீ மீட்புப் பணிக்கு 7 லட்சம் டாலர் வசூல் ஆகியுள்ளது என்று தெரிவித்துள்ளார். 

அதே வேளையில் வசூல் செய்த பணத்தை கைலன் காட்டுத்தீ மீட்புப் பணிக்கு பயன்படுத்தாமல் ஏமாற்றுவ தாக புகார்களும் எழுந்தன.

அதற்கு பதிலளித்த அவர், கரீபியனில் விடுமுறைக்கு வந்த போது, ஆஸ்திரேலியா வின் கிழக்கு மற்றும் தெற்கு கடற்கரை யோரங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஏற்பட்ட தீ பற்றி தெரிந்து வேதனை அடைந்தேன். 

என் மீது குற்றச்சாட்டு வைக்கப் படுகிறது. நான் வசூல் செய்த பணத்தை எனக்காக பயன்படுத்த வில்லை.
வேண்டு மென்றால் பணம் அனுப்புபவர்கள் ஆஸ்திரேலியா காட்டுத்தீ மீட்பு நிவாரண நிதிக்கு நேரடியாகவே அனுப்பலாம். 

அதற்கான ஆதாரத்தை மட்டும் எனக்கு அனுப்புங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கைலன் வார்டின் இன்ஸ்டா பக்கத்தை அந்நிறுவனம் முடக்கி யுள்ளது. 

புதிய முயற்சி மூலம் காட்டுத் தீ மீட்புப் பணிக்கு பணம் வசூல் செய்யும் கைலன் வார்ட்டுக்கு சிலர் பாராட்டு களையும், சிலர் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்... 
Tags: