புதுச்சேரியில் மக்களை பார்த்து நடுங்கிய பாம்பு - சுவாரஸ்யம் !





புதுச்சேரியில் மக்களை பார்த்து நடுங்கிய பாம்பு - சுவாரஸ்யம் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
புதுச்சேரி வழுதாவூரை அடுத்து தட்சணா மூர்த்தி நகர் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் தற்போது வளர்த்து வரும் பகுதியாகும் பிளாட் போட்டு தற்போது விற்பனைகள் நடந்து வருகிறது. 
பாம்பு


சிலர் பிளாட்களை வாங்கி வீடுகட்டி குடிவந்து விட்டனர்.

மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் இந்த பகுதி முன்னால் ஏரி பகுதியாக இருந்த தாகவும். 

அது தற்போது பிளாட் போட்டு விற்கப் படுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளது.

அந்த பகுதியில் சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்த போது பாம்பு ஒன்று "உஸ்... உஸ்..." எனச் சத்தம் போட்டுக் கொண்டிருந்தது உடனடியாக சிறுவர்கள் அலறியதால் அப்பகுதியில் கூட்டம் கூடியது. 

3.5 அடி நீளம் உள்ள பாம்பு கூட்டத்தைப் பார்த்தும் செல்லாமல் தொடர்ந்து படமெடுத்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில் குறிப்பிட்ட அந்த நாள் நல்ல நாளாக இருந்ததால் பாம்பைக் கொல்ல யாரும் முன் வரவில்லை. மாறாகப் பாம்பிற்கு முன்னாள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். 

இப்படிச் செய்தால் பாம்பு போய்விடும் என நம்பினர். ஆனால் அப்பொழுதும் பாம்பு செல்ல வில்லை. இதனால் வேறு வழியின்றி தீயணைப்புத் துறையி னருக்கு போன் செய்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் பாம்பு விசித்திரமாக ஒரு இடத்தி லிருப்பதைப் பார்த்து ஆச்சரியப் பட்டனர். 


பின்னர் அந்த பாம்பைப் பிடித்து வனத்துறை யினரிடம் ஒப்படைத்தனர். நடந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது.

"இது குளிர்காலம் என்பதால் பாம்பு கதகதப்பான இடத்தை நோக்கி வந்திருக்க லாம். 

மக்களைப் பார்த்துப் பயந்து அந்த இடத்திலேயே நின்றிருக்க லாம். கற்பூரம் ஏற்றப்பட்டதும்

அது கதகதப்பிற் காகவும் அதே நேரத்தில் மக்களைப் பார்த்துப் பயந்தும் படமெடுத்துக் கொண்டு அங்கேயே நின்றிருக்கும் " என விளக்க மளித்தார்.
மக்களைப் பார்த்துப் பயந்து நின்ற பாம்பைப் பார்த்து மக்கள் பயந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தித் தான் விட்டது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)