நாளை முதல் பால் விலை உயரும் - பொங்கிய பால் முகவர்கள் ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

நாளை முதல் பால் விலை உயரும் - பொங்கிய பால் முகவர்கள் !

Subscribe Via Email

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமாக ஆவின் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் மற்றும் இனிப்பு பொருட்கள் விற்பனை செய்யப் படுகின்றன. 
நாளை முதல் பால் விலை உயரும்


இவற்றின் விலையை ஆவின் நிர்வாகம் நிர்ணயம் செய்து வருகிறது. இதே போல் தனியார் நிறுவனங்களும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. 

இவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

இந்நிலையில் நாளை முதல் தனியார் பால் விலை ரூ.4 உயர்த்தப் படுவதாக தகவல் வெளியாகி யுள்ளது.

இதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளனர். 

அதில், தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் மற்றும் மூலப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது என பொய்யான காரணத்தை முன் வைத்துள்ளன.
கடந்த ஆண்டில் மட்டும் மூன்று முறை லிட்டருக்கு ரூ.8 வரை பால் மற்றும் தயிரின் விலையை உயர்த்தி இருக்கின்றனர். 

இந்நிலையில் மகாராஷ்டிராவை தலைமை யிடமாக கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி தனியார் பால் நிறுவனம் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.4 வரை அதிகரித்துள்ளது.


இது கடந்த 12ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பால் கொள்முதல் விலை உயர்வு மற்றும் தமிழகத்தில் பால் தட்டுப்பாடு ஆகிய காரணங் களை 4 தனியார் பால் நிறுவனங்கள் முன் வைத்துள்ளன.

எனவே நாளை (ஜனவரி 20) முதல் பால் மற்றும் தயிரின் விலையை லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்துவ தாக அறிவித்துள்ளன.

இதே போல் மற்ற தனியார் நிறுவனங்களும் பால் விலையை உயர்த்த திட்ட மிட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும். வருங்காலங்களில் அரசு அனுமதியின்றி யாரும் பால் விலையை உயர்த்தக் கூடாது என்று உத்தரவிட வேண்டும்.

இதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக முதலமைச் சருக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தி யுள்ளது.

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close