அடுத்த வாரம் கல்யாணம்... நடு ராத்திரியில் அதிர வைத்த முடிவு ! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016அடுத்த வாரம் கல்யாணம்... நடு ராத்திரியில் அதிர வைத்த முடிவு !

Subscribe Via Email

லைக் பண்ணுங்க... "
அடுத்த வாரம் ஸ்ரீதருக்கு கல்யாணம்.. ஆனால் அப்பா, அம்மாவுடன் நடுராத்திரி விஷம் சாப்பிட்டு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அடுத்த வாரம் கல்யாணம்


தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஆழ்வார்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சந்தானம்..

இவர் ஒரு மிட்டாய் வியாபாரி.. இவர் பலசரக்குப் பொருட்களை விற்கும் ஏஜன்சியும் எடுத்து நடத்தி வந்துள்ளார். 
மனைவி பெயர் லட்சுமி.. பொட்டல் புதூரில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றியவர்.

இவர்களுக்கு ஆரோக்கிய ஸ்ரீதர் என்ற மகனும், ஜோதி என்ற மகளும் உள்ளனர்.. ஸ்ரீதர், ஒரு என்ஜினியர்.. ஜோதி காலேஜில் படித்து வருபவர்.

புதுவீடு

இந்நிலையில், ஒன்றரை மாசத்துக்கு முன்பு சந்தானம் புது வீடு ஒன்று கட்டி குடும்பத்துடன் குடியேறினார்.. ஆனால் இவருக்கு ஏற்கனவே நிறைய கடன் இருப்பது போல தெரிகிறது.. 
இவ்வளவு நாள் பொறுத்து போனவர்கள், சந்தானம் வீடு கட்டியதும் நேரடியாக வந்து கொடுத்த கடனை கேட்டு நெருக்கடி தந்தனர்.

தகராறு

அப்படித்தான் கடந்த 15-ந் தேதி அதாவது பொங்கல் அன்று, சிலர் வீட்டுக்கு வந்து கடனை உடனே தருமாறு கேட்டு தகராறு செய்திருக்கி றார்கள்.. 

இதனால் சந்தானம், லட்சுமி, ஸ்ரீதர் 3 பேருமே மனமுடைந்து போய் விட்டனர்.. அன்று நள்ளிரவு 3 பேருமே விஷம் குடித்து விட்டனர்.

அலறினார்

நள்ளிரவு என்பதால் ஜோதி தூங்கி கொண்டிருந்தார்.. அதனால் விடி காலையில் எழுந்து பார்க்கும் போது தான், 3 பேரும் மயங்கி விழுந்திருப்பதை பார்த்து அலறினார்.. 
அந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து 3 பேரையும் மீட்டு பாளையங் கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சந்தானம் அங்கு பரிதாபமாக இறந்தார்.

3 பேரும் பலி
அவமானம்


இதை யடுத்து லட்சுமி, ஆரோக்கிய ஸ்ரீதருக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டும், அவர்களும் அடுத்தடுத்து பலனினிறி உயிரிழந்து விட்டனர்.. 

ஆழ்வார் குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வரும் 27ஆம் தேதி ஸ்ரீதருக்கு கல்யாணம் நிச்சயம் ஆகி உள்ளதாம்.

அவமானம்

ஸ்ரீதர் ஆன்லைன் பிசினசும் செய்து வந்திருக்கிறார்.. இந்த பிசினசுக்காக பலரிடம் லட்சக் கணக்கில் கடன் வாங்கி வைத்திருந் திருக்கிறார். இதில் தான் அவருக்கு நிறைய நெருக்கடி ஏற்பட்டு, கடன் எல்லைமீறி விட்டது. 
பொங்கல் அன்று வீட்டுக்கு வந்து தகராறு செய்தவர்கள், வீட்டில் இருந்த பொருட்களை கூட தூக்கி சென்று விட்டார்களாம்.. இதை அக்கம் பக்கத்தனர் பார்த்துள்ளனர்.. 

இது தான் இவர்களக்கு பெருத்த அவமானமாக போயிருக்கிறது என்று போலீசார் யூகிக்கிறார்கள்... எனினும் தற்கொலைக் கான முழு விசாரணையும் தீவிரமாக நடந்து வருகிறது.
அடுத்த வாரம் கல்யாணம்... நடு ராத்திரியில் அதிர வைத்த முடிவு ! அடுத்த வாரம் கல்யாணம்... நடு ராத்திரியில் அதிர வைத்த  முடிவு ! Reviewed by Fakrudeen Ali Ahamed on 1/18/2020 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚