தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் !

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் தமிழகம் முழுவதும் 
மனித சங்கிலி போராட்டம்


மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என்றும், இதில் மதசார்பற்ற இயக்கங்கள் பங்கேற்கும் என்றும் அறிவிக்கப் பட்டிருந்தது. 

அதன்படி நேற்று போராட்டம் நடந்தது. சென்னை அண்ணாசாலை சாந்தி தியேட்டர் அருகே நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் க.உதயகுமார், 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், ‘இந்து’ குழுமத்தின் தலைவர் இந்து என்.ராம், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.ஏ.அகமது அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

போராட்டத்தின் போது கே.பால கிருஷ்ணன் கூறுகையில், “மதசார்பின்மை யின் மீது நம்பிக்கை கொண்ட எவரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரிக்க மாட்டார்கள். 
இந்த சட்டத்தின் மூலம் இறையாண்மை க்கு பா.ஜ.க. அரசு துரோகம் செய்திருக்கிறது. இதனை ஏற்க முடியாது என்று தமிழக முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்க வேண்டும். 

தமிழக சட்ட சபையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்”, என்றார்.

இந்து என்.ராம் கூறுகையில், “குடியுரிமை திருத்த சட்டத்தை ஜனநாயக ரீதியிலேயே முறியடிக்க முடியும். தமிழகத்தில் இச்சட்டத்தை எதிர்த்து மக்கள் பெரியளவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

டெல்லியில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசாரும், குண்டர்களும் இணைந்து அடக்கு முறையை கையாண்டது ஏற்க முடியாது. இது பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும்”, என்றார்.

இதே போல அண்ணாசாலை வாலாஜா சாலை சந்திப்பு அருகில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, 


குறளகம் அருகே நடந்த போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் நெல்லை முபாரக், தேசிய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், 

அண்ணா சாலையில் நவாஸ் கனி எம்.பி., இந்திய தேசிய லீக் மாநிலத் தலைவர் முனிருத்தீன் ஷெரீப், எல்.ஐ.சி. அருகே இமாம் மன்சூர் காசிப், காமராஜர் அரங்கம் அருகே 
தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., எஸ்.ஐ.இ.டி. கல்லூரி பஸ் நிலையம் அருகே இஸ்லாமிய பெண்கள் கூட்டமைப்பு தலைவர் பாத்திமா லத்தீப், நந்தனம் அருகில் முன்னாள் துணை வேந்தர் வசந்திதேவி, பி.சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சைதை பனகல் மாளிகை அருகே நடந்த போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் எம்.எல்.ஏ. க.பீமாராவ், ராயபுரம் பாண்டியன் தியேட்டர் அருகில் நடந்த போராட்டத்தில் 

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. உ.பலராமன், தண்டையார் பேட்டை மணிக்கூண்டு அருகே நடந்த போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.கே. மகேந்திரன், தங்கசாலை மணிக்கூண்டு அருகில் முகமது அமீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருவொற்றியூர் தேரடியில் நடந்த போராட்டத்தில் தி.மு.க. கிழக்கு பகுதி செயலாளர் தி.மு.தனியரசு மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

கிண்டி ரெயில் நிலையத்தில் நடந்த போராட்டத்தில் த.மு.மு.க. பொதுச்செயலாளர் ஹாஜாகனி, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொதுசெயலாளர் முகமது சித்தீக் மற்றும் தி.மு.க., 


காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இஸ்லாமிய அமைப்புகள், எஸ்.டி.பி.ஐ., இஸ்லாமிய சுன்னத் ஜமாஅத் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

குரோம் பேட்டையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் பல்லாவரம் தி.மு.க. எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, குரோம் பேட்டை நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மனித சங்கிலி முடிந்த இடமான தாம்பரம் ரெயில் நிலையம் அருகே நடந்த போராட்டத்தில் காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தா.மோ. அன்பரசன் எம்.எல்.ஏ., 

விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுசெயலாளர் வன்னியரசு, மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுசெயலாளர் தாம்பரம் யாக்கூப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags: