ரஜினிக்கு ஆதரவு எச்.ராஜாவா? ராஜாவுக்கு ஆதரவு ரஜினியா?

0
சென்னையில் துக்ளக் இதழுடைய 50 ஆவது வருட விழா நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். 
ரஜினி


பின்னர் துக்ளக் 50 ஆவது ஆண்டு விழாவிற் கான மலரை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், துக்ளக் மலரை முதல் பிரதியாக நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்ட நிலையில், 

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர் களாக பாஜக மூத்த தலைவர் பொன்.இராதா கிருஷ்ணன்,

இல.கணேசன் மற்றும் த.மா.கா கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் ஆகியோர் பங்கேற்றுக் கொண்டனர்.

இவ்விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசிய சமயத்தில், மக்களுக்கு சேவை செய்யும் பணி என்பது தந்தைக்குரிய பதவியாகும். 
இந்த மாபெரும் சேவையினை தொடர்ந்து செய்து வரும் துக்ளக் இதழை சிறப்பாக செயல் படுத்தி குருமூர்த்தி வருகிறார். சோ மிகச்சிறந்த அறிவாளி ஆவார். அறிவாளியை தேர்ந்தெடுக்கவே பத்திரிகை துறை இருந்து வருகிறது.

சோ எடுத்த ஆயுதமே துக்ளக். சோவின் மறைவிற்கு பின்னர் துக்ளக் பத்திரிகை நடத்துவார்கள் என்று யாரும் எதிர் பார்த்து இருக்க மாட்டார்கள். 
எச்.ராஜா


துக்ளக் இதழையும், சோ ராமசாமியையும் பெரிய அளவில் பிரபலமாக்கிய நபர்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் பகத்வத்சலம்.

முரசொலியை பொறுத்த வரையில் முரசொலி என்று கூறினாலே திமுக காரன் என்பார்கள்.

துக்ளக்கை வைத்திருந்தால் அறிவாளி என்று கூறுவார்கள்..

பெரியாரின் தலைமையில் ராமர் மற்றும் சீதாவின் உருவங்கள் நிர்வாணமாக சாலையில் எருது செல்லப்பட்டு ஊர்வலம் நடத்தப் பட்டது. 
இருவரின் சிலைக்கும் செருப்பு மாலையும் போடப்பட்டது என்று பேசினார். இதனை அறிந்த திராவிடர் விடுதலை கழகத்தினர் கண்டனங் களை தெரிவித்து வந்தனர்.

கோயம்புத்தூர் திராவிடர் விடுதலை கலகத்தினை சார்ந்த நேருதாஸ் என்ற நபர், கோயம்புத்தூர் காவல்துறை ஆணையரிடம் மனுவை அளித்துள்ளார். 


இது தொடர்பான மனுவில், ரஜினிகாந்த் பெரியார் குறித்து அவதூறு பரப்பி, பெரியாரின் பேருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் பேசியதாகவும்,

அவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வதாக குறிப்பிடப் பட்டுள்ளது. 

இதனைப் போன்று தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் வழக்குப்பதிவு செயப் பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொது செயலாளர் ஆதரவு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள தாவது, "இந்துக்கள் யுக யுக மாக வழிபட்டு வரும் தெய்வங்களை இழிவாக பேசிவரும் கூட்டத்திற்கு 1971 ல் நடந்த உண்மை சம்பவத்தை கூறினால் கோபம் ஏன் வருகிறது. மிரட்டல் பலிக்காது என்றும்,
ஈ.வெ.ரா வும் திக வரும் ராமபிரான் படத்தினை செருப்பால் அடித்தோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார். 

எனவே துக்ளக் விழாவில் நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் திக, திமுக வின் இந்து விரோத செயல்கள் குறித்து மிகவும் குறைவாகவே கூறியுள்ளார். திகவின் மிரட்டல் பலிக்காது..

1971 ஜனவரியில் சேலத்தில் திக ஊர்வலத்தில் ராமர் படம் அவமதிக்கப் பட்டது மட்டுமல்ல அனைத்து இந்து மத கடவுள்களும் இழிவு படுத்தப் பட்டனர். 


26.1.71 தினமணியில் சேலத்தில் திக ஊர்வலத்தில் இந்து புராணபுருஷர்கள் பற்றி ஆபாசமாக சித்தரிக்கும் அட்டை களை தாங்கிச் சென்றனர் என்கிற செய்தி வந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், திருமாவளவன் தனது செய்தியாளர் களிடையே பேட்டி யளிக்கும் நேரத்தில்,

பெரியார் தொடர்பாக ரஜினி பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பார் என்று நம்புவதாக தெரிவித்து இருந்தார். 

இதனை அறிந்த எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், " ஈ.வெ.ரா தொடர்ந்து இந்து கடவுள் விக்கிரகங் களை உடைப்பது. இந்து கடவுள்கள் பற்றி இழிவாக பேசுவது போன்ற வற்றை வாழ்நாள் முழுவதும் செய்து வந்தவர் தான். 
ஆகவே நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் பேசியதில் எந்த சர்ச்சையும் இல்லை. ஆமா இவர் தனது சரக்கு மிடுக்கு பேச்சுக்கு ஏன் வருத்தம் தெரிவிக்க வில்லை " என்று தெரிவித் துள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)