வில்சன் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி - டி.எஸ்.பி தகவல் !

0
காவல் ஆய்வாளர் வில்சன் கொலைக்கு பயன் படுத்தப்பட்ட துப்பாக்கி கேரளாவில் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.
வில்சன் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி


களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதான அப்துல் ஷமீம், தவ்பீக் ஆகிய இருவரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து தமிழக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நேற்றிரவு இருவரையும் கேரளா அழைத்துச் சென்று விசாரித்த போலீசார், துப்பாக்கி மற்றும் அரிவாள் பதுக்கிய இடம்

மற்றும் கொலை திட்டம் தீட்டிய இடம் மற்றும் அவர்கள் தங்கியிருந்த இடங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். 

மேலும், தவ்பீக்கின் உறவினர்கள், அவர்களுக்கு உதவி செய்தவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப் பட்டது.
இந்நிலையில், கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கி எர்ணாகுளம் நகர பேருந்து நிலையம் அருகே செல்லும் கழிவுநீர் ஓடையில் இருந்து எடுக்கப் பட்டுள்ளதாக போலீசார் தகவல் அளித்துள்ளனர். 


எஸ்.ஐ. வில்சனை கொன்று விட்டு அந்த துப்பாக்கியை யாருக்கும் தெரியாத வகையில் கழிவுநீரில் வீசியது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

வில்சன் கொலைக்கு பயன் படுத்தப்பட்ட கத்தி உள்ளிட்ட ஆயுதங் களை கைப்பற்றவும் போலீசார் முனைப்பு காட்டி வருகின்றனர்.

வில்சன் கொலைக்கு பயன் படுத்தப்பட்ட துப்பாக்கி ராணுவ உபயயோகத்திற்கு மட்டும் பயன்படுத்தக் கூடியது என்று கன்னியாகுமரி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
காவலரை கொன்ற துப்பாக்கி இத்தாலியில் தயாரிக்கப் பட்டது என்றும் ராணுவ உபயயோகத்திற்கு மட்டும் பயன்படுத்தக் கூடிய இவர்களிடம் எப்படி கிடைத்தது என விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)