பினராயி விஜயனைச் சீண்டும் கேரளா ஆளுநர் !

0
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கு முன்பாக என்னிடம் ஆலோசனை செய்திருக்க வேண்டும் என்று கேரளா மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் விமர்சனம் செய்துள்ளார்.
கேரளா ஆளுநர்


மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய கேரளா மாநிலம் ஆளுநர் ஆரிப் முகமது கான், ‘அவர்கள் செய்தது நான் தவறு என்று கூறவில்லை. 

உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வதற்கு அவர்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது. ஆனால், அதற்கு முன்னதாக என்னிடம் உரிய அனுமதி பெறுவது என்பது தான் சரியான செய்முறை.

மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவரான நான், செய்தித் தாள்களின் மூலமே நாடாளுமன் றத்தில் நிறை வேற்றப்பட்ட சட்டத்துக்கு எதிராக மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது என்று தெரிந்து கொண்டேன். 

ஆளுநரின் அனுமதி யில்லாமல் மாநில அரசு இதனை செய்ய முடியுமா என்பது குறித்து நான் ஆய்வு செய்ய வுள்ளேன்’ என்று தெரிவித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)