கொரில்லாவுக்கு கண் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் !





கொரில்லாவுக்கு கண் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
கொரில்லா ஒன்றுக்கு உலக அளவில் கண் அறுவை சிகிச்சை செய்யப் படுவது இதுவே முதல் முறை என்றும் அந்த மருத்துவர்கள் குறிப்பிட் டுள்ளனர்.
கொரில்லாவுக்கு கண் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் !


கொரில்லா ஒன்றுக்கு அமெரிக்க மருத்துவர்கள் கண் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் டெய்கோ வனவிலங்கு பூங்கா ஒன்று உள்ளது.

இந்த வனவிலங்கு பூங்காவில் உள்ள கொரில்லா குரங்கு ஒன்று கண்ணில் புரை ஏற்பட்டு பார்வைக் கோளாறு இருந்துள்ளது. 

இந்தக் கொரில்லாவை சோதித்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை யால் சரி செய்யலாம் என முடிவெடுத்தனர்.
லெஸ்லி என்னும் 3 வயதான இந்தப் பெண் கொரில்லாவுக்கு மருத்துவ மனையில் கண் அறுவை சிகிச்சை தற்போது வெற்றிகரமாக செய்யப் பட்டுள்ளது. 

கொரில்லா ஒன்றுக்கு உலக அளவில் கண் அறுவை சிகிச்சை செய்யப் படுவது இதுவே முதல்முறை என்றும் அந்த மருத்துவர்கள் குறிப்பிட் டுள்ளனர்.
மருத்துவர்கள் கூறுகையில், “மனித கண்கள் மற்றும் கொரில்லா கண்கள் ஆகிய இரண்டுக்கும் இடையே உள்ள
கர்ப்பிணிகளுக்கு வரக்கூடிய பைல்ஸ் பிரச்னை - தீர்வும் தடுக்கும் வழிகளும் !
உடற்கூறாயியல் ஒற்றுமையே எங்களுக்கு இந்த அறுவை சிகிச்சையை எளிதாக வெற்றிகர மாக முடிக்க உதவியது” என்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)