கோவையில் டிரக்கிங் போனவரை கொன்ற யானை - ஷாக் !





கோவையில் டிரக்கிங் போனவரை கொன்ற யானை - ஷாக் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
டிரக்கிங் போய் கொண்டிருந்த புவனேஸ்வரியை, விரட்டி விரட்டி சென்று மிதித்தே கொன்று விட்டது காட்டு யானை... மனைவியின் சடலத்தை கட்டிப் பிடித்து கொண்டு கணவன் அழுதது காண்போரை கண்கலங்க வைத்து விட்டது.
கோவையில் டிரக்கிங்


கோவை மாவட்டம் பெரிய நாயக்கன் பாளையம் அருகே ஒரு வனப்பகுதி உள்ளது.. பாலமலை வனப்பகுதி என்று பெயர்.. பரந்து பிரிந்து காணப்படும் இந்த காட்டு பகுதிக்கு அடிவாரத்தில் குஞ்சூர்பதி என்ற கிராமம் உள்ளது.

இந்த கிராமத்தில் இருந்து மாங்குழி வழியாக ஒருசிலர் பாலமலைக்கு அடிக்கடி வாக்கிங் போவார்கள்... அதாவது மலையேற்றத் தில் ஈடுபடுவார்கள்.. 

ஆனால் இதற்கு வனத்துறை சார்பில் எந்த அனுமதியும் தரப்பட வில்லை.. எனினும் வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காட்டுப் பகுதியில் டிரக்கிங், வாக்கிங்கில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கணவர் பிரசாந்த்

அப்படித் தான் புவனேஸ்வரியும் கிளம்பினார்.. கோவையை சேர்ந்த இவருக்கு 40 வயதாகிறது.. சங்கரா கண் ஆஸ்பத்திரியில் நிர்வாக பிரிவு அதிகாரி... இவரது கணவர் பிரசாந்த், ஒரு இரும்பு கடை வைத்து நடத்துகிறார்.. 

நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், கணவர், நண்பர்களை அழைத்து கொண்டு அவுட்டிங் போகலாம் என்று நினைத்து பாலமலைக்கு காரில் வந்து இறங்கினர்.

டிரக்கிங்
சங்கரா கண் ஆஸ்பத்திரி


மொத்தம் 8 பேர்.. விடிகாலை நேரத்திலேயே இவர்கள் இந்த பகுதிக்கு வந்து விட்டனர்.. காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு, டிரக்கிங் போய் கொண்டிருந்தனர்.. 

அந்த சமயத்தில் தான் ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று அவர்கள் முன்பு திடீரென வந்து நின்றது.. யானையை பார்த்ததும் எல்லோருமே அலறி அடித்து கொண்டு ஆளுக்கு ஒரு பக்கம் சிதறி ஓடினர்.

மிதித்து கொன்றது

அப்படி ஓடும் போது, யானை புவனேஸ்வரியை மட்டும் துரத்திச் சென்றது.. எவ்வளவு தூரம் ஓடியும் யானை யிடமிருந்து மீள முடிய வில்லை.. 

புவனேஸ்வரி யாலும் வேகமாக ஓட முடிய வில்லை.. அதனால் விரட்டி விரட்டி சென்ற யானை, புவனேஸ்வரியை காலாலேயே மிதித்து கொன்று விட்டது.

உருக்குலைந்த உடல்
உருக்குலைந்த உடல்


இதை கண்டு அலறி துடித்தார் கணவர் பிரசாந்த்... தகவலறிந்து வனத்துறை யினர் புவனேஸ்வரி யின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

அவ்வளவு நேரம் தன்னுடன் ஜாலியாக பேசிக் கொண்டு வந்த மனைவி, அடுத்த சில நிமிடங்களில் உருக்குலைந்து உடல் கிடப்பதை கண்டு துடிதுடித்து அழுதார் பிரசாந்த்.

கோரிக்கை

வனத்துறையினர் அனுமதியின்றி இப்படி மலையேறுவதும், வாக்கிங் போவதும் தவறு என்று தெரிந்தும் பொது மக்கள் தொடர்ச்சி யான தவறுகளை செய்வது வருந்தத் தக்கது என்றும், 

ரோந்து பணி சென்று இப்படி மலையேற்றம் செய்பவர் களை தடுத்து நிறுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர் பார்ப்பாக உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)