பூமியின் மிக ஆழமான பகுதி... போட்டு உடைத்த விஞ்ஞானிகள் !

0
பூமியின் மிக ஆழமான நிலப்பரப்பு பகுதி கிழக்கு அண்டார்டிக்கா வில் உள்ள பகுதியில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 
கடல் மட்டத்தி லிருந்து 11,500 அடி ஆழம்
தற்பொழுது கண்டுபிடிக்கப் பட்டுள்ள இந்த பகுதி சுமார் 3.5 கிலோ மீட்டர், அதாவது கடல் மட்டத்தி லிருந்து 11,500 அடி ஆழத்தில் இந்த பகுதி கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

பூமியின் மிக ஆழமான நிலப்பரப்பு பகுதி

பூமியின் மிக ஆழமான நிலப்பரப்பு பகுதியைப் பனிப்பாறை வல்லுநர்கள் அண்டார்டிக்கா வின் பனிக்கட்டிக்கு அடியில் கண்டு பிடித்துள்ளனர். 

கண்டுபிடிக்கப் பட்டுள்ள இந்த நிலத்தின் வரையறை களின் மிகத் துல்லியமான உருவப் படத்தையும் தற்பொழுது அவர்கள் வெளியிட் டுள்ளனர்.

பெட்மெஷின் அண்டார்டிக்கா திட்டம்
பூமியின் மிக ஆழமான நிலப்பரப்பு பகுதி


பெட்மெஷின் அண்டார்டிக்கா திட்டத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் தலைமை யிலான 19 நபர் கொண்ட குழு, பனி தடிமன் தரவைப் பயன்படுத்தி இந்த விரிவான வரைபடத்தை உருவாக்கி யுள்ளனர். 

இது 1967 ஆம் ஆண்டு பயன் படுத்தப்பட்ட ரேடார் ஒலியைக் காட்டிலும் பல மில்லியன் வரி மைல் ரேடார் ஒலிகளை உள்ளடக்கியது என்று தெரிவித்துள்ளனர்.

100 கிலோமீட்டர் நீளம்
100 கிலோமீட்டர் நீளம்
பூமியின் மிக ஆழமான நிலப்பரப்பு பகுதியை என்று கண்டறியப் பட்டுள்ள இந்த பகுதியின் அளவு என்ன வென்று தெரியுமா? 

இந்த பகுதி சுமார் 20 கிலோ மீட்டர் அகலமும், 100 கிலோ மீட்டர் நீளமும் கொண்டதாக உள்ள தென்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

கடல்கள் மற்றும் சமுத்திரங் களில் மட்டும் தான் இது போன்ற ஆழமான பகுதிகள் காணப்படும்.

டெட் ஸி

இதற்கு முன்பு வரையில் நீர்ப்பரப்பை உள்ளடக்கிய பூமியின் ஆழமான இடம் எது என்று கேட்டால், டெட் ஸியின் (Dead Sea) மையப் பகுதிக்கு அருகே உள்ள இடம் சுட்டிக் காட்டப் படுகிறது. 
டெட் ஸி


டெட் ஸியின் மையப் பகுதியில் இருக்கும் இந்த இடம் கடல் மட்டத்தி லிருந்து சுமார் 1355 அடி ஆழத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்த க்கது.

மிகவும் கடினமான பனிக்கட்டி

தற்பொழுது கண்டு பிடிக்கப் பட்டுள்ளாள் இந்த இடம் மிகவும் கடினமான பனிக்கட்டி களாலும் சூழ்ந்துள்ளது. இங்குள்ள பனிக்கட்டிகள் அதிக அடர்த்தி யுடனும் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளார். 
மிகவும் கடினமான பனிக்கட்டி
அதே போல் இந்த பகுதி இருட்டு பிரதேசமாகவும் காட்சி யளிப்பதாக நீண்ட நாள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த அறிவியலாளர் மார்லிகம் தெரிவித் துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)