சிராவயல் மஞ்சுவிரட்டில் தாய், குழந்தைகளை தாக்காமல் சென்ற காளை - சிலிர்ப்பான தருணம் ! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016சிராவயல் மஞ்சுவிரட்டில் தாய், குழந்தைகளை தாக்காமல் சென்ற காளை - சிலிர்ப்பான தருணம் !

Subscribe Via Email

லைக் பண்ணுங்க... "
களத்தில் கடும் கோபமாக வளர்த்தவர் மீதே பாயும் சில காளைகள் மத்தியில், தவறி களத்திற்குள் வந்த ஒரு பெண்ணையும் 
மஞ்சுவிரட்டு


அவர் குழந்தை களையும் தாக்காமல் தாண்டி சென்ற காளையின் வீடியோ தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

பொங்கல் பண்டிகையை யொட்டி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு ஆகிய பாரம்பரிய போட்டிகள் நடை பெறுவது வழக்கம். 

உலக பிரசித்தி பெற்ற அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடந்து முடிந்து பரிசுகளும் அறிவிக்கப் பட்டன.

இந்த நிலையில் இன்று சிவகங்கை மாவட்டம் சிராவயல் பகுதியில் மஞ்சு விரட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது. 
சிங்கத்தின் முன் நடினமாடிய இளம்பெண் !
அப்போது போட்டிக்காக கிண்டு வரப்பட்ட காளை ஒன்று சின்ன யானை வண்டியில் கட்டப் பட்டிருந்த நிலையில் திடீரென அவிழ்த்துக் கொண்டு ஆக்ரோஷமாக ஓட தொடங்கியது. 
குழந்தைகளை தாக்காமல் சென்ற காளை


அப்போது அந்த மைதானத்தில் குழந்தை களுடன் பெண் ஒருவர் தவறுதலாக வந்துள்ளார்.

இந்த நேரத்தில் அவர்களை நோக்கி சீறி பாய்ந்த காளையிடம் தப்பிக்க அந்த பெண் தனது குழந்தைகளை அணைத்துக் கொண்டு கீழே அமர்ந்தார். 

ஒரு வினாடியில் அந்த காளை அவர்களை சிறிதும் உரசாமல் தாவி சென்றது. இந்த வீடியோவை எடுத்த பலரும் சமூக வலைத் தளத்தில் பதிவிட்டனர். 

இதை யடுத்து அந்த வீடியோ லட்சக் கணக்கானோரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
ஆனால், இதில் மற்றொரு உண்மை என்ன வென்றால், மாடு அந்த பெண்ணின் குடும்பத்தை நோக்கி வரும் போது அங்கிருந்தவர்கள் பல ஆங்கிளில் வீடியோ எடுத்துள்ளனர். 

ஆனால் அதில் ஒருவர் கூட அப்பெண்ணை காப்பாற்ற முன் வரவில்லை. மாட்டை வேறு வழியில் செல்ல முயற்சி செய்திருக்க லாம் என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
சிராவயல் மஞ்சுவிரட்டில் தாய், குழந்தைகளை தாக்காமல் சென்ற காளை - சிலிர்ப்பான தருணம் ! சிராவயல் மஞ்சுவிரட்டில் தாய், குழந்தைகளை தாக்காமல் சென்ற காளை - சிலிர்ப்பான தருணம் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on 1/18/2020 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚