கத்தி கட்டி சேவல் சண்டை நடத்தியதாக 10 பேர் கைது !

0
கரூர் மாவட்டம் பூலாம் வலசில், விதிகளை மீறி கத்தி கட்டி சேவல் சண்டை நடத்தியதாக 10 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
கத்தி கட்டி சேவல் சண்டை


கரூர் மாவட்டத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடத்தப்படும் சேவல்கட்டு போட்டி, நூற்றாண்டு பழமை வாய்ந்தது. 

2014-ம் ஆண்டு பந்தயத்தின் போது சேவலின் காலில் கட்டப் பட்டிருந்த கத்தி பட்டு, 2 பேர் உயிரிழந்த தால் போட்டிக்கு தடை விதிக்கப்பட்டது. 

இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் சேவலின் காலில் கத்தி கட்டக்கூடாது, மது, ஊக்க மருந்து கொடுக்கக் கூடாது, 

பயிற்சியாளர் மது அருந்தி இருக்கக் கூடாது என்பது உள்ளிட்ட 10 நிபந்தனை களைகளுடன் அனுமதி தர, கடந்த ஆண்டு முதல் சேவல்கட்டு மீண்டும் தொடங்கியது.

இந்த ஆண்டு 4 நாட்கள் சேவல்கட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, போட்டி நேற்று தொடங்கியது. 

போட்டிக் காக பூலாம்வலசு கிராமத்தில் உள்ள குளத்தில் விரிவான ஏற்பாடுகளை காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் செய்துள்ளன. 


ஆனால், அதிகாரபூர்வ போட்டி நடக்கும் பகுதிக்கு அருகிலேயே எந்த நிபந்தனை களையும் பின்பற்றாமல் சேவலின் காலில் கத்தி கட்டி ஒரு சிலர் போட்டி நடத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இவ்வாறு போட்டி நடத்தப் பட்டதில், சேவலின் காலில் கட்டியிருந்த கத்தி பட்டு 3 பேர் காய மடைந்தனர். 

இது தொடர்பாக வழக்குப் பதிந்த அரவக்குறிச்சி போலீசார், அனுமதி யின்றியும், விதிகளை மீறியும் போட்டி நடத்திய 6 பேரை கைது செய்தனர். 

இதே போன்று வெற்றி நகர் கார்டன் அருகே, போட்டி நடத்திய 4 பேரும் கைது செய்யப் பட்டனர். இவர்களிடம் இருந்து 8 சேவல்கள், கத்தி, பணம் போன்றவை பறிமுதல் செய்யப் பட்டன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)