நான் பேசியது தப்பில்லை... மன்னிப்பு கேட்க முடியாது - ரஜினிகாந்த் !

0
பெரியார் குறித்து தான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது, அந்த கருத்து உண்மைதான் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது பெரிய பரபரப்பாகி உள்ளது. 
பத்திரிக்கை துறை தற்போது சரியாக இல்லை


துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் ரஜினி பெரியார் மற்றும் முரசொலி குறித்து பேசினார்.

அதில், சோ போன்ற பத்திரிக்கை யாளர்கள் தற்போது அதிகம் வேண்டும். பத்திரிக்கை துறை தற்போது சரியாக இல்லை. 

முரசொலி வைத்திருந்தால் அவரை திமுககாரர் என்று சொல்லி விடலாம், கையில் துக்ளக் வைத்திருந்தால் அவரை அறிவாளி என்று சொல்லி விடலாம்.

பெரியார் எப்படி

பெரியாரை கடுமையாக விமர்சித்தவர் சோ. இந்துக் கடவுளுக்கு எதிராக பெரியார் பேரணி செய்தார். இந்து கடவுள்களை பெரியார் விமர்சித்ததை பற்றி யாருமே எழுதவில்லை. 
ஆனால் சோ மட்டும் தைரியமாக துக்ளக்கில் எழுதினார். அப்போதைய முதல்வர் கருணாநிதி அதை கடுமையாக எதிர்த்தார். இதனால் துக்ளக் பத்திரிக்கை நாடு முழுக்க பிரபலம் அடைந்தது, என்று ரஜினி குறிப்பிட்டார்.

ரஜினி எப்படி
மன்னிப்பு கேட்க முடியாது


நடிகர் ரஜினியின் கருத்துக்கு எதிராக இணையத்தில் பலரும் விமர்சனம் வைத்து வருகிறார்கள்.

இணையத்தில் இதனால் ரஜினி கடுமையான விமர்சனங் களை சந்தித்து வருகிறார். 

திராவிட விடுதலை கழகம், பெரியார் திராவிட கழகம் உட்பட அமைப்புகள் ரஜினி மீது போலீசில் புகார் அளித்துள்ளது.

விளக்கம் அளித்தார்

இந்த நிலையில் ரஜினிகாந்த் சென்னையில் பேட்டி அளித்து விளக்கம் கொடுத்தார். அதில், துக்ளக் விழாவில் நான் பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாகி வருகிறது. 
பெரியார் பற்றி நான் சொன்னதற்கு மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள். சாரி. பெரியார் குறித்த கருத்துக்கு நான் மன்னிப்பு கேட்க முடியாது.பெரியார் குறித்து நான் பேசியது தவறானது கிடையாது.

நான் சொன்னது உண்மை

நான் இல்லாததை சொல்லவில்லை.இதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. நான் கேள்விப் பட்டதை, படித்ததை தான் நான் சொல்கிறேன். 2017ல் அவுட்லுக் பத்திரிக்கை யில் வந்ததை தான் நான் பேசினேன்.

பெரியார் பேரணி
நான் பேசியது தப்பில்லை


1971ல் நடந்த பெரியார் பேரணி குறித்து நான் கற்பனையாக பேசவில்லை. ராமர் படத்திற்கு செருப்பு மாலை அணிந்தது உண்மை தான். நான் சொன்னது தவறு கிடையாது, தெளிவாக அதை நான் விளக்கி விட்டேன்.

நான் பார்த்தது

நான் பார்த்ததை நான் சொல்கிறேன், அவர்களை பார்த்ததை அவர்கள் சொல்கிறார்கள். இதை இனியும் பெரிது படுத்த கூடாது. 
இதை மறுக்க வேண்டிய சம்பவம் கிடையாது, மறக்க வேண்டிய சம்பவம், என்று ரஜினிகாந்த் தனது பெட்டியில் குறிப்பிட் டுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)