மாதவிடாய் காலங்களில் விடுப்பு இல்லை - மத்திய அமைச்சர் !

0
மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு திட்டம் தற்போது இந்தியாவில் இல்லை என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
மாதவிடாய் காலங்களில் விடுப்பு இல்லை


மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, தமிழக எம்.பிக்கள் தமிழச்சி தங்க பாண்டியனும், ஜோதி மணியும் மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் உடல் அளவிலும் 

மனதளவிலும் பல பிரச்னைகளை சந்திப்பதால் அவர்களுக்கு அது போன்ற நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப் படுமா என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ஸ்மிருதி ஈரானி, அரசு மற்றும் தனியார் துறைகளில் மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவ தற்கான திட்டம் இதுவரையில் இல்லை.

மாதவிடாய் என்பது குறிப்பிட்ட வயதில் பெண்களுக்கு நடைபெறும் இயல்பான ஒன்றுதான். நாடு முழுவதும் 50 லட்சம் பெண்களுக்கு, 

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கருப்பை புற்றுநோய் பரிசோதனை செய்திருப்ப தாகவும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)