கண் கட்டி வித்தையில் பங்க் ஊழியர்கள்... உறைய வைக்கும் மோசடி ! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

கண் கட்டி வித்தையில் பங்க் ஊழியர்கள்... உறைய வைக்கும் மோசடி !

Subscribe Via Email

லைக் பண்ணுங்க... "
பெட்ரோல் பங்க் ஊழியர்களின் மற்றொரு மோசடி ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது எப்படி நடக்கிறது? என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சி யமடைய கூடும். 
கண் கட்டி வித்தையில் பங்க் ஊழியர்கள்


இந்தியாவில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் பல்வேறு விதமான முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன.

எரிபொருளில் கலப்படம் செய்வது, வாகன ஓட்டிகள் கொடுத்த பணத்தை காட்டிலும் குறைவான தொகைக்கு எரிபொருள் நிரப்புவது உள்ளிட்ட மோசடிகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம். 

பெட்ரோல் பங்க் உரிமை யாளர்களும், அதன் ஊழியர்களும் இதுபோல் பல்வேறு வழிகளில் முறைகேடு களை செய்கின்றனர்.

ஆனால் வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் உறைய வைக்கும் மற்றொரு மோசடி ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கில் இளைஞர் ஒருவர் பெட்ரோல் பங்க்கிற்கு சென்றுள்ளார். அப்போது அவரிடம் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் நூதன முறையில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

தான் ஏமாற்றப் பட்டதை அறியாமல், அந்த இளைஞரும் பெட்ரோல் பங்க்கில் இருந்து சென்று விட்டார். ஆனால் அவர் அணிந்திருந்த ஹெல்மெட்டில் கேமரா பொருத்தப் பட்டிருந்தது. 

பெட்ரோல் பங்க்கில் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தும் இந்த கேமராவில் பதிவாகி யிருந்தன. அந்த வீடியோவை பார்த்த போது தான் அந்த இளைஞருக்கே தான் எவ்வாறு ஏமாற்றப் பட்டோம்? என்பது தெரிய வந்தது.

நடந்தது என்னவென்று தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைய கூடும். ஆனால் நீங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை பெட்ரோல் பங்க்கில் இருக்கும் ஒரு சில மோசடி பேர் வழிகளிடம் இழந்து விடாமல் இருக்க இந்த செய்தி உங்களுக்கு உதவும் என நாங்கள் நம்புகிறோம். 

பெட்ரோல் பங்க்கில் என்ன நடந்தது? என்பதை இனி விரிவாக பார்க்கலாம்.
பெட்ரோல் பங்க்கில் என்ன நடந்தது?


சம்பவத்தன்று அந்த இளைஞர் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கில் பெட்ரோல் பங்க்கிற்கு சென்றுள்ளார்.

பின்னர் அங்கிருந்த பெட்ரோல் நிரப்பும் ஊழியரிடம் 50 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்புமாறு கூறியுள்ளார். 

சிறிது நேரத்திற்கு பின்னர்தான் அந்த ஊழியர், பைக்கில் பெட்ரோலை நிரப்பினார். அதன் பின் பணம் வசூலிக்கும் மற்றொரு ஊழியர் அங்கு வந்தார்.

அவரிடம் அந்த இளைஞர் 500 ரூபாய் நோட்டை கொடுத்தார். அப்போது பணம் வசூலிக்கும் ஊழியர், ''காலை நேரத்தில் அனைத்தும் 500 ரூபாய் நோட்டு களாகவே வருகிறது'' என்ற ரீதியில் பேசினார். 

இதற்கு அந்த இளைஞர், ''என்ன செய்வது? இது ஞாயிற்று கிழமை. ஏடிஎம் இயந்திரத்தில் என்ன நோட்டு இருக்கிறதோ அதைதான் நான் எடுக்க முடியும்'' என்கிற ரீதியில் பதில் அளித்தார்.

இதன்பின் பணம் வசூலிக்கும் ஊழியர் தான் கையில் வைத்திருந்த மொத்த பணத்தையும், பெட்ரோலை நிரப்பிய ஊழியரிடமே கொடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார். 

இதன் பின்பு தான் மோசடி அரங்கேற தொடங்கியது. ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கில் வந்த இளைஞர் 500 ரூபாய் நோட்டை கொடுத்து விட்டு 50 ரூபாய்க்கு எரிபொருள் நிரப்பி யிருந்தார்.

அவருக்கு மீதி 450 ரூபாய் கொடுக்கப்பட வேண்டும். இப்போது எரிபொருள் நிரப்பிய ஊழியரிடம் ஏராளமான நோட்டுகள் கத்தையாக இருந்தன. 
உறைய வைக்கும் பங்க் மோசடி


எனவே மீதி பணத்தை கொடுப்பதற் காக அவர் தன்னிடம் இருந்த நோட்டுகளை எண்ணினார்.

முதலில் ஒரு 50 ரூபாய் நோட்டை அந்த இளைஞரிடம் அவர் கொடுத்து விட்டார். 

இதன் பின்பு நான்கு 100 ரூபாய் நோட்டுகளை அவர் எண்ணினார்.

முதலில் ஒரு முறை எண்ணிய பிறகு, அந்த இளைஞர் முன்பாக மீண்டும் ஒரு முறை அவர் எண்ணினார். 

2 முறை எண்ணிய காரணத்தால், அந்த இளைஞரும் பணம் சரியாக தான் இருக்கிறது என தனக்கு தானே நினைத்து கொண்டார். 

ஆனால் அந்த இளைஞரிடம் மீதி நான்கு 100 ரூபாய் நோட்டு களையும் பெட்ரோல் பங்க் ஊழியர் ஒப்படைத்தாரா? என்றால், இல்லை என்பது தான் பதில்.

நான்கு 100 ரூபாய் நோட்டுகளை அந்த இளைஞரிடம் கொடுக்கும் போது, அதில் ஒரு நோட்டை பெட்ரோல் பங்க் ஊழியர் லாவகமாக தன்னிடமே வைத்து கொண்டார். 

இதனை அந்த இளைஞர் உணரவில்லை. கண்ணிமை க்கும் நேரத்தில் அந்த பெட்ரோல் பங்க் ஊழியர் அவ்வளவு சாமர்த்திய மாக முறைகேட்டில் ஈடுபட்டார்.

இதன்பின் பணம் சரியாக இருக்கிறதா? என எண்ணி பார்க்க மாலேயே அந்த இளைஞரும் பணத்தை பர்சுக்குள் வைத்து கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். 

இந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம். கிட்டத்தட்ட கண் கட்டி வித்தை போல உள்ள இந்த மோசடியை மேலோட்ட மாக பார்த்தால் பார்ப்பவர் களுக்கு எதுவும் தெரியாது என்பதற்காக,

இந்த வீடியோ மெதுவாக ஓடும்படி எடிட் செய்யப் பட்டுள்ளது.

இது போல் நீங்களும் கூட பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் ஏமாந்திருக் கலாம்.

அது உங்களுக்கு தெரியாமலேயே போயிருந்தப் பதற்கான வாய்ப்புகள் உள்ளன. பொதுவாக நாம் பெட்ரோல் பங்க்கிற்கு அவசர அவசரமாகவே செல்கிறோம்.

எனவே மீதி பணத்தை எண்ணி பார்க்காமலேயே பர்சுக்குள் வைத்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டு விடுகிறோம்.

இதனை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பயன்படுத்தி கொள்கின்றனர். எனவே பெட்ரோல் பங்க்குகளில் மீதி பணத்தை வாங்கிய பிறகு ஒரு முறைக்கு இரு முறை நன்றாக எண்ணி பாருங்கள்.

அதன் பின்பு அங்கிருந்து புறப்படுங்கள். நீங்கள் கொஞ்சம் அஜாக்கிரதை யாக இருந்தால் கூட உங்கள் பணம் மோசடி செய்யப்படுவதை தடுக்க முடியாது.
கண்ணிமைக்கும் நேரத்தில்
இது போன்ற மோசடிகளில் இருந்து தப்பிக்க டிஜிட்டல் பரிவர்த்தனை முறைகளையும் கூட நீங்கள் கையாளலாம். ஆனால் அதிலும் கூட நீங்கள் மிகவும் கவனமாக இருப்பது தான் நல்லது. 

இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள். அத்துடன் இது போன்ற மோசடிகளில் இருந்து தப்பிக்க உங்களிடம் ஏதேனும் ஐடியாக்கள் இருந்தால் அதனையும் தெரியப் படுத்துங்கள்.
கண் கட்டி வித்தையில் பங்க் ஊழியர்கள்... உறைய வைக்கும் மோசடி ! கண் கட்டி வித்தையில் பங்க் ஊழியர்கள்... உறைய வைக்கும் மோசடி ! Reviewed by Fakrudeen Ali Ahamed on 12/07/2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚