தஞ்சையில் எகிப்து வெங்காயத்தை வாங்க மறுத்த மக்கள் !





தஞ்சையில் எகிப்து வெங்காயத்தை வாங்க மறுத்த மக்கள் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
வெங்காய தட்டுப்பாட்டை போக்க எகிப்பது வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக் காக அனைத்து பகுதிகளு க்கும் கொண்டு வரப்பட்டது.
தஞ்சையில் வெங்காயத்தை வாங்க மறுத்த மக்கள்


இந்நிலையில் தஞ்சை காமராஜர் மார்க்கெட்டிற்கு விற்பனைக் காக வந்த எகிப்து வெங்காயம் கருஞ்சிவப்பு நிறத்தில் இருந்ததால் வியாபாரிகள் வெங்காயத்தை வாங்க தயக்கம் காட்டினர்.

இதனால் தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் மொத்த காய்கறி விற்பனையாளர் சிதம்பரம் என்பவர் மட்டும் 1 டன் மட்டுமே எகிப்து வெங்காயத்தை விற்பனைக்காக வாங்கி வைத்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியதாவது:

தற்போது நிலவி வரும் வெங்காய தட்டுப்பாட்டை போக்க எகிப்து நாட்டிலிருந்து மத்திய அரசு வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ளது. 

எகிப்து நாட்டிலிருந்து வெங்காயம் வரவழைக்கப்பட்டு அது கண்டெய்னர் மூலம் பல்வேறு மாவட்டங்களு க்கு அனுப்பி வைக்கப் படுகிறது. 

இந்த வெங்காயம் அறுவடை செய்யப் பட்டதில் இருந்து காய்கறி கடைக்கு விற்பனைக்கு வருவதற்கு குறைந்தது 10 முதல் 15 நாட்கள் வரை ஆகிறது.

இதனால் வெங்காயம் கருமை நிறத்தில் காணப்படு கிறது. எனவே ரூ.100க்கு விற்கப்படும் இந்த வெங்காயத்தை வாங்க பொது மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். 

மேலும் ஒரு கிலோவு க்கு 2 வெங்காயமே கிடைப்பதால் அதனை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். 


அதே நேரத்தில் உள்ளூர் வெங்காயம் கூடுதல் விலைக்கு விற்றாலும் அதனையே வாங்க இல்லத்தரசிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார். அதே நேரத்தில் தஞ்சையில் மொத்த காய்கறி மார்க்கெட்டில் வெங்காயம் கிலோ 170 முதல் 180 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

ஆனால் தரை கடை மற்றும் தள்ளு வண்டிக் கடைகளில் வெங்காயம் கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப் படுவதால் வெங்காயத்தின் தரத்தின் மீது பொதுமக்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை வண்டிக்கார கபீர் தெருவைச் சேர்ந்தவர் சேகர் (வயது45). 

இவர் மொத்த காய்கறி கடையின் பின்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் நேற்று இரவு 60 கிலோ வெங்காயத்தை திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)