திறந்தவெளி மலம் ரேஷன் அட்டை கதம் - கிராம பஞ்சாயத்து

0
தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக திறந்தவெளியை கழிப்பிடமாக பயன் படுத்துவதை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ள பப ட்டு வருகிறது. 
திறந்தவெளி மலம்  ரேஷன்

இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புற வீடுகளில் கழிவறைகள் கட்டிக் கொடுக்கப் படுகின்றன. மேலும் பல்வேறு வழிகளில் விழிப்புணர் வும் ஏற்படுத் தப்பட்டு வருகிறது. 

இருப்பினும் திறந்தவெளி கழிப்பிடங்கள் முற்றிலும் ஒழிந்த பாடாக இ்ல்லை.

திறந்தவெளியில் மலம் கழிக்கும் சுகாதாரமற்ற பழக்கத்தை ஒழிக்க மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஜரன்டி என்ற கிராம பஞ்சாயத்து அதிரடி நடவடிக்கையை கையில் எடுத்து உள்ளது.

இதன்படி யாராவது திறந்த வெளியில் மலம் கழிப்பது கண்டறியப் பட்டால் அந்த குடும்பத்தின் ரேஷன் அட்டையை ரத்து செய்யவும்,

திறந்த வெளியில் மலம் கழிப்பவர் களை புகைப்படம் எடுத்து அனுப்பு பவர்களுக்கு வரி சலுகை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. கிராமசபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
கிராம பஞ்சாயத்து

இது பற்றி ஜரன்டி பஞ்சாயத்து தலைவர் சமாதன் தாயடே கூறுகையில், “ஜரன்டி பஞ்சாயத்துக் குட்பட்ட பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள. 

அனைவரது வீட்டிலும் போதிய தண்ணீர் வசதியுடன் கழிவறைகள் உள்ளது. ஆனாலும் பலர் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன் படுத்துவதில் தான் ஆர்வமாக இருக்கிறார்கள்.

குறிப்பாக சாலையோர பகுதிகள் அதிகளவில் திறந்தவெளி கழிப்பிடமாக பயன் படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தான் சுகாதாரமற்ற பழக்கத்தை கடைப்பிடிப்ப வர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது’’ என்றார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)