பட்டதாரி வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

0
வெளிநாடு களில் தடை செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் இந்தியாவை சேர்ந்த வாலிபர்கள் சிலர் தொடர்பு வைத்திருந்தது சில மாதங்களுக்கு முன்பு கண்டு பிடிக்கப் பட்டது.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு

இது தொடர்பாக துபாயில் இந்திய வாலிபர்கள் சிலர் கைது செய்யப் பட்டனர். 

அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படை யில் சென்னை, கோவை, திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் சில இளைஞர் களை கைது செய்த போலீசார் 

அவர்கள் வீட்டில் சோதனை நடத்தி, லேப்டாப், மெமரி கார்டுகள், சிம்கார்டுகள் ஆகிய வற்றை கைப்பற்றினர்.

கடந்த அக்டோபர் மாதம் திருச்சி அருகே உள்ள இனாம் குளத்தூரில் சாகுல் என்ற வாலிபர் வீட்டில் என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு பிரிவு) அதிகாரிகள் 3 பேர் சோதனை நடத்தி சில ஆவணங் களை கைப்பற்றினர்.
என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

இந்நிலையில் இன்று காலை என்.ஐ.ஏ. அதிகாரிகள் திருச்சி எடமலைப்பட்டி புதூர் சீனிவாச நகர் விரிவாக்க பகுதியில் ஒரு வீட்டில் அதிரடியாக புகுந்தனர். 

சர்புதீன் (வயது 30) என்பவர் நாளை வெளிநாட்டிற்கு செல்ல இருந்த நிலையில் இன்று சோதனை நடந்தது.

டிப்ளமோ பட்டதாரியான சர்புதீனின் பெற்றோர் வீடு திருச்சி பாலக்கரையில் உள்ளது. அவரது தந்தை அப்துல் சமது பாலக்கரையில் வசித்து வருகிறார். 

சர்புதீன் எடமலைப் பட்டிபுதூர் சீனிவாச நகரில் மனைவி குடும்பத்துடன் வசித்து வந்தார். துபாய்க்கு நாளை செல்ல திட்டமிட்டு இருந்தார்.

இந்த நிலையில் தான் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை செய்தனர். சாதனையின் போது வீட்டில் இருந்தவர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப் படவில்லை. 
பட்டதாரி வீட்டில் சோதனை

அதே போன்று வெளியில் இருந்தும் வீட்டிற்குள் யாரும் அனுமதிக்கப் படவில்லை.

வீட்டில் இருந்து கம்ப்யூட்டர்கள், செல்போன்கள் ஆகிய வற்றை கைப்பற்றி விசாரணை நடத்தினர். 

பாஸ்போர்ட், விசா, வெளிநாடு சென்று வந்த விவரம், இமெயில் விவரங்கள் ஆகிய வற்றை திரட்டினர்.

திருச்சியில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய தாக ஏற்கனவே இனாம் குளத்தூரில் 

ஒரு வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் இன்று மீண்டும் எடமலைப்பட்டி புதூரில் சோதனை நடந்தது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)