பெண்கள் பாதுகாப்புக்கு சாதிச் சாயம் பூசக் கூடாது மத்திய அமைச்சர் !

0
பெண்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளு க்கு சாதி வர்ணம் பூசக் கூடாது என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித் துள்ளார்.
பெண்கள் பாதுகாப்புக்கு சாதிச் சாயம்


உத்தர பிரதேசத்தின் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளம் பெண்ணின் காதலர் அவளை மணம் முடிப்பதாக கூறி உடல் ரீதியாக பயன்படுத்தி யுள்ளார். 

ஆனால் திருமணம் செய்ய மறுத்ததுடன் அந்த பெண்ணை தனது நண்பனின் பாலியல் விருப்பத்தி ற்கும் உடன்பட கட்டாயப் படுத்தியுள்ளார். 

இது தொடர்பாக பெண் புகார் அளித்ததன் அடிப்படையில் அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த வழக்கில் ஆஜராவதற்கு அவர் சென்றபோது அவரை வழிமறித்து மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தினர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியது. 

இந்தச் சம்பவம் தொடர்பாக நாடாளு மன்றத்தில் காங்கிரஸ் உறுபினர்கள் கேள்வி எழுப்பினர்.

அது குறித்துப் பேசிய ஸ்மிருதி இராணி, ’பெண்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைக ளுக்கு சாதி வர்ணம் பூசக்கூடாது என்றும் 


பாலியல் வல்லுறவு சம்பவங்கள் மேற்கு வங்கத்தில் அரசி்யல் ஆயுதமாக பயன்படுத்தப் படுவதாகவும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டி யுள்ளார்.

அயோத்தி கோவில் குறித்தும் உன்னாவ் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் குறித்தும் காங்கிரஸ் கட்சித் விமர்சித்த தற்கு ஸ்மிருதி இரானி இவ்வாறு பதில் அளித்தார்.

வேறு (உன்னாவ்) விவகாரத்தை பேசும்போது அயோத்தி (கோவில்) பற்றி பேசுவதா? மேற்கு வங்கத்தில் மால்டாவில் என்ன நடந்தது (பாலியல் வல்லுறவு) என்பதை மட்டும் இங்கு காங்கிரஸ் பேசவில்லை. 

அங்கு பாலியல் வல்லுறவு சம்பவங்கள், அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப் படுகிறது. இங்கு பேச வந்து விட்டீர்கள்’ என்று காட்டமாக தெரிவித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)