ஆஸ்திரேலிய ஓபன் தொடரை தவறவிட்ட ஆன்டி !

0
இடுப்பு வலியால் பாதிக்கப் பட்டுள்ள ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே, ஜனவரியில் அதற்கென அறுவை சிகிச்சை மேற்கொள்ள வுள்ளதால், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் அவர் பங்கேற்க மாட்டார் என்று தெரிவித் துள்ளார். 
இடுப்பு வலி


ஆன்டி முர்ரேவிற்கு நடக்கவுள்ள அறுவை சிகிச்சையை அடுத்து ஆஸ்திரேலிய ஓபன்

மற்றும் ஏடிபி கோப்பை போட்டிகளில் அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே, ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் தான் பங்கேற்காதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள முர்ரே,

ஆயினும் தான் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் கண்டிப்பாக பங்கேற்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் 

பிரிட்டன் டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே, லண்டன் மற்றும் ரியோவில் நடைபெற்ற அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றவர். 

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் 3 கோப்பைகளை அவர் கைப்பற்றி யுள்ளார். 

இடுப்பில் காயத்தால் அவதி 

கடந்த மாதத்தில் பிரிட்டனில் நடைபெற்ற டேவிஸ் கோப்பையில் பங்கேற்று விளையாடிய ஆன்டி முர்ரேவிற்கு இடுப்பில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடுமையான அவதிக்குள்ளானார். 

ஆஸ்திரேலிய ஓபன் 'மிஸ்' 

இந்நிலையில் இடுப்புப் பகுதியில் ஆன்டி முர்ரேவிற்கு ஜனவரியில் அறுவை சிகிச்சை செய்யப் படவுள்ளதால் அவர் அடுத்த மாதம் 20ம் தேதி முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை நடைபெறவு ள்ள 
ஆஸ்திரேலிய தொடரை தவறவிட்ட ஆன்டி


ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் ஜனவரி 3ம் தேதி துவங்கவுள்ள ஏடிபி கோப்பை போன்ற போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

ஜனவரியில் ஓய்வு அறிவிப்பு 

முன்னதாக காயம் காரணமாக வலியால் தவித்த ஆன்டி முர்ரே, கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் தொடருக்கு பிறகு

டென்னிசில் இருந்து ஓய்வு எடுக்க உள்ளதாக அறிவித்திருந்தார். ஆயினும் தொடர்ந்து விளையாடினார். 

நம்பிக்கை தெரிவித்த முர்ரே 

இந்நிலையில் ஜனவரி மாதத்தில் தன்னுடைய இடுப்புப் பகுதியில் செய்யப்பட உள்ள அறுவை சிகிச்சையை தொடர்ந்து 

மெல்போர்னில் நடைபெற வுள்ள கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் தான் பங்கேற்பேன் என்று முர்ரே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)