வெளிநாடு கடத்தப்படும் ஆமைகள் !

0
இலங்கைய லிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று திருச்சி வந்தது இதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். 
வெளிநாடு கடத்தப்படும் ஆமைகள்

அப்போது ராமநாத புரத்தைச் சேர்ந்த 2 பயணிகள் தாங்கள் எடுத்து வந்த உடமைகளில் ஆமைகளை மறைத்து எடுத்து வந்ததை கண்டறிந்தனர். 

இதனைத் தொடர்ந்து அவர்களி மிருந்து ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டு வனத்துறை யிடம் ஒப்படைக்கும் முயற்சியில் சுங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட் டுள்ளனர். 

இது குறித்து வெளிநாட்டில் இருந்து ஆமைகளை கடத்தி வந்த இரு பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருந்துகள், உணவு உள்ளிட்ட பல்வேறு தயாரிப்பு களுக்காக ஆமை இனங்கள் கடத்தப் படுகின்றன. சில வீடுகளில் ஆமைகள் செல்லப் பிராணி களாகவும் வளர்க்கப் படுகின்றன. 

சர்வதேச சந்தையில் ஆமைகள் நல்ல விலை போவதால் ஆமை இனங்களின் கடத்தல் வணிகம் அதிகரித்துள்ளது. 

திருச்சி விமான நிலையத்தில் தொடர்ச்சி யாக தங்கம் கடத்தம்ப்படும் நிலையில் தற்போது ஆமைகள் அதிகமாக கடத்தப்பட்டு வருது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)