ஹைதராபாத் அருகே 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து !

0
ஹைதராபாத் அருகே கச்சிகுடா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த விரைவு ரயில் மீது, அதே தண்டவாளத்தில் வந்த புறநகர் ரயில் நேருக்கு நேர் மோதி விபத்துக் குள்ளானதில் ரயிலின் ஓட்டுநர் உட்பட 12 பேர் காய மடைந்தனர்.
2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து


தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள கச்சிகுடா ரயில் நிலையத்தில், கர்னூலில் இருந்து செகந்திரபாத் நோக்கி சென்று கொண்டிருந்த ஹூண்ட்ரி விரைவு ரயில் நின்று கொண்டிருந்தது. 

அப்போது திடீரென அதே தண்டவாளத்தில் எதிரே வந்த புறநகர் பயணிகள் ரயில், அங்கு நின்று கொண்டிருந்த விரைவு ரயில் மீது மோதியது.

இந்த விபத்தில் புறநகர் ரயிலின் எஞ்சின் ஓட்டுநர் உட்பட 12 பேர் காயமடைந்தனர். காய மடைந்தவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவ மனைகளில் அனுமதிக்கப் பட்டனர். 

இரண்டு ரயில்களின் எஞ்சின் களுக்கு இடையே சிக்கிக் கொண்ட புறநகர் ரயிலின் ஓட்டுநர், நீண்ட போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டு, ஹைதராபாத் உஸ்மானியா மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்.

ரயில் நிலையத்தில் விரைவு ரயில் நின்று கொண்டிருந்த தண்டவாளத்தில், பயணிக்க புறநகர் ரயிலுக்கு தவறாக சிக்னல் கொடுக்கப் பட்டதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. 
ரயில்கள் மோதி விபத்து


இதற்கு மனித தவறு காரணமா அல்லது சிக்னலில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதா என விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே எதிரே ரயில் நின்று கொண்டிருப்பதை பார்த்த புறநகர் ரயிலின் ஓட்டுநர், ரயிலின் வேகத்தை குறைத்த தாகவும், அதன் காரணமாகவே பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப் பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி யுள்ளன. 

இந்த விபத்தினால் அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, ரயில்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன. சில ரயில்கள் வேறு வழியில் திருப்பி விடப் பட்டுள்ளன. 

விபத்தில் சேதமடைந்துள்ள ரயில் பெட்டிகளை அகற்றும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)