காங்கிரஸ் அழிவதற்கான நேரம் இது - ஆம் ஆத்மி கோபம் !

0
மராட்டிய சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணி அமைத்து போட்டி யிட்டன. இதில், 105 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதும், 
காங்கிரஸ் அழிவதற்கான நேரம் இது


சிவசேனாவின் பிடிவாதம் காரணமாக, பாஜகவால் ஆட்சி யமைக்க இயலாமல் போனது.

இதனால், கால் நூற்றாண்டு காலம் நீடித்த, பாஜக- சிவசேனா கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.

பா.ஜ.க.வுடன் முரண்பட்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரசின் ஆதரவுடன் ஆட்சி யமைக்க முயற்சி செய்து வருகிறது. 

சிவசேனா வுக்கு ஆதரவு அளிக்க தேசியவாத காங்கிரஸ் ஒப்புக் கொண்ட நிலையில், காங்கிரஸ் ஆதரவு அளிக்க தயக்கம் காட்டி வருகிறது. 


அதனை யடுத்து, மராட்டிய மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு கவர்னர் பரிந்துரை செய்துள்ளார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகி பிரீத்தி சர்மா மேனன்,

‘காங்கிரஸ் கட்சியின் தலைமை அவர்களுடைய கட்சியை தேசத்தை விட முன்னதாக நிறுத்துகிறது. 

மக்களவைத் தேர்தலின் போது மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதை பிடிவாதமாக மறுத்து பா.ஜ.க. வெற்றிபெற உதவியது.


தற்போது, மராட்டியாவை பா.ஜ.க.வுக்கு அளித்து வருகிறார்கள். அவர்களுடைய பிடிவாதம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் அது அழியும். 

மராட்டியத் திலுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சரத்பவாருடன் இணைய வேண்டும். இது காங்கிரஸ் அழிவதற் கான நேரம்’ என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)