தொற்றினால் ஏற்படும், குளிர் காய்ச்சல் - ப்ளூ அறிகுறிகள் என்ன? - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

தொற்றினால் ஏற்படும், குளிர் காய்ச்சல் - ப்ளூ அறிகுறிகள் என்ன?

Subscribe Via Email

லைக் பண்ணுங்க... "
ஜலதோஷம், மூக்கடைப்போடு காய்ச்சல் வந்தால், அது பெரும்பாலும் டெங்கு காய்ச்சலாக இருக்காது.
தொற்றினால் ஏற்படும், குளிர் காய்ச்சல்

டெங்கு தொற்றால் காய்ச்சல் வந்தால், வேறு எந்த அறிகுறியும் இல்லாமல், வெறும் காய்ச்சல் மட்டுமே இருக்கும்.

'ஸ்வைன் ப்ளூ' என்று சொல்லப்படும், பன்றிக் காய்ச்சல் உட்பட எந்த ப்ளூ காய்ச்சலாக இருந்தாலும், ஜலதோஷத்துடன் காய்ச்சல் வரும். உடல் வலி அதிகமாக இருக்கும்.

சிக்குன் குனியா பாதிப்பு வந்தால், மூட்டுக்களில் தீவிர வலி இருக்கும். தரையில் அமர்ந்தால், எந்த ஆதாரம் இல்லாமல், எழுந்திருக்க முடியாது. 

காரணம், முதுகில் உள்ள தசைகளில் பிடிப்பு இருக்கும். இதற்கெல்லாம் முக்கிய காரணம், கொசு.

எந்த நிலையில் மருத்துவ உதவி தேவை?
ப்ளூ அறிகுறிகள் என்ன?

உடலின் வெப்பத்தை வைத்து, இத்தனை டிகிரிக்கு மேல் இருந்தால், உடனே டாக்டரிடம் வர வேண்டும் என்று சொல்ல முடியாது. சாதாரணமாக, 99 டிகிரி பார்னஹீ ட்டிற்கு கீழ் இருந்தால், கவலைப்பட வேண்டிய தில்லை. 

ஆனால், சிலருக்கு காய்ச்சல் வெளியில் தெரியாமலும், சிக்குன் குனியா பாதிப்பு உள்ளது.தொற்று பரவும் காலங்களில் பாதிப்பு வந்தால், மூன்று, ஐந்து நாட்கள் காத்திருப்பது நல்லதல்ல; 

அதிகபட்சம் இரண்டு நாட்களில், மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். குழந்தைகள் விஷயத்தில், மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஸ்வைன் ப்ளூ தடுப்பூசி பாதுகாப்பானதா?
தொற்றினால் ஏற்படும் ப்ளூ
இந்த காய்ச்சலுக்கு, நல்ல தடுப்பு மருந்து உள்ளது. ஒரு

டோஸ், 1,300 ரூபாய் என்பதால், எல்லாராலும் போட முடிவதில்லை. தடுப்பு மருந்தை, இரு டோஸ் போட வேண்டும். 

தொற்று பரவ துவங்கும் முன், ஆகஸ்ட் மாதத்தில் போட வேண்டும். ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தை என்றால், முதல் தடுப்பு ஆறு மாதங்களில் போட்டு, அடுத்ததை ஒரு வயதில் போட வேண்டும்.

ஒரு வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும், ஆண்டிற்கு ஒருமுறை போட்டால், பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சலை தடுக்கலாம்.

டெங்குவிற்கு, தடுப்பு ஊசி கிடையாது. கொசுக் கடிக்காமல் பார்த்துக் கொள்வது ஒன்றே பாதுகாப்பு.

ஆண்டுதோறும் தடுப்பூசி அவசியமா?
மரபணுவில் மாற்றம்

டுப்பூசி போட, வயது வித்தியாசம் கிடையாது. 12 வயதிற்குட்பட்ட குழந்தை களுக்கு தனி மருந்தும், அதற்கு மேல் வேறு அளவிலும், மருந்து தர வேண்டும். 

கிருமிகளின் மரபணுவில் லேசான மாற்றம், ஆண்டு தோறும் நடக்கிறது. இதனால், இந்த ஆண்டு போட்ட தடுப்பூசியால்,

அடுத்த ஆண்டு பலன் இல்லாமல் போகலாம் என்பதால், இந்த முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டி யுள்ளது. 

நடைமுறையில் இருக்கும் மருந்துகள், வைரஸ் தொற்றுக்கு நல்ல பலன் தரக் கூடியவை யாக உள்ளன.

ப்ளூ மாத்திரை ளால் பக்க விளைவுகள் உள்ளதா?

ஸ்வைன் ப்ளூவில், ஏ, பி, சி என்று மூன்று வகைகள் உள்ளன. இதில், பொதுவாக பாதிப்பது, 'பி' வகை. மூன்று தொற்றுகள் பாதிப்பிலும், அறிகுறிகள் ஒரே மாதிரியாகவே இருக்கும். 

இதில், 'ஏ' வகை தான் ஆபத்தானது. பி, சியும் ஆபத்தில்லாத. தொற்றுக்கு தரப்படும், 'டேமி ப்ளூ' மாத்திரை, கிருமிகளை நம் செல்களுக்குள் போக விடாமல் தடுக்கிறது. 

எனவே, இதை புளூ பாதித்து, 48 மணி நேரத்திற்குள் தர வேண்டும். அதன்பின் தருவதால், பலன் கிடையாது. அனைத்து செல்களுக் குள்ளும் கிருமி போய் விட்டால், மாத்திரை வேலை செய்யாது.
டேமி புளூ மாத்திரை

இந்த மாத்திரையால், வாந்தி, அயர்ச்சி, வயிற்றுப் போக்கு போன்ற பக்க விளைவுகள் அதிகமாக இருக்கும்.'ஏ' வகை, உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால், டேமி புளூ மாத்திரையை கொடுத்தே ஆக வேண்டும். 

பக்க விளைவு களை விடவும், உயிரை காப்பது முக்கியம். பி, சி பாதிப்பு என்றால், மருத்துவக் கண்காணிப்பில் இருந்தால் போதும். தானாகவே நோய் தொற்று சரியாகி விடும்.

டேமி ப்ளூ மாத்திரையை, குழந்தைகள், பெரியவர்கள் என, அனைவருக்கும் தரலாம். வயது, உயரம், எடையைப் பொறுத்து, மருந்தின் அளவு மாறுபடும். 

எனவே, டாக்டரின் ஆலோசனை இல்லாமல், மாத்திரையை சாப்பிடக் கூடாது.

டாக்டர் த. ஜெகதீசன், குழந்தைகள் நல மருத்தவர், சென்னை
044 - 2852 5759
தொற்றினால் ஏற்படும், குளிர் காய்ச்சல் - ப்ளூ அறிகுறிகள் என்ன? தொற்றினால் ஏற்படும், குளிர் காய்ச்சல் - ப்ளூ அறிகுறிகள் என்ன? Reviewed by Fakrudeen Ali Ahamed on 11/30/2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚